செவ்வாய், 13 மார்ச், 2012

படுகொலைக்கு துணை போனவர்களின் புலம்பல்!

இவர்களை நினைத்துதான் வள்ளுவன்  பாடி இருப்பான் போலும்!
''வாளைப் போல் வெளிப்படையாய் இருக்கும் பகைவர்க்கு பயப்பட வேண்டியதில்லை.ஆனால் உறவினரைப் போல் இருந்து சொந்தம் கொண்டாடி உட்பகை கொண்டவனின் தொடர்புக்கு பயப்படு '' என்கிறான்.

ஈழத் தமிழர் படுகொலைகளுக்குக் காரணமாக இருந்தவர்கள் ,துணை போனவர்கள்,சதியாளர்கள் இன்று மத்திய அரசைப்பார்த்து அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவு கொடு என சொல்வது பச்சைத் துரோகம் இல்லையா?

சிங்கள இனவெறியர்களுக்கு ஆயுதம் கொடுத்து,ஆலோசனை சொல்லி உதவிய  காங்கிரஸ் கட்சியின்  ஆட்சியை , தடவிக் கொடுத்து பதவிகளை இன்று வரை காப்பாற்றி கொண்டிருக்கும் திமுக எந்த உரிமையில் அமரிக்க தீர்மானத்திற்கு ஆதரவு தர  சொல்கிறது?
மத்திய அரசின் கையில் இன்னமும் ஈழத் தமிழனின் பச்சை ரத்தம் !
காயவில்லை!
இப்போது கூட மத்திய அரசில் இருந்து வெளியேற மனமில்லையே?
 மாவீரன் பிரபாகரனின் சின்ன மகன் ,செல்ல மகன் சுட்டுக் கொல்லப் பட்ட படத்தைப் பார்த்து பொய்யாக கண்ணீர் வடிக்கிறார்கள்.
தோட்டாக்களை கொடுத்து குறி பார்க்க உதவியவர்களே இப்போது இரங்கற்பா  பாடுகிறார்கள்.கேவலம்!

பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பது ஒரு நாடகம் என்பது உண்மையான தமிழர்க்கு தெரியும்.

உண்ணாவிரத நாடகம் நடத்தி போர் முடிந்து விட்டது என்று நா கூசாமல் பொய் சொன்னவர்களை இன்னமும் நாடு நம்பினால் ஏழேழு தலைமுறைக்கும் பாவம்!

ஈழத்தில் படுகொலை செய்யப் பட்டவர்கள் விடுதலைப் புலிகள் மட்டுமில்லை. அப்பாவி மக்களும்தான்!

தமிழ்நாட்டில் காங்கிரசுக்கும்,திமுகவுக்கும் ஆதரவு கொடுப்பது தூக்கில் தொங்குவதற்கு சமம்! அவர்களின் பொய்யுரையில் மயங்கிநாட்டை  கெடுத்தது போதும்.

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...