வியாழன், 15 மார்ச், 2012

அன்புமணியின் கனவுப் பிரதேசம்.

கை இரண்டையும் தலைக்கு அணைவாகக் கொடுத்து மல்லாக்க படுத்தபடி  கற்பனையில் பறக்கிற சுகம் இருக்கே அதிலும் படுத்துக் கொண்டே அட்டினக்கால் போட்டுக் கொண்டால் நாமே ராஜா!நாமே மந்திரி !

அத்தகைய கனவில் இருக்கிறார் பழைய மந்திரி அன்புமணி.

கனவு காண்பது அவரது உரிமை!

அந்த கனவில் அவர்  இங்கிலாந்து நாட்டின் இளவரசராக இருக்கலாம்.அது தவறில்லையே! கனவு காணும் குணம் மனிதனுக்கு மட்டுமே உண்டு.

''திமுக முடிந்துபோன கட்சி.அதிமுக திரும்ப வராது.காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது.கம்யூனிஸ்டுகள் பற்றி சொல்ல தேவையே இல்லை.விஜயகாந்த் தள்ளாடி வருவார்.''என்று நாட்டு நடப்பை உள்ளது உள்ளபடி உண்மையை சொல்லி இருக்கிறார்.!!! எவ்வளவு துல்லியமாக ஆராய்ச்சி பண்ணி இருக்கிறார்!பலே வெள்ளையத் தேவா!

இவரது சொந்த கட்சியான பா.ம.க.தமிழகத்தில் ஆலமரமாக கிளைகள் விட்டு விழுதுகளை வேர்களாக மாற்றி பரந்து நிற்பது உலகம் அறிந்த உண்மை.இதனால்தான் கேவலம் இடைத்தேர்தலில் நின்று மூச்சை உடைக்க வேண்டாம் என்று பொதுத் தேர்தலுக்காக காத்திருக்கிறார்கள்!

ஏனென்றால் அடுத்து ஆட்சி அமைக்கப் போகிறவர்கள் அவர்கள்தான்.சங்கரன்கோவிலில் வென்று வீரத்தைக் காட்டுகிற அளவுக்கு எதிரிகள் பலசாலிகளாக இல்லை என்கிறபோது எதற்காக வேட்பாளரை நிறுத்தவேண்டும்?

கருணாநிதி பா.ம.க.வுக்கு ரகசிய தூது விட்டு திமுகவை மட்டும் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளும்படி சொல்லி இருக்கிறாராம்!எப்பேர்பட்ட ஜாம்பவான் ,அவரே கியுவில் நிற்கிற போது மற்ற துண்டு துக்கடா பொட்டல கட்சிகளைப் பற்றி கவலை படுவானேன்? பொரிகடலை கட்சிகள்!

ஆக தமிழ் மக்களே அடுத்த முதல்வர் அன்புமணி ராமதாஸ்தான்!

கனவு காணுங்கள் தலைவரே!

அதோ போலீஸ் அதிகாரிகளும் ஐ.பி.எஸ்.அதிகாரிகளும் பூங்கொத்துகளுடன்  வாசலில் நிற்பது தெரிகிறதா!

''அட்டென்ஷன்....! சல்யூட் ...!''


/

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...