சனி, 31 மார்ச், 2012

சென்னை மக்களின் வயிறில் அக்னி !

சென்னை முழுவதும் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டங்கள் என காதுகளை பிளக்கிறார்கள்.
ஆனால் மக்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை.குண்டும் குழியுமான சாலைகளில் பல்லாங்குழி ஆடியபடியே எல்லா வாகனங்களிலும் செல்ல வேண்டியதாக இருக்கிறது.இன்னும் சாலைகளை சீரமைத்த பாடாக இல்லை.பணக்காரர்களும்,அதிகாரிகளும் வாழ்கின்ற ஏரியாக்களில் மட்டுமே  சாலைகள் பளபளக் கின்றன!ஏன் அந்த வசதி நமக்கு கிடைக்கவில்லை என்கிற சிந்தனை இல்லாமல் வயிறில் அக்னி வளர்க்கிறார்கள்.
இப்பவே குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் வாட வேண்டியதாக இருக்கிறது.போகப் போக மக்கள் நாறிப் போவார்கள் போலிருக்கிறது.மாநகராட்சி உறுப்பினர்களிடம் சொன்னாலும் பலன் இல்லை.மேயரும் கண்டு கொள்வதில்லை.பேஸ்புக்கில் சொல்லியும் நோ பலன்!
திமுகவினர் மக்களை நோகாமல் சுரண்டிக் கொழுத்தார் கள் .
மக்களை நோகடித்து அதிமுகவினர் கொழுக்கிறார்கள்.
அதிமுக --திமுக இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் இவைதான்!
மக்கள் கஷ்டப்படுகிறார்கள்.அவதிப் படுகிறார்கள்.சரியான நிவாரணம் கிடைக்கவில்லை என்பது எதிர் கட்சிகளுக்கு தெரியும்.
ஆனால் அவர்கள் கண்டன அறிக்கைகள் ,தீர்மானங்கள் ,உண்ணாவிரதம் என  ஒப்பெற்றிவிட்டுப் போவதில்தான் கவனம் செலுத்துகிறார்கள்.
காரணம்.?
அண்மையில் பொது தேர்தல் வரப போவதில்லை.
கடுமையான போராட்டங்களை நடத்தி கைதாகினால் நாளாவட்டத்தில் அதை மறந்து விடுவார்கள்.அரசியல் ரீதியான பலன் எதுவும் இல்லை என்பதால்  எந்த அரசியல் கட்சியும் காலத்தில் இறங்கப் போவதில்லை.
இதற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது.கஷ்டங்களுக்கு மக்கள் பழகிப் போவார்கள்!வாடி வதங்கி நாறினாலும் நாளைக்கு எந்த கட்சி ஓட்டுக்கு அதிக துட்டு வெட்டுமோ அந்த கட்சிக்குத்தான் வோட்டுப் போடுவார்கள்.
ஆக பட்டினி சாவுகளே நடந்தாலும் மக்கள் கிளர்ந்து எழப்போவதில்லை.அப்படியே எழுந்தாலும் இருக்கவே இருக்கிறது காவல் துறை!
ஆக பொதுத தேர்தல் நெருங்கும்  போதுதான் எதிர்கட்சிகளுக்கு சொரணை பிறக்கும்.
இப்போது மக்கள் படும் கஷ்டங்கள் விஜயகாந்துக்கு தெரியாதா?ராமதாசுக்கு தெரியாதா?கம்யூ.கட்சிகளுக்கு தெரியாதா?
இளைய சமுதாயம் எழுந்தால் ஒழிய மக்களுக்கு நல் வாழ்க்கை இல்லை!

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...