இவளும் பெண்தான் ...ஆனால்?
கோவிலுக்கு சென்றேன் ,பிரதோஷம் என்பதற்காக !
நந்தியின் முன்பாக கூட்டம் அதிகம்.அவரவர் குறைகளை நந்தியின்
காதில் சொல்லிப் போனார்கள்.
அவர் கேட்டு அதை சிவனாரிடம் சொல்வார் என்பது ஆத்திகர்களின் நம்பிக்கை
!
நான் ஆத்திகன் அல்லன்,ஆனாலும் ஆலயம் செல்வது அமைதியை
தருகிறது,ஒரு வித நிறைவைத் தருகிறது.பலவிதமான ஆண்களையும் ,பெண்களையும்
பார்க்கிறபோது ,அவர்களின் ஆடை அணிகலன்களை ரசிக்கமுடிகிறது.வணங்கும் முறைகளில்தான் எத்தனை விதம்!சிலர் வாய் விட்டு
சொல்கிறார்கள்,பலர் கண்ணீர் வழிய வணங்குகிறார்கள்.இன்னும் சிலர் கை கூப்பி வணங்கி அப்படியே
தலைக்கு கொண்டு போகும் போது எவ்வளவு சாமர்த்தியமாக பக்கத்தில் நிற்கும் பெண்கள் மீது
முழங்கையினால் இடிக்கிறார்கள்!
பக்தி பரவசம் என்பது இதுதானோ !
‘சவுக்கியமா சார்,இதிலெல்லாம் நம்பிக்கை உண்டா?’’
பக்கமாக வந்து நின்ற பெண் கேட்டாள்.அவளை அதற்கு முன்னர்
நான் பார்த்ததில்லை.என்னிடம் நலம் விசாரிக்கிறாள்! திரையுலகப் பெண்ணாக
இருக்கலாம்.எங்கே சந்தித்தேன் என்பது நினைவில் இல்லை.இப்படி நினைத்துக் கொண்டுதான்
அவளுடன் பேசத்தொடங்கினேன்.
‘’நல்லா
இருக்கேன்,நீங்க?’’
‘’ஏதோ இருக்கேன் சார்! பேசிக்கிட்டே நடக்கலாமே!’’என்ற அவளின் பின்னால் என்னையும் அறியாமல்
நடந்தேன்.அவள் அழகாக இருந்தாள்!அகலக் கழுத்து ஜாக்கெட் .கொஸ்டின் பேப்பர்
அவுட்.!கருப்பு பிராவின் பட்டை வெளியில் தெரிந்தது.!
சொல்லலாமா ,தப்பாக நினைக்கமாட்டாளா சரி நமக்கென்ன என நடையை
தொடர்ந்தபோது ‘’என்ன சார் ஏதோ
யோசிக்கிறீங்க போலிருக்கு ?’’எனக் கேட்டுவிட்டாள்..சிலவினாடி
தயக்கம் அவளுக்கு தெரிந்து விட்டது.
‘’ஒண்ணுமில்லை ...உங்க
ஜாக்கெட்டை கரெக்ட் பண்ணிக்கிங்க.தப்பா தெரியுது’’
‘’ஓ.......! இதுக்கா யோசிச்சீங்க ,சொல்லலாமே ‘’என சிரிக்க நானும் சேர்ந்து கொண்டேன். கபாலீஸ்வரர் கோவில்
சுப்ரமணிய சாமி சந்நிதி அருகில் இருக்கும் மண்டபத்தில் உட்கார்ந்தோம்.அவள் இவ்வளவு
நெருக்கம் காட்டுகிற போது நாம் ஏன் தயங்க வேண்டும்?
நான் ஒன்றும் அவ்வளவு அழகு இல்லை.தலைக்கு மருதாணி பூசி
செம்பட்டையாக இருக்கிறது.ஏதோ வெள்ளையும்
சொள்ளையுமா டிரெஸ்! அறிமுகம் இல்லாமல் என்னுடன் வலிய வந்து பேசுவதால் அவள்
கண்டிப்பாக ‘’அப்படிப்
பட்டவளாகத்தான்’’ இருக்க
முடியும்.இருக்கட்டும் டைம் பாஸ்! அமைதியை நாடி கோவிலுக்கு வந்தவனுக்கு இப்படி ஒரு
வாய்ப்பு!
‘’என்ன பண்றீங்க?’’என்றேன்.
‘’அரசாங்க வேலை!’’
‘’உங்க டிரஸ் சென்ஸ்
சூப்பர்.!’’
‘’அப்படியா ,தாங்க்ஸ்!’’என சிரிக்கிறாள் .’’வெள்ளை ஜாக்கெட் போடும்போது கருப்பு ப்ரா
போடக்கூடாதுன்னு சிலர் சொல்றாங்க.நீங்களோ லைக் பண்றீங்க!ரசனை வித்தியாசப் படுது!வித்தியாசமான
மனுஷங்க!’’மறுபடியும் கலகல
சிரிப்பு.
‘’புரியல!யாரை
சொல்றீங்க?’’
‘’என் பாய் பிரண்டுக்கு
இதான் பிடிக்கிது!அவர் சொன்னார்னுதான் இந்த மாதிரி வந்தேன்.என்னவோ தெரியல.இன்னும்
வரல .கோவில்ல தனியா நின்னா தப்பா
பார்பபாங்கனுதான் உங்களிடம் பேசினேன்.நீங்க ரொம்பவும் அப்பாவிங்கிறது
தெரியுது.’’என்று மீண்டும்
சிரித்தவள் அவசரமாக எழுந்தாள்!
‘’தாங்க்ஸ் !அவர்
வந்திட்டார்!’’
கோவில் பக்தியை மட்டும் வளர்க்கவில்லை.காதலையும்
வளர்க்கிறது.
கோவிலின் அருமையும் பெருமையும்!