நான் சென்னை வந்து தேவி வார இதழில் பணியாற்றிய நேரம்.
அப்போது தலைவர் எம்.ஜி.ஆரால் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக செல்வி.ஜெயலலிதா நியமிக்கப் பட்டிருந்தார்.
''அவரின் கேள்வி-பதில் பகுதி இருந்தால் பத்திரிகையின் சர்குலேசன் உயரும் அவரிடம் கேட்டுப் பாருங்கள் '' என்று ஆசிரியர் சொன்னார்.பொறுப்பாசிரியராக இருந்த நண்பர் ஜேம்ஸ் அவர்களும் உற்சாகப் படுத்தினார்.அப்போது நான் சினிமா மட்டும் இல்லாமல் அரசியல் தலைவர்களையும் பேட்டி கண்டு பதிவு செய்து வந்தேன்.
தொலை பேசியில் தொடர்பு கொண்டு ஆசிரியரின் விருப்பத்தை சொன்னேன்.
செல்வியார் போயஸ் தோட்டத்துக்கு வர சொன்னார் .
''ஒவ்வொரு வாரமும் எங்களின் வாசகர்களுக்கு பதில் சொன்னால் சிறப்பு சேர்ப்பதாக இருக்கும் '' என்று சொன்னேன்.
அவரும் ஒப்புக் கொண்டார்.
எட்டு வாரங்கள் கேள்வி-பதில் பகுதி சூடாகவும் சுவையாகவும் சென்றது!
மக்களின் ஆதரவு பெருமளவு இருந்தது.பத்திரிகையின் விற்பனையும் கணிசமாக உயர்ந்தது.
திடீர் என ஒரு நாள் ஜேப்பியார் நடத்தி வந்த இதழில் வலம்புரி ஜான் ஒரு கட்டுரை எழுதி இருந்தார்.
''கழக விரோத இதழில் கொள்கை பரப்பு செயலாளர் கேள்வி பதில் அளிக்கலாமா?'' என கேட்டிருந்தார்.
தேவி வார இதழ் திமுக சார்பு பத்திரிகை என கருதப்பட்ட காலம் அது!
ஏழு வாரங்களை கடந்த நிலையில் அந்த கண்டனக் கட்டுரை வந்ததும் உடனடியாக என்னை தோட்டத்துக்கு வரும்படி செல்வியார் சொல்ல நானும் சென்றேன்.
சிரித்தபடியே ''இந்த வாரத்துடன் கேள்விபதில் பகுதியை நிறுத்திக் கொள்கிறேன்.வருத்தமில்லையே ''எனக் கேட்டார்.
அதை எதிர்பார்த்து சென்றதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லாது போயிற்று.!
சக்தி வாய்ந்த சிலரால் ஜான் அப்படி எழுதும்படி நிர்பந்திக்கப் பட்டிருக்கலாம் என்பது மட்டும் தெரிந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக