ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

நடிகர் ராஜேஷின் ''சீதை'' ஆராய்ச்சி!

நடிகர் ராஜேஷ் எதையும் நுனிப் புல் மேய்கிறவர் அல்லர்.ஆணி வேர் வரை சென்று ஆதாரப் புள்ளி எங்கிருக்கிறது என்பதை கண்டு பிடிக்கும் வரை விட மாட்டார்.
இன்று காலையில் தொலை பேசியில் அழைத்தார்.அவருடன் பேசி மாதங்கள் பல கடந்த நிலையில் அவர் அழைத்ததுமே புரிந்து கொண்டேன்.''ஏதோ சிக்கியிருக்கிறது.''என்பதை.
''என்ன சார் சொல்லுங்க?'' என்றேன்.
ஷீரடி பாபா கோவிலுக்குப் போனேன்'' என்றார்.அவர் கிறித்தவர்.
அடுத்து நான் என்ன கேட்பேன் என்பதை உணர்ந்தவராக ''இது ஆன்மீகப் பயணம் அல்ல ஆய்வுப் பயணம்''என்றார்.''மிகப் பெரிய புத்தகம் எழுதுகிற அளவுக்கு நிறைய விஷயங்களை திரட்டி வந்திருக்கிறேன்'' என்றார்.
''என்ன திடீர் பயணம் ,வேறு காரணங்கள் உண்டா?''என்றேன்.
''தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக பல இடங்களுக்கு சென்று வந்திருக்கிறேன் உங்களிடம் பகிர்ந்து கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கிறது .சீதையைப் பற்றி கம்பன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்பதற்கான ஆதாரங்களை கொண்டு வந்திருக்கிறேன்''என்று ஆர்வத்தை தூண்டிவிட்டார்.
''கம்பன் என்ன சொன்னான்?''
''அவளின் இடை,உயரம பற்றி சொல்லி இருக்கிறானே ,அது உண்மைதான் என்பதற்கான ஆதாரம் தான் என்னிடம் இருக்கிறது''என்று விவரத்தை வெளிப்படுத்தாமலேயே சஸ்பென்ஸ் வைத்து சொன்னார்.
''அடுத்து அன்னா ஹசாரே ஊருக்கும் போனேன்.அங்கெ இருக்கிற எல்லோருமே அவரைப் போலவே இருக்கிறார்கள்.அவரைப் பற்றிய விவரங்களையும் அள்ளிக் கொண்டு வந்திருக்கிறேன் .வாருங்கள் .நிறைய பேச வேண்டியதிருக்கிறது''என்று தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்.
நமக்கு ஆர்வம அலை அடித்துக் கொண்டு இருக்கிறது.கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...