செவ்வாய், 24 ஏப்ரல், 2012

ஏடாகூட இடங்களில் பச்சை குத்தும் நடிகைகள்!

ஒரு காலத்தில் ,ஒரு காலத்தில் என்ன, ஐம்பது வருஷங்களுக்கு முன்னாடி நம்ம மக்கள் கை,கால்களில் பச்சை குத்திக் கொள்வார்கள்.கட்டைவிரலின்  மேல் பக்கமாக தேள் பச்சை குத்திக் கொள்வார்கள்.புஜங்களில் கணுக்கால்களில்,நெற்றியில் என குத்துவது பழக்கம்.பெண்கள் கோலப் பச்சை  குத்துவது வழக்கம்.சிலர் அழகம்மா என குத்தி இருப்பார்கள்.அதாவது கணவன் பெயர் அழகர என்று இருக்கும் .அதனால் அவரின் பெயரை சொல்ல மாட்டார்கள்.புருசன் பெயர் என்ன என்று யாராவது கேட்டால் கையை காட்டி விளக்குவார்கள். 
அந்த காலம் மலை ஏறிவிட்டது. 
'' ராசு இங்க வாயேன்!'' என்று கணவன் ராஜேந்திரனை சுருக்கி கூப்பிடும் காலம்  இது!
அந்த காலத்துப் பெண்கள் பச்சை குத்திக் கொள்வதற்கு வேடிக்கையான காரணம் சொல்வார்கள்.இறந்த பின்னர் மேலோகம் போனால் அங்கிருப்பவர்கள் ''என்ன கொண்டு வந்தே?''என கேட்பார்களாம் .அதற்கு பச்சை கொண்டு வந்தோம் என்று சொல்வார்களாம்.
இந்த காலத்திலும் சாவு வீட்டுக்கு வரும் நெருங்கிய உறவுகள் பச்சை கொண்டு வருவது வழக்கம்.இந்த பச்சை உடலில் இருக்கும் பச்சை இல்லை.தானியம் ,சேலை முதலியன!
பச்சை குத்துவது அநாகரீகம் என சொல்லப் பட்டது மேல்தட்டு மக்களால்!
இன்று அவர்கள்தான் 'டாட்டூஸ்''குத்திக் கொள்கிறார்கள்.பலர் வரைந்து கொள்கிறார்கள்.
அதுவும் எக்கச்சக்கமான இடங்களில்!
முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் சுஷ்மிதா சென் தனது இடுப்புக்கு கீழ்,வலது,இடது மணிக்கட்டுகள்,வலது கை என பச்சை குத்தி இருக்கிறார்.
முன்னாள் லவ்வர் ரன்பீருடன் நடிகை தீபிகா 'டேட்டிங்''போனதின் நினைவாக பின் கழுத்தில் ஆர்கே என ஆங்கில எழுத்துகளை டாட்டூஸ் பண்ணி இருந்தார்.
நடிகர் ஹிருத்திக் ரோஷன் தனது மனைவியின் பெயரை இடது கை மணிக்கட்டில் குத்தி இருந்தார்.
ஆரவ என மகனின் பெயரை தனது முதுகில் குத்தி இருக்கிறார் அக்ஷய் குமார்.
மந்திராபேடி இடுப்புக்கு கீழே..
திரிஷா மார்பகத்தின் மேல் பகுதியில்!
நயன்தாரா மாஜி காதலனாகி விட்ட பிரபு தேவாவின்  பெயரை!
ஆக''பச்ச குத்தலியோ பச்சை' என குறத்தியர் வீதிகளை வந்து வீடுகளில் குத்தியது அந்த காலம்,அழகு நிலையங்கள் சென்று ஏக்க சக்கமான இடங்களில் குத்திக் கொள்வது இந்தக் காலம்.

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...