வெள்ளி, 27 ஏப்ரல், 2012

வைகையை காணோம்!

சித்திரைத் திருவிழா .மதுரைப் பெரு நகரின் மாண்புமிகு மக்கள் விழா.
சித்திரை முழு நிலவு ..முகத்திரை விலக்கி நிலம் நோக்க மக்கள் கூட்டம் நகரை முற்றுகை இட்டிருப்பது தெரிகிறது!
வங்கக் கடல் இடம் பெயர்ந்து வந்து விட்டதா?
மக்கள்சுனாமி மதுரையை வளைத்து விட்டதா?
நிலவு முகம் திருப்புகிறது!
வற்றாத வைகையில் வறட்சி!அணைக்கட்டின் உதவியால் ஓடையாக ஓடுகிறது.அந்த சுந்தரேசப் பெம்மானே வந்து ''வை ....கை ..என்றாலும் வெள்ளம கரை புரளப் போவதில்லை.
நதியில் மணலைக் காணோம்!ஆங்காங்கே கோரைப் புற்களும் புதர்களும்!
வறட்சி வைகையில் மட்டுமில்லை.மக்கள் வாழ்க்கையிலும்தான்!
வறுமை மறந்து ,துயர் மறைத்து வந்திருக்கிறார்கள்.
திருவிளையாடல் நடத்திய சுந்தரேசப் பெருமானுக்கும் ,மீனாட்சிக்கும் திருமணம்.
சுந்தரேசனின் மைத்துனர் அழகர் வந்திருக்கிறார்.
திருப்பரங்குன்றத்தில் இருந்து சுப்பிரமணியர் வந்திருக்கிறார்.
தேர்களில் திருவீதி உலா!கூடி இழுப்போம்.
கள்ளழகர் வைகை கரையோரம் இறங்கி,கரையோரமாகவே வண்டியூர் போய் திரும்புகிறார்.அவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு போகலாம்.
இதன் பின்னராவது நமக்கு ஒரு வழி கிடைக்காதா?
வறுமை போகாதா?
நம்பிக்கைதானே வாழ்க்கை!

முன்னொரு காலத்தில் வரிசையில் வரும் கூட்டுவண்டிகளில் உப்புக் கண்டம் சரம் சரமாய் காய்ந்தபடியே தொங்கும்.
கள்ளழகரின் பெருமைகளைப் பாடியபடியே வருவார்கள்.அவர்கள் எந்த வித்துவான்களிடமும் கற்றதில்லை.கேட்க சுகமாக இருக்கும்.
''கோவிந்தோ..கோவிந்தோ ..என தோல்பையில் இருக்கும் நீரை பீச்சியபடி  வருவார்கள். கோடை வெயிலுக்கு இதமாக இருக்கும். 
இப்போதும் பீச்சுகிறார்கள்.இளம் பெண்களை,குறி வைத்து!
ஆற்றுமணலில் வட்டமாக குடும்பங்கள்.புளி சோறு.சுண்டல்.உப்புக் கண்டம் .
சொல்லில் அடங்காத சுகம்.சொந்த பந்தங்கள் அமர்ந்து பவுர்ணமி நிலவில் நனையும் சுகம் இனி ஒரு போதும் கிடைக்கப் போவதில்லை.
இன்னும் பத்து வருடங்களில் வைகை ஆறு காணாமல் போய் விடும்.ஒரு சிற்றோடை ஓடிக கொண்டிருக்கும் ,அதற்கு யாரோ ஒரு தலைவனின் பெயர் அல்லது தலைவியின் பெயர்.
''நீ தமிழனா?''
''அப்படி யாரும் எங்க குடும்பத்தில் இல்லைங்க?''
இப்படி சொல்லக் கூடிய நாள் நெருங்குகிறது !!!!!!

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...