திங்கள், 30 ஏப்ரல், 2012

''எத்தனை 'செல்'உடைத்த காதல்?''--பிரசன்னா!

காதல் என்றால் கஷ்டம்,நஷ்டம் இல்லாத காதலா?
எதிர்ப்பு இல்லை என்றால் 'வெற்றி'என்ற சொல்லுக்கு இடமேது?
''இல்லை''என மறுப்பதும் ,பின்னர் ''ஆம்'' என ஒப்புக் கொள்வதும் மனித இயல்பு.பிரசன்னாவின் காதலும் மறுப்பு க்கு பின்னர் வெளிவந்துவிட்ட காதல் கல்யாண செய்திதான்!
காதலர்கள் ஒன்றாக வந்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
''பத்திரிகைகளில் வருவதற்கு முன்னரே ஒன்றரை வருஷமா ஓடிட்டுஇருந்தது .பத்திரிகையாளர்கள் கேட்டபோது கூட அதை மறுத்து சொல்லிவந்தேன்.இரண்டு குடும்பங்களும் இணக்கமான முடிவுக்கு வரும் வரை   
காத்திருக்க வேண்டும் என்பதினால்தான் அப்படி ஒரு மறுப்பு.!''என்றார் பிரசன்னா.
''யார் முதலில் காதலை சொன்னீர்கள்?''
''அதுதான் இன்று வரை தெரியவில்லை''
''பரிசுகள் பரிமாறிக் கொள்வதுண்டா?''
''உண்டு!அந்த கலர் புடைவை நல்லாருக்குல்ல என்றால் நாம்ப புரிஞ்சுகணும். வாங்கி கொடுத்தா சந்தோசப் படுவாங்க!அவங்களும் வாட்சு வாங்கி கொடுத்திருக்காங்க.பரிசுகள் நிறைய! கல்யாணம் முதலில் நாயுடு முறையில் நடக்கும்.பிறகு எங்களின் பிராமண முறைப்படி நடக்கும் இரண்டு தடவை நான் தாலி கட்டுவேன் .ஸ்ட்ராங்கா இருக்கும்!''
''காதலர்கள் போனில் பேசுவது..?''
''செல்லில் பேசிக் கொள்வோம்.''
''சூடு தாங்காமல் செல் வெடித்தது உண்டா?''
'' உடைந்து போனது நிறைய!எல்லாம் ஊடல்தான்.ஊடல் இல்லாமல் காதலா? ஏதோ இனம் புரியாத கோபத்தில் தூக்கி வீசி உடை பட்டிருக்கின்றன.''என்றார் பிரசன்னா.

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...