பாராளுமன்ற மேலவையில் நடிகையரை நியமித்திருக்கிறார்கள்.
இவர்கள் நியமன உறுப்பினர்கள்
.ஆளும் கட்சி யாரை விரும்புகிறதோ அவர்களை நியமித்துக் கொள்ளும்.
.இங்கு கட்சி மாச்சரியங்களுக்கு இடமில்லை.
ஆனால் அடிக்கடி ரகளைகள் நடக்கும்.
மேஜை மீது ஏறி நின்று காகிதங்களை வீசுவார்கள்.கூச்சல் போடுவார்கள்.
என்னவோ இவர்கள்தான் ஜனநாயகத்தை பாதுகாக்க வந்த ரட்சகர்களை போல் பேசுவார்கள்.
இதெல்லாம் சரி ,இத்தகைய சபையில் நடிகையரை நியமிப்பது ஏன்?நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது ஏன்?
அவர்களால் என்ன பயன்?ஜனநாயகம் பற்றி படங்களில் பேசி இருப்பார்கள்.தீண்டாமையை பற்றி படங்களில் போராடி இருப்பார்கள்.
நிஜத்தில்....?
நடிகை ரேகா அமருகிற இடம் அருகே தனக்கு இடம் ஒதுக்கக் கூடாது என்கிறார் ஜெயா பச்சன்.
ஏனாம்?
ஒன்ஸ் அப் ஆன் எ டைம் அமிதாப்பச்சனுடன் நெருக்கமாக 'நடித்தவராம்'
அதனால் என்ன?
சக்களத்தியாக நினைத்து விட்டாரா?
இப்படி எல்லாம் நினைப்பதற்காகவா மேலவைக்கு வந்தார்?
நடிப்பவர்கள் நாடாளக் கூடாது என்பதல்ல !
தகுதியானவர்கள் தேர்வு செய்யப் படவேண்டும்?
அது தான் உண்மையான ஜனநாயகத்திற்கு வழி அமைக்கும்.