வியாழன், 17 மே, 2012

மாமனாரின் காம வெறி...!

இங்கல்ல இங்கிலாந்தில் !
மகனின் அழகான மனைவியை அடைத்து வைத்து அனுதினமும் அனுபவித்திருக்கிறான்.
அச்சுறுத்தி இருக்கிறான்.
அவளுக்கு ஆங்கிலம் தெரியாது.அவள் பாகிஸ்தானி.தொலை பேசி இருந்தும் அவளால் ஏதும் செய்ய இயலவில்லை.
மாமனாருக்கு ஐம்பத்தி ஆறு வயது.மனைவி வெளியேறியதும் கதவை அடைத்து விடுவான் .மருமகளை நிர்வாணம் ஆக்கி விடுவான்.அழுதாலும் கதறினாலும் அந்த காமப் பிசாசு விடாது.காரியம் முடிந்த பின்னரே கதவை திறக்கும்.
இந்த கேவலத்தை கணவனிடம் அல்லது மாமியாரிடமோ அவள் சொல்லி இருக்கலாம் அல்லவா?
குரான் மீது கட்டாயப் படுத்தி சத்தியம் வாங்கி இருக்கிறான்.'
''யாரிடம் சொன்னாலும் என் மகன் உன்னை விவாக ரத்து செய்து விடுவான்''என்பதாக !
உலக அனுபவம் இல்லாத அவள் என்ன செய்வாள்?
அவளின் கையில் ஸ்குரு டிரைவரால் குத்தி இருக்கிறான். 
நெருப்பால் சுட்டிருக்கிறான். 
கொடுமைகளுக்கு பயந்து அவள் இணங்கி போயிருக்கிறாள்.
மூன்று மாதங்கள் தனது மருமகளை காமத்துக்கு இரையாக்கி இருக்கிறது அந்த காமப் பிசாசு.
மூன்று மாதங்களில் அவளுக்கு ஓரளவு ஆங்கிலம் தெரிந்து விட்டது.சம்பவத்தன்று 999 என்கிற அவசரப் போலீஸ் எண்ணுக்கு போன் செய்து சொல்ல மாமனாரை அள்ளிக் கொண்டு போய்விட்டது .
வழக்கு நடக்கிறது.

கருத்துகள் இல்லை: