சனி, 26 மே, 2012

பெண்ணின் சுகம்தான் சொர்க்கம்!

பெண்ணின் சுகம்தான் சொர்க்கம்! இதில் எத்தனை பேருக்கு உடன்பாடு என்பது எனக்கு தெரியாது.
ஆனால் அதுதான் உண்மை.மனிதன் வாழ்கிற போதே சொர்க்கத்தை அனுபவித்து விடுகிறான்
.நரகம் என்பது அவனின் துயரமே !
ஆக சொர்க்கத்தையும் ,நரகத்தையும் மனிதன் உயிர் வாழ்கிற போதே அனுபவித்துக் கொண்டிருக்கிறான் .
செத்த பிறகு எங்கே புதைக்கப் படுவோம் என்பது அவனுக்கே தெரியாது.
அதனால்தான் சொல்கிறேன் ,சொர்க்கம் என்பது பெண்ணில்தான்!
அந்த சுகத்துக்காக எவ்வளவோ பொய் சொல்கிறோம் அவரவர் தகுதிக்கேற்ப!
அன்பே ஆருயிரே,கண்ணே மணியே,கட்டாணி முத்தே,தேனே திரவியமே,என்றெல்லாம் புகழ்வது அந்த கண நேர சுகத்துக்காகதானே!
கண்கள் சொருகி மயங்குவது ,இப்படி புகழ்வது [பொய்யாக இருந்தாலும்] பெண்ணிடம் தானே!
ஏன் மதுவில் கூட மயங்குகிறோம் என்பார்கள்..உண்மைதான் 
,அதுவும் மயக்கம்தான்
.ஆனால் மாதுவிடம் அனுபவிக்கும் கண நேர இன்பத்தின் அளவுக்கு ஈடாகா!
ஊடல் கொள்ளும் சுகம் மதுவில் உண்டா?
முதுகு காட்டி படுத்துக் கொள்பவளிடம் இணக்கமாக பேசி உடல் தழுவி உதடு நனைத்து. பொய்யான வாக்குறுதிகளை எல்லாம் அள்ளி விட்டு கடைசியில் அவள் உடன்பட்டு ''அத்தான் !'' என முகம் காட்டி திரும்பியதும் அனுபவிக்கும் சுகம் மதுவில் கிடைக்குமா?
மூச்சு முட்ட உதடுகளால் உதடு கவ்வி முத்தமிடுவதில் கோடி சுகம் கிடைக்கிறதே!
ஆக பெண்ணிடம் அனுபவிக்கும் சுகம்தான் சொர்க்கம்.
அதை அளவுடன் அனுபவிப்பதே மனிதனின் கடமை.
இதில் மாறு படுவோர் யாரும் இருக்கமுடியாதே !
இருக்கிறீர்களா?

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...