சனி, 30 ஜூன், 2012

மதுரைக்கு இழுக்கு நித்தி....

கோவில் நகரம்மதுரை.வரலாற்றில்மதுரைக்குதனிஇடம்உண்டு.தமிழ்ச்சங்கம்  கண்ட இலக்கிய நகரம்.உலக அதிசயங்களில் ஒன்று என ஆராதிக்கப்பட, கொண்டாடப்படவேண்டிய அழகு நகரம்.
இந்த நகரத்தில் தான் சைவம் வளர்த்த ஞான சம்பந்தர் அம்மை அப்பனை பாடி அருள் பெற்றார்.இன்னும் எவ்வளவோ பெருமைகள் இந்த நகரத்துக்கு இருக்கிறது.அந்த நகரம் இன்று '' நரக '' மாறி வருகிறது.

அருணகிரி என்கிற மடாதிபதி இளைய ஆதீனமாக நித்தியானந்தா என்கிற போலி யான சாமியாரை நியமித்து இருக்கிறார்.

இந்த நித்தி மீது ஏகப்பட்ட காமக்குற்றங்கள் இருக்கின்றன.நடிகை ரஞ்சிதாவுடன் சரசமாடிய வீடியோ பதிவு வீதிதோறும் நாறியது.இப்போது நித்தி கெடுத்த ஆர்த்தி என்கிற பெண் அந்த ஆசாமியின் லீலைகளை கிழி கிழி என கிழித்திருக்கிறார்.எப்படியெல்லாம் ''ஜீவன் முக்தி''கொடுத்தார் அந்த போலி சாமியார் என்பதை நாணம் மறந்து,வெட்கம் துறந்து சொல்லி இருக்கிறார் என்றால் எந்த அளவுக்கு அந்த பெண் ரணமாகி இருக்கவேண்டும்.

கருவறையில் அர்ச்சகர் ஒருவர் உடலுறவு கொண்டதை எவ்வளவு கேவலமாக பார்த்தார்களோ அதை விட கேவலமாக ,இழிவாக பார்க்கப் படவேண்டியர் நித்தி.அந்த காமானந்தாவை மதுரை ஞான சம்பந்தர் மடாலயத்தில் இனி அனுமதிக்கலாமா? அனுமதித்தால் அது மடாலயம் இல்லை!மலக் கூடமாக மாறிவிடும்.மதுரை நகருக்கு இழுக்காகி விடும். மதுரையில் இருக்கிற ஆன்மீக வாதிகள் ,சைவ பெரியவர்கள்,அரசியல் தலைவர்கள் ...இல்லை இவர்களை சேர்க்கவேண்டாம்.இவர்களும் பாதி நித்திகளே!..மீனாக்ஷி அம்மனை வழிபடுகிற பக்த கோடிகள் என்ன செய்கிறார்கள்?

நித்தியை வரவேற்கிறார்களா?

ஞானப்பால் குடித்த சம்பந்தரின் மடம் மது அருந்தும் கூடமாக மாற வேண்டுமா?

காமக் கொடுரங்களின் இருப்பிடமாக மாற வேண்டுமா?


தமிழ மக்கள் நித்தியை அனுமதிக்ககூடாது!

வெள்ளி, 29 ஜூன், 2012

சாராயம்..நாடகம்..சினிமா...விஸ்கி.!

''ஆட்டோ, மவுண்ட் ரோடு வருமா?''
''வராது..!''
''எல்லோரும் சொல்லிவச்சமாரி பேசுறீங்களே?நாங்க கூப்பிடுற இடத்துக்குத் தானே நீங்க வரணும்?''
''மவுண்ட் ரோடு போனா சவாரி கெடைக்காது,எம்டியா வரணும்.பெட்ரோல்
 விக்கிற வெலையில ..கட்டுபடியாகாது ..வேற பாரு சார் ''

பெரும்பான்மையான ஆட்டோக்களுக்கு மவுண்ட் ரோடு என்றால் பிடிப்பதில்லை .எனக்கு நிறைய அனுபவம் உண்டு.வடபழனியில் இருந்து மவுண்ட் ரோடு ஆயிரம் விளக்கு செல்வதற்கு இருநூறு ரூபாய் அழுதிருக்கிறேன்.

சென்னையில் ஓடுகிற ஆட்டோக்களில் மீட்டர் இருக்கும்.ஆனால் இயங்காது.பெரும்பானமையான ஆட்டோக்களில் ஹாரன் இருப்பதில்லை.சாலை விதிகளை தூக்கிப் போட்டு மிதிப்பதில் சென்னை ஆட்டோக்களை விஞ்ச முடியாது.அவர்கள் சொல்வதுதான் கட்டணம் .பேரம் பேசினால் ''டீசண்டா இருக்கே ..பேரம் பேசறியே சார்''என சற்று சப்தமாகவே சொல்வார்கள்.ஊசியால் குத்து வாங்குவது மாதிரி இருக்கும்.இதனால் வேறு இடம் தேடி செல்வது உத்தமம் எனத்தோன்றும். அன்று என்னுடைய நண்பர் மது ரையில் இருந்து வந்திருந்தார்,மவுண்ட் ரோட் மாலை முரசு ஆபீஸ் முன்பு நிற்பேன் வந்திரு என நேரம் சொல்லி இருந்தார்.அதனால்தான் ஆ ட்டோ பேரம்.

நண்பர் சொல்லி இருந்த நேரத்திற்கு என்னால் செல்லமுடியவில்லை.என்னுடைய டூவீலர் சர்வீசுக்கு செல்லாமல் இருந்திருந்தால் ஓரளவுக்கு குறிப்பிட்ட நேரத்தில் சந்தித்திருக்க முடியும்.

''சினிமா லைன் எப்படி இருக்கு?'' என்று கேட்டார்.

''நமக்கு அதுதான் தொழில்னு ஆகிப்போனபிறகு அது எப்படி இருந்தா என்ன?'' என்றேன் சிரித்தபடி.

''அதுக்கில்லப்பா.சீமைச்சாராயம் கொடுத்து எழுத சொல்வாய்ங்களாமே ,மத்த கவனிப்பும் இருக்கும்னு மதுரையில சொன்னாய்ங்க ,,அதான் ..!நீஒங்க வீட்டுக்கு ஒத்த பிள்ள.கெ ட்டுப் போயிரக் கூடாதுல்ல.''நண்பரின் குரலில் அக்கறை இருந்தது.

நல்ல வேளை ,நம்மை பற்றி 'முழுசா' அவருக்கு தெரியல என்கிற நிம்மதி.

அட்வைசை நிறுத்தவில்லை.

''எங்கப்பா சொல்வாரு....அவரு காலத்துல நாடக நடிகர்லாம் சாராயம் குடிச்சிட்டுதான் நடிப்பாங்களாம்.கழுகுமலை சுப்பையா ,கெங்காபாய்னு காமடி ஜோடி ரொம்பவும் பேமசாம். ,ராஜபார்ட் நடிகர்களை விட இவங்களுக்குத்தான் கூட்டம் கூடுமாம். சுப்பையா புல் லோட்லதான் இருப்பாராம்.ஆனால் வசனமோ பாட்டோ ஒரு வரி கூட மிஸ் ஆவாதாம். சொல்வாரு.நானும் கேள்விப் பட்டிருக்கேன்.அந்த குடிபழக்கம் சினிமாவ்ளும் இருக்குன்றாங்க .அதான்டாப்பா கவலையா இருக்கு.''என்றார்.

நான் அப்படிப்பட்டவன் இல்லன்னு சொல்ல முடியல.திருந்திட்டேன்னு சொல்லவும் முடியல.

ஆனால் அந்த நண்பரை அன்று சாயங்காலமே போதையில் அம்மா ஹோட்டலில் சாப்பிடுவதை பார்க்க நேர்ந்தது,



புதன், 20 ஜூன், 2012

கமல் இலக்கியவாதி இல்லையா?

மொழியை வணிகரீதியாக பயன்படுத்துவோரில் வெற்றி பெற்றவர்கள் தங்களை மொழியியல் வல்லுனராக நினைப்பது நமக்கு ஒன்றும் புதிதல்ல!
நமக்கு எழுதுவதிலும் பிரச்னை.பேசுவதிலும் பிரச்னை!அடுத்தவனுக்கு புரிந்தால் சரி என தலையாட்டுகிற வர்க்கத்தை சார்ந்தவன் நான்!

கலியுகம் எனும் படத்தின் இசைத்தட்டு வெளியீட்டு விழாவுக்கு போயிருந்தேன்.கவிஞர் அறிவுமதி.இவர் பிறமொழி கலப்பின்றி பாடல் எழுதுபவர்.குத்துப் பாட்டு எழுதமாட்டேன் என சொல்லி சினிமாவிலிருந்து விலகி இருப்பவர்.மனுஷ்ய புத்ரன்.தமிழ் கற்றவர்.இனப் பற்றாளர்.மொழிப் பற்றாளரா என்பது தெரியவில்லை.பெயரை வைத்து இப்படி நினைக்க தோன்றுகிறது.அன்றைய விழாவில் இவரும்,அறிவுமதியும் வாதிட்டுக் கொண்டனர்.பத்திரிகை மொழியில் சொல்வதானால் ''மோதல்''!

வழக்கு எண் படத்தை மனுஷ்யபுத்திரன் நல்ல படம் இல்லை என்பதாக சொல்லி கிழித்திருந்தாராம்.அதுவும் தர்க்க ரீதியாக என்கிறார்கள்.நமக்கு இந்த தர்க்கம் யதார்த்தம் பதார்த்தம் ஒரு எழவும் தெரியாது.நல்ல படமா ,கெட்ட படமா ,ஓடுமா ஓடாதா என்பதைப் பற்றி ஏதோ ஓரளவுக்கு தெரியும்.

நல்லபடம் இல்லை என்பதாக எழுதிவிட்டதால் படத்தின் வணிகம் பாதிக்கப் படும் என அறிவுமதி வாதிட ,''தமக்கு அவ்வாறு எழுத உரிமை உண்டு .தனி மனித கருத்து'' என புத்ரன் வாதிட மேடை சூடாகி விட்டது. 'கலியுகம் ' பட விழா என்பது மறந்து போய் விட்டது.இருவரும் மாறி,மாறி மைக்குகளை வாங்கி வாதாட்டம் நடத்தினர்.ஒரு கட்டத்தில் இலக்கியம் பற்றியும் பேச்சு வந்தது.

''கமல்ஹாசனுக்கு எந்த இலக்கியம் தெரியும்.''என்று அவரின் படத்தை இலக்கிய விழாவில் போடுகிறாய் என்று கேட்டு விட்டார் அறிவுமதி.

கமல் கவிதை எழுதுவார் ,கதை எழுதுவார்,அவருக்கு வால்மீகியை தெரிகிறது,கம்பனை தெரிகிறது,மேலை நாட்டு வித்தகர்களையும் தெரிகிறது.
தமிழும் தெரியும் .எனக்கு தெரிந்ததை விட அதிகமாகவே தெரியும் .இங்கு அது இல்லை பிரச்னை.

வழக்கு எண் விமர்சனம் பற்றிய வாதாட்டத்தில் கமலை இழுக்க வேண்டிய அவசியம் இல்லை.

வழக்கு எண் பட இயக்குநர் பாலாஜி சக்திவேலுக்கும் .மனுஷ்ய புத்ரனுக்கும் இடையில் என்ன பிரச்னையோ! இதாண்டா வாய்ப்பு என எழுதி விட்டார்.

விட்டுத்தள்ளுங்கள்!

இன்னொரு கோரிக்கை.பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் அவர்களை கை தட்ட சொல்லாதீர்கள்.அவர்கள் பார்வையாளர்கள் அல்லர்.

ஞாயிறு, 17 ஜூன், 2012

கலாமும் பிராணாப்பும் ...

இந்திய ஜனநாயக பெருநாட்டின் குடியரசுத் தலைவர் பெருமரியாதைக்குரியவராக இருக்கவேண்டும்.ஒய்வு பெற்றுவிட்டவர்களை  மாநிலங்களின் ஆளுனர்களாக நியமித்து கடமையை கை கழுவுவது போல் அல்ல குடியாட்சி தலைவர் பதவி,
அது ஒரு ரப்பர் ஸ்டாம்ப் தான் என்பது தெரிந்த விஷயம்.
அதனாலேயே யாரோ ஒருவரை உட்கார வைத்து விட முடியுமா?
சர்வதேச அரங்கின் கேலிக்குரிய மனிதராக இருந்து விடக் கூடாது.
காங்கிரசின் வேட்பாளராக பிரணாப்முகர்ஜி என்கிற பெரியவரை நிறுத்துகிறார்கள்.
எதிர் கட்சிகளின் வேட்பாளராக அணு விஞ்ஞானி அப்துல் கலாமை நிறுத்தலாம் .இவர் எந்த கட்சியையும் சார்ந்தவர் அல்லர்.
இவர் தமிழர்;பிரணாப் வங்காளி.காங்.கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர்.
ஆளும் கட்சியாக காங். இருப்பதால் அக்கட்சியை சேர்ந்தவர்தான் குடியாட்சி தலைவராக இருக்கவேண்டும் என்கிற எண்ணம தவறானது.
இதற்கு துணை போகும் அடிமைக் குணம் காங்.கை சார்ந்து பதவியில் அமர்ந்திருக்கும் கட்சிகளிடம் இருக்கிறது.
திமுகவை எடுத்துக் கொள்வோம்.
அண்மைக் காலமாக ஊழல் குற்றசாட்டுகளில் சிக்கி விழி பிதுங்கி கொண்டிருக்கிறது.
தமிழர் தமிழர் நலம் என்பதெல்லாம் இக்க ட்சியைப் பொருத்தவரை வெத்து முழக்கம்தான்.தங்களுக்கு ,குறிப்பாக பதவிக்கு ,உறவுகளுக்கு பேரிடர் வரும் என்றால் தமிழ் மொழியை தரம் கெட்ட மொழி என சொல்லவும் தயங்கமாட்டார்கள். ஈழத் தமிழர்களை கொன்றவர்கள் தானே இக்கட்சியினர்.தமிழனாட்டின் இழிநிலை ஆள வருகிறவர்களும்.ஆள நினைப்பவர்களும் தமிழின விரோதிகளாகவும் ,பதவிப் பித்தர்களாகவும் இருப்பதுதான்.
அவன் சுரண்ட வில்லையா ,இவன் சுரண்ட வில்லையா என கேட்டே சுரண்டுகிறவர்கள்.
ஆக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரைதான் திமுக ஆதரிக்கும்.கனிமொழியை  ஸ்பெக்ட்ரம் ஊழலில் இருந்து காப்பாற்றுவதற்காக தமிழரான கலாமை தோற்கடிப்பது கலைஞர் கருணாநிதியின் கடமை.யாக இருக்கும்.
இவர்கள் எதிர்க்கிறார்கள் என்பதற்காகவே கலாமை அதிமுக ஆதரிக்கும். திமுகவை எதிர்ப்பவர்கள் எல்லாம் கலாமை ஆதரிக்கிறார்கள் என்றால் உணர்வு பூர்வமாக அல்ல.உனக்கு எதிரி எனது நண்பன் என்கிற மனப்பான்மைதான்.
இதை மக்கள் அறிந்திருக்கிறார்களா ?
நன்றாகவே அறிந்திருக்கிறார்கள்.ஆனால் அவர்கள் சிறுபான்மையினர்,பெரும்பான்மையினர் கட்சி அரசியலுக்கு அடிமைகள்.
இந்த அடிமைகளை நம்பித்தான் நாடு இருக்கிறது.பல்வேறு கூறுகளாக பிரிந்திருக்கிற அரசியல் அடிமைகளை ஒன்று சேர்ப்பது பதவிகள் தான்.
மக்கள் என்பவர்கள் பெரும்பான்மையிலும் இல்லை.சிறுபான்மையிலும் இல்லை.!
அச்சமுடன் வாழக்கூடியவர்கள்.மக்கள் !
சிறுபான்மை ,பெரும்பான்மை இவ்விரு பிரிவினராலும் தங்களுக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என வாழ்பவர்கள்.
அரசியல் என்பது தொழில் என்றாகிவிட்ட இந்தியாவில் குடியாட்சி தலைவர் என்பவர் சர்வாதிகாரியைப் போல் நடந்து கொள்ள வேண்டும்.
சாத்தியமா?
இல்லை!
ஆக கலாம்,பிராணாப் இருவரில் பெட்டர் யார் என்றால் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்தான்!


வெள்ளி, 8 ஜூன், 2012

நீதியை தூக்கில் போடு!

செய்யாத குற்றத்திற்காக ஒருவனை 26 வருடங்கள் சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள்.26 வயதில் சிறை சென்றவனை 52 வயதில் விடுதலை  செய்து '' நீ குற்றம் செய்யவில்லை!'' என சொன்னால் .....?
''நீ குற்றம் இழைத்தவன் .மனைவியை கொன்றாய்.3வயதான மகள் கத்ரினாவை கொன்றாய். பச்சிளம் குழந்தையான 11மாத ட்ரேசியை யும் கொலை செய்து  விட்டாய்'' என 'கண்டுபிடித்து' தீர்ப்பு சொன்ன நீதிபதிகளுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?
சாட்சி சொன்னவர்களை என்ன செய்யலாம்?
வழக்கு பதிவு செய்து புலனாய்வு செய்த புண்ணியவான்களை என்ன செய்யலாம்?
26 வருடங்கள் சிறையில் வாலிபம் கரைந்திருக்கிறது.
மனிதன் திரும்பவும் பெற முடியாத அரியது இளமை.
இழந்த  இளமைக்கு ஈடாக எதை தரப்போகிறது சட்டம்?
நண்பர்களே!டேவிட் லீ காலித் என்பவர் மிச்சிகனை சேர்ந்தவர்.தொழிலாளி.
வேலை முடிந்து வீடு திரும்பியவர் படுக்கை அறைக்குள் புகை மண்டி நெருப்பு கக்குவதை கண்டு பதறிப்போய் கதவை உடைத்திருக்கிறார்.கையில் காயம்.ரத்தம் ஒழுக சன்னலை உடைத்து உள்ளே போகலாம் என நினைத்திருக்கிறார்.
சன்னல் உயரம்.இவரால் சுவர் ஏறி உள்ளே போக முடியவில்லை.
அதற்குள் எல்லாமே முடிந்து விட்டது.
போலீஸ் இவரை கைது செய்து வழக்கு நடத்தியது.
''குற்றவாளி அல்லன்''என காலித் சொன்னதை நீதிமன்றம் ஒப்புக் கொள்ளவில்லை.
 காலித் விடாது போராடினான் 26 வருடங்களாக!
நீதிக்கு இப்போதுதான் கண் திறந்திருக்கிறது.
''நீ நிரபராதி!'' என விடுவித்து விட்டது.
அவனால் என்ன செய்ய முடியும்?
கல்லறை முன்பாக மண்டியிட்டு கண்ணீர் விடுவதைத் தவிர! 

விஜயகாந்தின் கல்யாணத்தில் நடந்ததென்ன?

என்னதான் மறக்க நினைத்தாலும் மனதில் வேர் விட்டுப் போன நினைவுகளை பிடுங்கி ஏறிய இயலாது.
அந்த மனிதனின் மரணத்துடன் அந்த நினைவுகளும் அவனுடன் மறைகின்றன.
நினைவுகளில் இணைந்தவர்களால் அவை பல்வேறு வடிவங்கள் பெறுகிறது.
இன்றையதேமுதிகதலைவர்விஜயகாந்தின்கல்யாணத்திற்குநடிகர்கள்,
ஸ்டண்ட் நடிகர்கள் ,பத்திரிகையாளர்கள் என பெரும்படை மதுரைக்கு ரயிலில்
சென்றது.
அப்போது நிகழ்ந்த பல வேடிக்கைகளை என்னால் இன்றளவும் மறக்க முடியவில்லை.
மனதில் ஓவியமாக எனக்குள் மட்டும்தான் இருக்கிறது என நினைத்தேன்.
இல்லை இல்லை எங்களின் நினைவுகளிலும் வாழ்கிறது என அண்மையில் நான் சந்தித்த நண்பர்கள் சொன்னபோது வியந்து போனேன்.
எழும்பூரில் ஏறிய சற்று நேரத்திலேயே சில கம்பார்ட்மென்ட்களில் மது பாட்டில்கள் திறந்து கொண்டன.
மகிழ்ச்சி!விஜயகாந்தின் புகழ் பாடியபடி இரைப்பைக்குள் மஞ்சள் நிற திரவத்தை இறக்குகிறார்கள்.
வஞ்சனை இல்லாமல் சைடு அயிட்டங்கள்!கோழி ,மட்டன்,மீன்,என வகை வகையாய் !
உள்ளே இறங்கி இருப்பது உற்சாக பானமாயிற்றே!
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் எத்தனையோ மனிதர்கள்!
கண்ணாடி முன்பாக ஸ்டண்ட் நடிகர் தனது மீசையை முறுக்கியபடி ''நீ அழகுடா .நல்லா வருவ்டா !பெரிய நடிகன்டா !''என பலவிதமாக சொல்லி  நடிக்கிறார்.
உண்மையிலேயே இன்று அவர் டிவி தொடர்களில் அதே மீசையுடன் நடித்துக் கொண்டிருக்கிறார்.
எல்லோரும் படுத்துவிட்டார்கள்.
ஆனால் ஒருவர் மட்டும் உறங்க வில்லை.
படுத்தால் வயிறை புரட்டுகிறது.வாந்தி எடுத்து விடுவோமோ என்கிற அச்சம் .அந்த நிறை போதையிலும் !
அவர் பத்திரிகையாளர் மட்டுமல்ல ,ஒரு நடிகரின் மானேஜரும் ஆவார்!
மெல்ல எழுந்தார்.விளக்குகள் அணைக்கப்பட்டு அரை வெளிச்ச விளக்கு மட்டும் எரிகிறது,
தட்டுத்தடுமாறி கேபினில் நுழைந்து ஆஷ் ட்ரேயில் சிறு நீர் அடிக்கிறார்!
''சன்னலை சாத்தாம படுத்திட்டிங்களா ?''என குண சித்திர நடிகர் முகம் துடைத்துக் கொள்கிறார். யாரோ கேபினை கடப்பது மட்டும் அவருக்கு நினைவில்  பதிந்து விடுகிறது.
விடிந்த பிறகுதான் இரவில் என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரிகிறது.
''ஒன் பிரஸ் மென் பிஸ்ட் அடிசிட்டான்'' என மதுரை வரும் வரை சொல்லியபடியே வந்தார் அந்த குண சித்திர நடிகர். 1அந்த நல்லவர் வி.கோபால கிருஷ்ணன்!