வெள்ளி, 8 ஜூன், 2012

விஜயகாந்தின் கல்யாணத்தில் நடந்ததென்ன?

என்னதான் மறக்க நினைத்தாலும் மனதில் வேர் விட்டுப் போன நினைவுகளை பிடுங்கி ஏறிய இயலாது.
அந்த மனிதனின் மரணத்துடன் அந்த நினைவுகளும் அவனுடன் மறைகின்றன.
நினைவுகளில் இணைந்தவர்களால் அவை பல்வேறு வடிவங்கள் பெறுகிறது.
இன்றையதேமுதிகதலைவர்விஜயகாந்தின்கல்யாணத்திற்குநடிகர்கள்,
ஸ்டண்ட் நடிகர்கள் ,பத்திரிகையாளர்கள் என பெரும்படை மதுரைக்கு ரயிலில்
சென்றது.
அப்போது நிகழ்ந்த பல வேடிக்கைகளை என்னால் இன்றளவும் மறக்க முடியவில்லை.
மனதில் ஓவியமாக எனக்குள் மட்டும்தான் இருக்கிறது என நினைத்தேன்.
இல்லை இல்லை எங்களின் நினைவுகளிலும் வாழ்கிறது என அண்மையில் நான் சந்தித்த நண்பர்கள் சொன்னபோது வியந்து போனேன்.
எழும்பூரில் ஏறிய சற்று நேரத்திலேயே சில கம்பார்ட்மென்ட்களில் மது பாட்டில்கள் திறந்து கொண்டன.
மகிழ்ச்சி!விஜயகாந்தின் புகழ் பாடியபடி இரைப்பைக்குள் மஞ்சள் நிற திரவத்தை இறக்குகிறார்கள்.
வஞ்சனை இல்லாமல் சைடு அயிட்டங்கள்!கோழி ,மட்டன்,மீன்,என வகை வகையாய் !
உள்ளே இறங்கி இருப்பது உற்சாக பானமாயிற்றே!
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் எத்தனையோ மனிதர்கள்!
கண்ணாடி முன்பாக ஸ்டண்ட் நடிகர் தனது மீசையை முறுக்கியபடி ''நீ அழகுடா .நல்லா வருவ்டா !பெரிய நடிகன்டா !''என பலவிதமாக சொல்லி  நடிக்கிறார்.
உண்மையிலேயே இன்று அவர் டிவி தொடர்களில் அதே மீசையுடன் நடித்துக் கொண்டிருக்கிறார்.
எல்லோரும் படுத்துவிட்டார்கள்.
ஆனால் ஒருவர் மட்டும் உறங்க வில்லை.
படுத்தால் வயிறை புரட்டுகிறது.வாந்தி எடுத்து விடுவோமோ என்கிற அச்சம் .அந்த நிறை போதையிலும் !
அவர் பத்திரிகையாளர் மட்டுமல்ல ,ஒரு நடிகரின் மானேஜரும் ஆவார்!
மெல்ல எழுந்தார்.விளக்குகள் அணைக்கப்பட்டு அரை வெளிச்ச விளக்கு மட்டும் எரிகிறது,
தட்டுத்தடுமாறி கேபினில் நுழைந்து ஆஷ் ட்ரேயில் சிறு நீர் அடிக்கிறார்!
''சன்னலை சாத்தாம படுத்திட்டிங்களா ?''என குண சித்திர நடிகர் முகம் துடைத்துக் கொள்கிறார். யாரோ கேபினை கடப்பது மட்டும் அவருக்கு நினைவில்  பதிந்து விடுகிறது.
விடிந்த பிறகுதான் இரவில் என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரிகிறது.
''ஒன் பிரஸ் மென் பிஸ்ட் அடிசிட்டான்'' என மதுரை வரும் வரை சொல்லியபடியே வந்தார் அந்த குண சித்திர நடிகர். 1அந்த நல்லவர் வி.கோபால கிருஷ்ணன்!


கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...