Friday, June 29, 2012

சாராயம்..நாடகம்..சினிமா...விஸ்கி.!

''ஆட்டோ, மவுண்ட் ரோடு வருமா?''
''வராது..!''
''எல்லோரும் சொல்லிவச்சமாரி பேசுறீங்களே?நாங்க கூப்பிடுற இடத்துக்குத் தானே நீங்க வரணும்?''
''மவுண்ட் ரோடு போனா சவாரி கெடைக்காது,எம்டியா வரணும்.பெட்ரோல்
 விக்கிற வெலையில ..கட்டுபடியாகாது ..வேற பாரு சார் ''

பெரும்பான்மையான ஆட்டோக்களுக்கு மவுண்ட் ரோடு என்றால் பிடிப்பதில்லை .எனக்கு நிறைய அனுபவம் உண்டு.வடபழனியில் இருந்து மவுண்ட் ரோடு ஆயிரம் விளக்கு செல்வதற்கு இருநூறு ரூபாய் அழுதிருக்கிறேன்.

சென்னையில் ஓடுகிற ஆட்டோக்களில் மீட்டர் இருக்கும்.ஆனால் இயங்காது.பெரும்பானமையான ஆட்டோக்களில் ஹாரன் இருப்பதில்லை.சாலை விதிகளை தூக்கிப் போட்டு மிதிப்பதில் சென்னை ஆட்டோக்களை விஞ்ச முடியாது.அவர்கள் சொல்வதுதான் கட்டணம் .பேரம் பேசினால் ''டீசண்டா இருக்கே ..பேரம் பேசறியே சார்''என சற்று சப்தமாகவே சொல்வார்கள்.ஊசியால் குத்து வாங்குவது மாதிரி இருக்கும்.இதனால் வேறு இடம் தேடி செல்வது உத்தமம் எனத்தோன்றும். அன்று என்னுடைய நண்பர் மது ரையில் இருந்து வந்திருந்தார்,மவுண்ட் ரோட் மாலை முரசு ஆபீஸ் முன்பு நிற்பேன் வந்திரு என நேரம் சொல்லி இருந்தார்.அதனால்தான் ஆ ட்டோ பேரம்.

நண்பர் சொல்லி இருந்த நேரத்திற்கு என்னால் செல்லமுடியவில்லை.என்னுடைய டூவீலர் சர்வீசுக்கு செல்லாமல் இருந்திருந்தால் ஓரளவுக்கு குறிப்பிட்ட நேரத்தில் சந்தித்திருக்க முடியும்.

''சினிமா லைன் எப்படி இருக்கு?'' என்று கேட்டார்.

''நமக்கு அதுதான் தொழில்னு ஆகிப்போனபிறகு அது எப்படி இருந்தா என்ன?'' என்றேன் சிரித்தபடி.

''அதுக்கில்லப்பா.சீமைச்சாராயம் கொடுத்து எழுத சொல்வாய்ங்களாமே ,மத்த கவனிப்பும் இருக்கும்னு மதுரையில சொன்னாய்ங்க ,,அதான் ..!நீஒங்க வீட்டுக்கு ஒத்த பிள்ள.கெ ட்டுப் போயிரக் கூடாதுல்ல.''நண்பரின் குரலில் அக்கறை இருந்தது.

நல்ல வேளை ,நம்மை பற்றி 'முழுசா' அவருக்கு தெரியல என்கிற நிம்மதி.

அட்வைசை நிறுத்தவில்லை.

''எங்கப்பா சொல்வாரு....அவரு காலத்துல நாடக நடிகர்லாம் சாராயம் குடிச்சிட்டுதான் நடிப்பாங்களாம்.கழுகுமலை சுப்பையா ,கெங்காபாய்னு காமடி ஜோடி ரொம்பவும் பேமசாம். ,ராஜபார்ட் நடிகர்களை விட இவங்களுக்குத்தான் கூட்டம் கூடுமாம். சுப்பையா புல் லோட்லதான் இருப்பாராம்.ஆனால் வசனமோ பாட்டோ ஒரு வரி கூட மிஸ் ஆவாதாம். சொல்வாரு.நானும் கேள்விப் பட்டிருக்கேன்.அந்த குடிபழக்கம் சினிமாவ்ளும் இருக்குன்றாங்க .அதான்டாப்பா கவலையா இருக்கு.''என்றார்.

நான் அப்படிப்பட்டவன் இல்லன்னு சொல்ல முடியல.திருந்திட்டேன்னு சொல்லவும் முடியல.

ஆனால் அந்த நண்பரை அன்று சாயங்காலமே போதையில் அம்மா ஹோட்டலில் சாப்பிடுவதை பார்க்க நேர்ந்தது,No comments:

இது மகா கேவலம்!

"என்னதான் கோவம் இருந்தாலும் போய்த்தான் ஆகனுங்க. கல்யாணம் காட்சிக்கு போவலேன்னாலும் கேத காரியம் .துஷ்டிக்கு போகணும்!" சர்வ சாதா...