என்ன பாவம் பண்ணினானோ, தமிழக மீனவன்.கடலுக்கு மீன் பிடிக்கப் போனால் இவனைப் பிடித்துக் கொள்கிறது சிங்கள ராணுவம்.
அடி, உதை ,பிடிக்கப்பட்ட மீன்களை கடலில் கொட்டிவிட்டு வலைகளையும் அறுத்து விட்டு பிடித்துக் கொண்டு போய் விடுகிறார்கள்.
கருணாநிதி ஆட்சி காலத்தில் மத்திய அரசுக்கு கண்டித்து கடுதாசி எழுதினார் .

மத்திய அரசோ சர்வதேச கடல் எல்லையை இவர்கள் ஏன் தாண்டுகிறார்கள் என்று நேரடியாக இருந்து பார்த்ததை போல் சொல்கிறது..நம்ம்வனால் கச்சத் தீவுக்கு அருகில் மீன் பிடிக்க முடியவில்லை உரிமை இருந்தும்!
இதை மத்திய மந்திரி எஸ் எம்.கிருஷ்ணாவால் கேட்க முடியவில்லை.
ஜெயலலிதாவினாலும் மத்திய அரசிடம் கண்டிப்புடன் இருக்க முடியவில்லை.
இங்கே இருக்கிற எதிர்கட்சிகளும் காகித புலிகள்!
கர்சித்துவிட்டு காப்பியை குடித்துவிட்டு போய்விடுவார்கள்
அவர்களுக்கு பேப்பரில் படத்துடன் செய்தி வந்தால் போதும்.
ஆக ,தமிழக மீனவனின் பிழைப்புக்கு என்னதான் வழி ?
பிரச்சினையை எப்படித்தான் தீர்ப்பது?
இவனையும் ஆயுதம் கொண்டு போக சொல்கிறார்களா ?
இவனிடம் இருக்கிற ஒரே ஆயுதம் ஓட்டு சீட்டு!
அதையும் தேர்தல் காலத்தில் விற்று தண்ணி அடித்து விடுவான்.
எந்த கட்சி ஆட்சியில் இருக்கும்போது இவனின் பிரச்னையில் அக்கறை செலுத்தவில்லையோ அதே கட்சிக்கு ஓட்டுப் போட்டுவிட்டு பிறகு வாழ்நாள் முழுக்க ஒப்பாரி!
இது சிங்கள ராணுவத்துக்கு சாதகமோ இல்லையோ ஆனால் நம்ம மத்திய அரசுக்கு லாபம்,
ஈழத்தமிழனை கொன்றொழிக்க உதவிய சிங்களவனின் பங்காளிகள் ஆயிற்றே!
மக்கள் திருந்தாதவரை மீனவ பிரசனை தீரப் போவதில்லை.
மக்கள் திருந்த கூடாது என்பதற்காக தானே அரசாங்கம் மதுக் கடைகளை நடத்துகிறது..குடித்தால் மரணம் என்று விளம்பரம் செய்வது அரசுதான்.அவன் குடிப்பதற்காக கடை நடத்துவதும் அரசுதான்!
விளம்பரத்தை பார்த்து குடிகாரன் திருந்தி விடுவானாம்.
லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என சொல்கிற அமைச்சர்கள் வாங்கவில்லையா?எத்தனை வழக்குகள் நடக்கிறது?
நாடு நாசமாகிறது!