Saturday, July 21, 2012

கோவிலில் கண்ட காட்சி...


 அடியேனுக்கு இன்று பிறந்த நாள் .சூலை 21.
அலுவலகமும் கிடையாது.அம்மாவின் ஆசிர்வாதத்தினால் மின்சாரம் இன்று முழுவதும் வராது.அதனால் விடுமுறை.

''கோவிலுக்கு போயிட்டு வாங்க ..அதுக்குள்ளே டிப்பன் ரெடியாகிடும்!''என்றாள்

வீட்டுக்காரி சொல்லுக்கு மறு பேச்சு பேச முடியுமா?

முடியும்,ஆனா இன்னிக்கி முடியாது..புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

இருந்தாலும் வீம்புக்காக ''ஏன் நம்ம வீட்டிலேயே சாமி கும்பிட்டா பத்தாதா,ட்ராபிக்கா இருக்கும் பெட்ரோல் செலவு''என சிக்கனம் பாடினேன்.

''சனிக்கிழமை ,ட்ராபிக் அவ்வளவா இருக்காது ..போயிட்டு வாங்க .நானும் கூட வரணும்தான் ஆனா,  .வீட்டு வேலை ஜாஸ்தி.பசங்களுக்கு பலகாரம் பண்ணனும் ''என்று கிச்சனில் இருந்து பதிலுக்கு பாடினாள் .

டூ வீலரை எடுத்துக் கொண்டு கபாலீசுவரர் கோவிலுக்குப் போனேன்.
நான் மதுரைக்காரன் .அதனால் மீனாட்சி-சுந்தரேஸ்வர ரை பிடிக்கும்.
பிரகாரம் சுற்றி வந்து சுப்பிரமணியர் சந்நிதிக்கு எதிராக இருக்கும் பெரிய மண்டபத்தில் உட்கார்ந்தேன்.

எனக்கு சற்று தள்ளி இரண்டு முதியவர்கள்.

கணவ ன் -மனைவி..மிகவும் வசதியானவர்கள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.முகத்தில் தெய்வீக களை  !

யாரையோ எதிர்பார்க்கிற பரபரப்பு .அடிக்கடி பிரகாரத்தை பார்த்து கொண்டிருந்தனர்.

அவர்களின் பரபரப்பு எனக்கு சற்று வித்தியாசமாக படவே அர்ச்சனை செய்த தேங்கா மூடியை உடைத்து சில்லை மென்றபடி கவனிக்க ஆரம்பித்தேன்.

அவர்களின் முகத்தில் இப்போது மகிழ்ச்சி,

''கிரான்ட்பா ''என சொல்லியவாறே ஒரு சிறுவன் ஒடி வந்தான். அவனை அழைத்து வந்த ஆணும் பெண்ணும் தொலைவிலேயே நின்று விட்டனர். அவர்கள் அந்த சிறுவனின் அப்பா-அம்மா.

முதியவர்களிடம் மிகவும் பாசமாக  இருந்தான் அந்த சிறுவன்.அவர்களுக்கு ஆனந்தம் ,பரமானந்தம். பத்து நிமிடம் இருக்கும்.மூவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தனர்.

''க்ரிஷ் .....''

தொலைவில் நின்றிருந்த பெண்தான் அழைத்தாள்

அந்த சிறுவன் பிரிய மனமின்றி பிரிகிறான்.

அவன் அந்த முதியவர்களின் பேரன்.மகன் வயிற்று பிள்ளையாம்.

 சனிக்கிழமை தோறும்  காலையில்  கோவிலுக்கு வந்து பேரனை காட்டிவிட்டு போய் விடுவாராம் மகன்!.கூடவே வருவாள் மருமகள்.

இதென்ன உறவு ஏனிந்த கொடுமை?புரியவில்லை.


கனத்த இதயமுடன் வந்த எனக்கு காலை உணவு பிடிக்கவில்லை.மதியம் 12மணி அளவில் ஏதோ கொஞ்சம் சாப்பிட்டேன்.

1 comment:

வலைஞன் said...

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
http://www.valaiyakam.com/page.php?page=votetools

நன்றி

வலையகம்
http://www.valaiyakam.com/

ரஜினி முந்துவாரா கமல்ஹாசனை?

அதென்னவோ கடவுளை நம்புகிறவர்களுக்கு பலன் என்னவோ கை கால்  ஓய்ந்த பின்னர்தான் கிடைக்கிறது. பல பேருக்கு சொர்க்கத்தில் கிடைக்கும் என்பது நம்பி...