வெள்ளி, 20 ஜூலை, 2012

போங்கடா ,நீங்களும் பொன்மொழியும் !

ஆட்டோவில் எழுதியிருந்தார்கள் ,''கல்லில் செதுக்கிய கடவுளை விட கருவில் சுமந்த தாயே உண்மையான தெய்வம்'' என்பதாக!
சிரிப்புதான் வந்தது.
எந்த மகன் இப்படி நினைக்கிறான்? அய்யா நீங்கள் கோவித்துக் கொள்ளக் கூடாது.நீங்கள் அம்மாவை பூஜிக்கலாம் .உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை !
கல்யாணாம் ஆன ஆம்பிளைகளில் நூத்துக்கு 95 சதவீதம் அம்மாவை மதிப்பதில்லை. சத்தியம் பண்ணுவேன்.
அன்னிக்கி தலை நிறைய முல்லைப்பூ வைத்துக்கொண்டு கணவன் எப்ப வருவான்னு எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் மனைவி.
பயலும் வந்தான்! வீட்டுக்குள் நுழைந்த போதே முல்லையின் மணம் ஒரு தூக்கு தூக்கிவிட்டது.அவனும் பேச வில்லை,அவளும் பேச வில்லை.ஊஞ்சலில் படுத்து இருந்த அம்மாவும் பேச வில்லை.எல்லாம் அமைதியாகவே ஓடுகிறது.
அவர்களின் அறைக்குள் போனான்.பனியனை கழற்றினான்.லுங்கிக்கு மாறி சிரித்தபடியே படுக்கிறான் .எதிர்பார்ப்புகள் எக்கசக்கம்.அவளும் பிராவும் பாவாடையுமாக விடி விளக்கை போட்டுவிட்டு படுத்தாள் .அவனுக்கு முதுகு காட்டியபடி!
நமட்டு சிரிப்புடன் தோளை தொட்டான்.
''ப் ஸ்ஸ் " கடுப்புடன் கையை தட்டிவிடுகிறாள் '
''என்னம்மா ..''செல்லமாக நெருங்கி அணைத்தான்.
பட்டாசாக வெடிக்கிறாள்.''இதுக்கொன்னும்  கொணச்சல் இல்லை''
மறுநொடியில் விசும்பல்.
இருவரும் வெகு நேரம் பேசுகிறார்கள் .தூங்குவதற்கு நள்ளிரவு ஆகிவிட்டது.அன்றைய இரவு அவனுக்கு ஏமாற்றம்.!
விடிந்தது!கச்சேரி ஆரம்பம் !
''ஏம்மா ,உனக்கு புத்தி கெ ட்டுப் போச்சா ,வீட்டுக்கு வந்தவளை எப்படி நடத்துற ங்கிறது தெரியாதா,பெரிய மனுஷியா நீ?''
அம்மாவை சகட்டுமேனிக்கு பேசுகிறான் ,ராத்திரி பொண்டாட்டி என்ன ஓதினாலோ தெரியாது.என்ன நடந்தது என்பதை விசாரிக்காமலேயே ஒன்சைடாகவே அம்மாவை வைகிறான் !
''என்னடா விடிஞ்சும் விடியாம இப்படி கத்துறே..ஒம்பொண்டாட்டிக்காரி ராத்திரி மந்திரிச்சி  விட்டாளா?''
பதிலுக்கு அம்மாவும் பேசுகிறாள்.பேசத்தானே செய்வாள்!
அவனை 25வருசம் வளர்த்து கல்யாணம் பண்ணி வைத்தவள் ,அவனை நன்றாக தெரிந்திருப்பவள். அவள் மருமகளிடம் தகராறு செய்யக் கூடியவளா ,நேற்று என்ன நடந்தது என்பதை இருவரிடமும் கேட்டு தெரிந்து கொண்டல்லவா பேசி இருக்கவேண்டும்

அவனின் உடல் பசி நேற்று இரவு வெட்டியாகி விட்டது.அதன் விளைவு அம்மா விரோதி ஆகி விட்டாள் .ஆக பொன்மொழி ,பழமொழி எல்லாம் இந்த காலத்தில்  வேற்று மொழிதான்!

1 கருத்து:

கோவி சொன்னது…

உண்மையாத்தான் சொல்லிருகீங்க. Please remove word verification. it may inconvenient while post the comment.

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...