"மாற்றான் "படத்தின் பத்திரிகையாளர் கூட்டம்.
"நான் பல பெரிய ஹீரோக்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்திருக்கிறேன்.ட்ராலி ஷாட் களில் சில இடங்களில் ஜெர்க் அடித்திருக்கும்.அதற்காக "ரீ டேக் சார்"என்பேன் இதை சிலர் விரும்பமாட்டார்கள் "ரெக்ரெட் "டாக எடுத்துக் கொள்வார்கள்.ஆனால் சூர்யாவோ ரீ டேக் என்றால் முகம் சுழிக்கவே மாட்டார்.எத்தனை டேக் வேண்டுமானாலும் கேட்கலாம் மிகத் திறமையான நடிகர்"என்று பாராட்டியவர் அடுத்து சொன்னது காஜல் அகர்வாலை பற்றிதான்!
ஜே..ஜே... என்றிருந்தது.
"இந்த ரம்யாவிடம் தானே உதவி டைரக்டர் பொன்னுசாமி "தாண்டவம்"கதையை சொன்னதாக சொல்லி இருந்தார்?"
தொகுத்து வழங்கிய பெண்ணை சுட்டிக் காட்டி கேட்டார் சக பத்திரிகையாளர்.
தலையாட்டினேன்."பொன்னுசாமி சொன்ன அந்த ரம்யா இவர்தான்"
"தொகுத்து வழங்குவதே இந்த பெண்ணுக்கு சிக்கலாக இருக்கிறது.இவர் எப்படி கதையை செலெக்ட் பண்ணுவார்?"என்றார் நண்பர் .
"நமக்கு வேண்டாத விஷயம்.வந்த வேலையை பார்!"என்றேன்.
டைரக்டர் கே.வி.ஆனந்த் போடியம் வந்து மைக்கை பிடித்தார்.
பல உண்மைகளை சொன்னார் .
"காஜல் உண்மையிலேயே அறிவான பெண்!"என்றவர் அதைத் தொடர்ந்து சொன்னவைதான் ஹைலைட்.
"சிலர் ஆங்கில புத்தகங்களை தலைகீழாக வைத்துக் கொண்டு படிப்பார்கள்."என்று அவர் சொன்ன தகவல்தான் 'யாராக இருக்கும் அத்தகைய அறிவாளிப் பொண்ணு' என்கிற ஆவலை தூண்டிவிட்டது.
இரட்டை வேட சூர்யாவில் ஒரு சூர்யாவுக்கு தெலுங்கில் டப்பிங் பேசியிருப்பது அவரது தம்பி கார்த்தி என்பது உலகறிந்த செய்தி.அதை சிலர் கேட்டதுதான் ஆச்சரியமாக இருந்தது.
பாடலாசிரியர்கள் எல்லோரும் பேசினார்கள் ஒருவரைத்தவிர!
அவரை ஏன் மேடைக்கு அழைக்கவில்லை என்பது தெரியவில்லை.