வெள்ளி, 21 செப்டம்பர், 2012

முலை என்பது ஆபாச சொல்லா?

சங்க இலக்கியங்களில் காணப்படும் செழுமை வாய்ந்த சொற்களில் சில இன்று ஆபாச சொற்களாக கருதப் படுகின்றன,
பெண் அல்லது ஆண் இவர்களின் அங்கங்களை சொன்னால் பிழையாகப் படுகிறது.

ஆனால் காலம் காலமாக பிழைகளையே இலக்கியமாக சொல்லி வருகிறார்கள்.

கம்பனின் மகன் அம்பிகாபதி என்கிறார்கள்..அரசனின் மகளை நேசித்தான் 'இவ்விருவரின் காதல் அமரத்துவம் வாய்ந்தவை என்கிறார்கள்.

இது வரலாற்று பிழையா?

அல்லது வலிந்து சொல்லப் படும் பிழையா?

கம்பனின் காலம் 9 ம் நூற்றாண்டின் பிற் பகுதி!

அம்பிகாபதி என்பாரின் காலம் 17 ம் நூற்றாண்டிற்கு முன்பு!

ஒட்டவே இல்லை !அம்பிகாபதி என்பவரின் கோவை அற்புதமான சிற்றிலக்கியம்.அதில் அன்றைய தமிழரின் வாழ்வியல் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இன்றைக்கு மேலை நாட்டினர் தமது நிர்வாண உடம்பில் சித்திரங்கள் தீட்டி கொள்கிறார்கள்.பச்சை குத்திக் கொள்கிறார்கள்.ஆனால் 17 ம் நூற் றாண்டில் வாழ்ந்த தமிழ் பெண்கள் தம் உடம்பில் குங்கும குழம்பினால் சித்திரங்கள் வரைந்து கொண்டிருக்கிறார்கள்.

சங்க இலக்கியத்திலும் காணலாம்,

"தோளில் கரும்பு முலையில்கொடி விடு தொய்யலும்"என்கிறது இலக்கியம்.

இப்படி எழுதிக் கொள்வதை "தொய்யில் " என்கிறது தமிழ்.


கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...