செவ்வாய், 13 நவம்பர், 2012

ஆர்யா ஓர் பெண் வேட்டைக்காரர்..!

புத்தகம் பாடல்கள் வெளியீடு விழா..
 செசெல்ஸ் தீவின் அரும்-பெரும் கோடீஸ்வரர் என்பதால் ஹயாத் ஹோட்டலில் விழாவை நடத்தினார்கள்.
விஜய் ஆதிராஜின் இயக்கத்தில் வெளியாகப் போகிற முதல் படம்.ஆர்யாவின் தம்பி சத்யாவுக்கு இது இரண்டாவது படம்.முதல் படம் இன்னும் வெளியாகவில்லை.
ஆர்யா-சத்யா இருவரும் இசுலாமியர்கள் என்றாலும் தங்களின் பெயர்களை ஆரியம் கலந்து சொல்வதில் பெருமைப் பட்டுக் கொள்கிறவர்கள் என நம்புகிறேன்.தமிழில் பெயர் வைத்தால் மட்டும் தங்கத் தட்டில் வைத்தா தாங்கப் போகிறார்கள். தமிழில் பெயர் வைத்து யூ சான்றிதல் கிடைத்தும் அரசின் வரி விலக்குக் கேட்டு நீதிமன்றம் போகிற காலத்தில் அவர்கள் தமிழ் துறந்து தமிழ்ப் படங்களில் நடிப்பது பிழையில்லை.
சொல்ல வந்தது தடம் மாறுகிறது....அன்றைய விழாவில்  கூட்டம் அதிகமாக இருந்தது.அந்த பெருமை பத்திரிகை தொடர்பாளர் நிகிலுக்கு உரியது.
பொதுவாக இத்தகைய விழாக்களில் மெட்டுப் பிறந்த விதம் ,அதற்கு வரிகள் இட்டுக் கட்டிய நேர்த்தி பற்றி சொன்னால் புதிய தகவல்கள் கிடைக்கலாம்.
மெட்டுக்கும் பாட்டுக்கும் பட்ட வலிகள் அல்லது சுவைகள் வித்தியாசமாக இருக்கக்கூடும்.
பார்த்திபன் கலந்து கொண்டால் கண்டிப்பாக பத்திரிகைகளுக்கு பழ -பல துணுக்குகள் கிடைக்கும்! அன்றும் கிடைத்தது.
இன்றைய சினிமாவின் பெண் வேட்டைக்காரர் என சொல்லப் படுகிறவர் ஆர்யா.அது இட்டுக்கட்டிய புனை கதை இல்லை என்பதை பலர் அன்று பகிரங்கமாகவே சொல்லி விட்டார்கள்.ஆர்யாவும் நாணி ,கோணி அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டார் .
ஆக நடிகர்கள் சக நடிகையரிடம் உறவு கலப்பது தவறில்லை என்பதை பகிரங்கமாக சொல்வது இன்றைய நாகரீகம் என நம்புகிறார்கள்.
அவர்களின் தைரியம் மற்ற நடிகர்களுக்கும் வர வேண்டும் என்பதே எனது ஆசை.
எதற்காக மறைந்து,ஒளிந்து....பின்னர் மறுத்து,நாளைடைவில் அது உண்மையாகி...!

மண் தின்னப் போவதை மனிதன் தின்றால் என்ன ?