பேஸ்புக்,ட்விட்டர் ,பிளாக்,இவை மூன்றிலும் இருக்கிறேன்.
தொடக்கத்தில் 'லைக்'குகளை எதிர்பார்த்து எழுதினேன்.நல்லவைகளை!
ஆனால் விழவில்லை.'லைக்குகள்'!
சினிமாவை எழுதினேன்.விழுந்தன.ஆனால் எண்ணிக்கையில் குறைவு!
ஆகா...விஷயம் இப்படி இருக்கா?அப்படியானால் இலக்கியங்களில் இருக்கிற இன்பத்து ச் சுவைகளை எழுதினால்?
சுப்ரதீபக் கவிராயரின் தூதுவில் இருந்து எழுத, பிளாக்கில் எண்ணிக்கை உயர்ந்தது.!
அப்படியானால் பிளாக்கில் நாம் சாராயம் விற்க ஆரம்பித்திருக்கிறோம் என்கிற எண்ணம் ஏற்பட்டது.
சில நண்பர்கள் கண்டித்தனர்."நாகரீகமாக எழுது"!
அரசு சாராயம் விற்பது நாகரீகமாகிவிட்டபோது நான் எழுதுவது மட்டும் நாகரீகமாக ஆகாதா?
நானே கேட்டுக் கொண்டு தொடர்ந்தேன்.
எனது வீட்டுச் சிறுவர்கள் கம்ப்யூட்டரில் சித்தர்கள் என்றானதும் ......
உள்ளத்தில் வலி!
ஓ ...நம் வீட்டில் அடி விழும்போது தான் சமுதாயம் தெரிகிறது.
வெட்கம்.வேதனை.இதுவரை நான் எழுதிய காமரச கட்டுரைகளை எத்தனை சிறுவர்கள் படித்திருப்பார்கள் ?
வேண்டாமே.இனிமேல் அப்படி எழுத வேண்டாமே!
எத்தனை நூறு பேர் படிக்கிறார்கள் என்பதை விட ,பத்து பேர் படித்தால் போதும் என்கிற உறுதியை இந்த ஆங்கில புத்தாண்டில் எடுத்திருக்கிறேன்,