செவ்வாய், 4 டிசம்பர், 2012

நமக்கு கிடைத்த அடிமை ....நல்ல பேச்சாளி !


மதிமுக.வின் பலம் வாய்ந்த பேச்சாளர் நாஞ்சில் சம்பத்.
மொழி ஞானம்,வளைந்து கொடாமை ,அஞ்சாமை ,ஆளுமை ,எழுத்தாற்றல் என இன்ன பிற திறமை உள்ள மனிதர்.
வைகோவைப் போன்றே தன்னை வடிவமைத்துக் கொண்டவர் என சொன்னாலும் பிழை இல்லை.
உவமைகளும் ,எடுத்துக்காட்டுகளும் இவரது பேச்சில் துள்ளி விளையாடும்.
அமர்ந்திருப்பவர்களை ஆவேசம் கொள்ளவைக்கும் ஆற்றல் இந்த தமிழனுக்கு உண்டு.
வைகோவுக்கும் இவருக்கும் இடையில் உருவாகிய-அல்லது உருவாக்கப் பட்ட கருத்து வேறுபாடு இவரை அணி மாற வைத்திருக்கிறது.
மதிமுகவில் இருந்தபோது  மனம் விட்டு மேடைகளில் பேசி இருப்பார் .
இனிமேல் அவரால் அந்தளவுக்கு பேச முடியுமா?
தமிழ் ஈழம் பற்றி கருத்து சொல்வதற்குக் கூட அனுமதி வாங்க வேண்டும்.
இவர் பங்கு பெறு ம் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளில் கூட இவரின் முகம் இருக்கக் கூடாது.
மதிமுகவில் அனுபவித்த சுதந்திரத்தைப்  போல்  அதிமுகவில் .அவரால் அனுபவிக்க முடியுமா?
அவரின் தமிழாற்றலை அதிமுக பயன் படுத்திக் கொள்ளும்.
மறைந்த கா.காளிமுத்துவுக்குப் பிறகு அந்த கழகத்திற்கு கிடைத்திருக்கும் வலிமையான ஆயுதம் சம்பத் என்பதில் ஐயமில்லை.
அவரின் வாழ்வு செழுமை பெறும் .பதவிகள் நாடி வரும் .
"இதற்காகத்தானே ஆசைப் பட்டாய்  சம்பத்?"என பேச்சு வலம் வரும்.
மதிமுகவில் இருந்து சிலர் வரலாம்.
ஆனாலும் என்ன?
கருவேப்பிலைதானே !
உண்மையான அரசியலை பேசமுடியாது.

"நமக்கு கிடைத்த அடிமை திறமையான பேச்சாளி!"

கருத்துகள் இல்லை: