திங்கள், 10 டிசம்பர், 2012

கமலின் விஸ்வரூபம்

கமலுக்கு பிடிவாத குணம்.
ஒரு முயற்சியில் ஈடுபடுவதற்கு முன்னரே அதன் விளைவுகள் இப்படி எல்லாம் வரக்கூடும் என யூகித்து வைத்திருப்பார்.
அது அவரது பலம்.
இத்தனை கோடிகள் செலவு செய்கிறோமே கையைக் கடிக்குமா,அல்லது பையை நிரப்புமா என்கிற கணக்குப் போடத்தெரிந்த வியாபாரி என்றாலும் வித்தகர்.கையைக் கடித்தாலும் பரவாயில்லை என சில நேரங்களில் துணிந்துவிடுவார்.
புதியவையாக இருக்க வேண்டும் ,தன்னால் புதுப் பாதை அமைய வேண்டும் என்கிற ஆர்வம அதிகம்.
அவர் சொன்ன ஆலோசனைகளை தயாரிப்பாளர்கள் முன்னரே  கேட்டிருந்தால் கள்ள வீடியோ கேசட்டுகள் வந்திருக்காது.
அவர் சொல்லி நாம் என்ன கேட்பது என்கிற மனப்  பான்மை தயாரிப்பாளர்களிடம் இருந்தது.இப்போதும் இருக்கிறது.
விசுவரூபம் வீட்டுக்கு வருவது நல்லது.நசிந்து வரும் சினிமாவுக்கு இதன் மூலம் கிடைக்கும் வருவாய்தயாரிப்பாளர்களின்  கையை கடிக்காமல் காப்பாற்றும்.
ரஜினிக்கு அடுத்து வருவாய் ஈட்டக்கூடிய நடிகர் கமல்தான் என்பதை விசுவரூபத்தின் வியாபாரம் நிரூபிக்கலாம்.
ஆந்திராவில் அமோக வரவேற்பு.மலையாளமும் தயார். கன்னடமும் கை கொடுத்திருக்கிறது.
டிவி சேனல வருவாயும் இருக்கிறது.எனவே சில தியேட்டர் அதிபர்கள் கதவை சாத்துவதால் நட்டம் அவர்களுக்கே!
கமல் என்கிற அதி புத்திசாலியிடம் அவர்கள் ஏமாறாமல்  லாபம் பெற வேண்டும் என்றால் ஒத்துழைப்பு கொடுப்பதுதான் நல்லது.

கருத்துகள் இல்லை: