சனி, 22 டிசம்பர், 2012

கற்பும் மனிதர்களும்!

இஷ்டப்பட்டு எவனுடன் படுத்தாலும் அது கற்பழிப்பு இல்லை.!
அது அவளின் கணவனுக்கு செய்யும் துரோகமும் இல்லை.
ஆனால்,
அவளின் விருப்பத்திற்கு மாறாக வல்லுறவு கொண்டால் மட்டுமே அது "கற்பழிப்பு"!என்னங்கடா உங்க நியாயம்?
இந்த கற்பு என்பது உறுப்பு சார்ந்ததா?
மனம் சார்ந்ததா?
உடல் சார்ந்ததா?
ஒருவனின் மனைவி இன்னொருவனுடன் பாலியல் தொடர்பு கொண்டால் அங்கே துரோகம்  அல்லது கள்ளத் தொடர்பு என ஏதோ ஓன்று  முன்னிலை படுத்தப் படுகிறது..கற்பு என்பது பின்னால் நின்று விடுகிறது.
"அவனை அவ வச்சிருக்காளாம்" ஓடிப்போயிட்டாளாம்இன்னார்பொண்டாட்டி"
"என்ன பொம்பள அவ.குடிய கெடுத்திட்டாளே ,சண்டாளி"
இப்படிதான் சொல்வார்கள்.
எங்கேயாவது ராமநாதன் கற்பிழந்தான் ,கோதண்டம் கற்பை பறி  கொடுத்தான் என சொல்கிறார்களா?
ஆணுக்கு மட்டும் கற்பு இல்லையா?
கற்பு என்பதை பெண்பாலாக கருதும் முட்டாள்கள் இருக்கும்வரை இந்த சமுதாயம்   திருந்தப் போவதில்லை.
தெருவில் நடந்து செல்லும்போது ஆண் சைட் அடிக்கலாம்.ஆனால் அவன் மனைவியை அல்லது உறவுப் பெண்ணை எவனாவது பார்த்தால் கோபம் வந்துவிடுகிறது.
திருந்துங்கடா!

கருத்துகள் இல்லை: