ஞாயிறு, 23 டிசம்பர், 2012

சிறந்த நடிகர் சூர்யாவா,விஜயா?

சிறந்த நடிகர் சூர்யாவா,விஜயா?
ஆண்டு முடிய போகுது.
இனி ஆளாளுக்கு 'அவார்டு பங்ஷன் 'நடத்த கெளம்பிடுவாணுங்க.சில நடிகர்கள் அவங்களே பணம் காசு கொடுத்து செட்-அப் பண்ணி அவார்டு வாங்கி பப்ளிசிடிக்கு பணம் கொடுத்து அவங்களே சிறந்த நடிகர்னு சொல்லிக்குவாங்க.இந்த கண்றாவி வருஷம் தோறும்  நடக்கிது.
இதுல என்ன வேடிக்கைன்னா அந்த நடிகருக்காக மத்த நடிகர்களும் நடிகைகளும் விழாவுக்கு போக வேண்டியதா இருக்கு .போகலேன்னா அடுத்த பட சான்சு அல்வா!அதனால அல்லக்கைகளா சில பெரிய நடிகர்கள் பின்னாடி திரிய வேண்டியதா போச்சு.
2012ம் வருசத்து சிறந்த நடிகர் யார்னு மக்களுக்கு தெரியாம இருக்காது..
படம் பார்த்தவங்க மனசில அவங்க நிச்சயம் இருப்பாங்க /சில பேர் வேணும்னா மறந்திருப்பாங்க.
இப்ப சொல்லுங்க உங்க மனசில இருக்கிறது யாரு?
கடந்த வருஷ 'பாக்ஸ் ஆபீஸ்' படம்னா ஒப்பனிங்க்ல அள்ளிக்கொட்டிய 10 படத்த சொல்லலாம்.அப்படி வாரிக் கொடுத்த பட ஹீரோ ஹீரோயின்தான் பெஸ்ட்டா?இல்ல  திறமையை காட்டி நடிச்சவங்கதான் பெஸ்ட்டா?
சும்மா ஒரு பட்டியல் தரேன்.செலெக்ட் பண்ணுங்க.அப்புறம் சில கம்பெனிகள் செலெக்ட் பண்ணி விழா நடத்துறவங்க லிஸ்ட்டு டன் சரி பாருங்கள் உண்மை தெரியும்..சூர்யா,விஜய்ஆர்யா,கார்த்தி,சமுத்திரக்கனி,சசிகுமார்,பிரகாஷ்ராஜ்,விக்ரம்,ஆதி,ஜீவா,கமல்,அதரவா,விக்ரம் பிரபு,உதயநிதி .....!...
இவங்களை தாண்டி பெஸ்ட் வர சான்ஸ் இல்ல.எனகென்னமோ பட்டியலில் கமல் சூர்யா.விஜய் கார்த்தி...சிலர் உதயநிதியை சொல்வாங்க...
உங்க முடிவு என்ன? 

கருத்துகள் இல்லை: