திங்கள், 31 டிசம்பர், 2012

புத்தாண்டு வாழ்த்துகள்.

வணக்கம் நண்பர்களே,
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.
இந்நேரம் பலர் ஆரம்பித்திருப்பார்கள்.ஆடல்,பாடல் என அமர்க்களப்படும்.கடலோரம் பலர் காதலி,மனைவி,ஆசைநாயகி என ஜோடி  சேர்ந்திருப்பார்கள்.மார்கழிப் பனி அவர்களை ஒன்றும் செய்யாது.கத கதப்புக்கு  
பலர் 'உள்ளுக்குள்ளும் 'ஸ்வெட்டர் போட்டிருப்பார்கள்.எனவே குளிரோ,பனியோ,பயமோ இருப்பதில்லை.
ஆங்கில புத்தாண்டு ஜனவரி முதல் நாளன்று தொடங்கும்.
ஆனால் ,தமிழனுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை மாதம் என ஜெயலலிதாவும்,தை மாதம் என தமிழ் அறிஞர்களும் சொல்லி வருகிறார்கள்.திமுக ஆட்சியில் இருந்தால் தை மாதம்,அதிமுக ஆட்சியில் இருந்தால் சித்திரை மாதம் என அரசு கொண்டாடும்.
அரசியல்வாதிகளின் விளையாட்டுக்கு தமிழ் வருசப் பிறப்பு நாய் படும் பாடு படுகிறது.
ஏன் இப்படி என அரசியலாரை  கேட்க முடியாது.அதனால் அந்தந்த கட்சிக்காரர் களால் இரண்டு தடவை கொண்டாடும் பெருமை தமிழனுக்கு கிடைத்திருக்கிறது.
ஒரு வேளை  பா.ம.க.ஆட்சிக்கு வந்தால் அசல் தமிழர்கள் அவர்கள்தான் என சொல்லி ஒரு மாதத்தை சொல்லலாம்.இப்படி ஒரு பெருமை தமிழனுக்குதான்கிடக்கிறது.உலகத்தில் இப்படி வேறு எந்த இனமாவது தங்களின் புத்தாண்டை கொண்டாடி இருக்குமா என்பது தெரியவில்லை.
ஆனால் ,
நான் தைத் திங்கள் நாளைத்தான் தமிழர் புத்தாண்டாக கொண்டாடுவேன்.
அன்புடன் ,
தேவிமணி. 

கருத்துகள் இல்லை: