செவ்வாய், 4 டிசம்பர், 2012

ஆசையாய் ஓர் கடிதம்.....

என்னவளே,
இப்படி உன்னை அழைக்கலாம் அல்லவா ?
என் தலை கோதி அதன் சுருளை ரசித்தவள் நீ!
காதோரம் முகர்ந்து கனலை மூட்டியவள் நீ!
கன்னத்தில் உதடுகளால் ஓவியம் வரைந்தவள் நீ!
எனது இதழ்களில் உனது நாவினால் காதல் சொன்னாய்.
இப்படி காதல் சொன்னவளை
என்னவளே என நான் சொல்வது பிழையா ?

நேற்று பழகியதெல்லாம் பருவத் தவறா ?
முத்தம் கொடுத்து உயிரை உறிஞ்சியபோது
எத்தனை சுனாமிகள் நமக்குள்!
இப்படியே இருக்கலாமா ,
இருக்கமுடியாதெனில்
இறப்பதே சொர்க்கம் என சொன்னது யார்?
அந்த கண  நேரம்தானா சத்தியம்?

மறந்தவளே ,எனை ,இல்லை, நமை
மறந்தவளே!
காதலை காற்றில் கரைத்து விட்டாய்.!
உடை கலைத்து ,உடல் கலந்து
திகைந்து ,பின் முகைந்து .....
இதுவே நமக்கு நல்லறம்
என இல்லறம் சொன்னவள் நீ!

இன்று
துறவறம் கொண்டது ஏன் ?
இளமை என்பது கொடை !
காலம் கடந்துவிட்டால்
முதுமை துயரம்.
வேண்டாம் ,நமக்கு.!
காலம் இருக்கும்போதே
காமத்தில் கரைவோம்!

இவண் ,
உனது
அவன்.

கருத்துகள் இல்லை: