சனி, 22 டிசம்பர், 2012

விஜயும்-விஜயும் !

இயக்குநர் விஜயும்.நடிகர் விஜயும் இணைந்து ஒரு படம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.படத்திற்கு ;தங்கமகன்' எனப் பெயரிட்டிருப்பதாக செவிவழி செய்திகள்.
ஆனால் அதிகாரப் பூர்வமாக எந்தப் பெயரும் அறிவிக்கப் படவில்லை.இதுவரை தமிழ் சினிமாவில் எவரும் செய்திராத வகையில் எல்லோரும் தங்களை தயார்படுத்திக்  கொண்டு படப்பிடிப்பு தளம் சென்றிருக்கிறார்கள்.
ஒரு ஐம்பது ,அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் தென் தமிழகத்தில் 'குஸ்தி'பந்தயம் நடக்கும்.காட்டாக் குஸ்தி,போட்டா போட்டி என துண்டு பிரசுரங்கள் ஊர் முழுக்க பறக்கும்.பயில்வானுகளுக்கு தயார் தீனிக்காக கான்ட்ராக்டர் பந்தயத்தில்  மோதுகிற  பயில்வான் இருவருக்கும் பணம் கொடுப்பார்.இருவரும் உடம்பில் உறம்  ஏற்றிக் கொண்டு மோதுவார்கள்.
அதைப்போல இயக்குநர் விஜய் தனது படப்பிடிப்புக் குழு மொத்தத்தையும் சென்னை கிரீன் பார்க் என்கிற நட்சத்திர ஹோட்டலுக்கு வரவழைத்து  வீடியோ போட்டுக் காட்டினார்
முதல் ஒரு மணி நேரம் அவர் கதை சொன்னதை வீடியோவாக காட்டினார்
அடுத்த ஒரு மணி நேரம் அந்த படத்தின் கேரக்டர்கள் எப்படி இருக்கும் என்பதை சித்திரமாக வரையப் பட்டதை காட்டினார்.
இதன் பின்னர் நடிக நடிகையர்,டெக்னிஷியங்களின் கேள்விகளுக்கு இயக்குனர் பதில் சொன்னார்.
மொத்த சினிமாவும் இப்படிதான் இருக்கும் ,அதில் தங்களின் கேரக்டர்களும் இப்படிதான் இருக்கும் என்பதை நட்சத்திரங்கள் புரிந்து கொண்ட மாதிரி ,டெக்னிசியன்களும் தங்களின் வேலை எப்படி இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டார்கள்.
இதனால் லொக்கேஷனில் நடிக்கும் பொது திருத்தம் சொன்னால் போதும் என்கிற நிலை.
இந்த மூன்று மணி நேர ஒர்க் ஷாப்பை யாரும் படம் எடுக்ககூடாது என்பது இயக்குனரின் கட்டளை.
நல்ல முயற்சிதான்.!

கருத்துகள் இல்லை: