திங்கள், 31 டிசம்பர், 2012

செம்மொழிப் பூங்கா.....காதலர் பூங்கா!

ஆங்கிலப் புத்தாண்டுக்கு எங்கேயாவது போகலாமே?
'செம்மொழிப் பூங்கா போ'-மனம் சொன்னது.
சரி ,எப்படி இருக்கிறது அந்த பொட்டானிகல் கார்டன் என்பதையும் பார்த்துவிடலாம் என்று வண்டியை கட்டினேன்.
டிரைவ் இன் உட்லண்ட்ஸ் என இருந்தபோது அடிக்கடி சென்ற இடம்.இப்போது
ஐந்து ரூபா நுழைவுக்கட்டணம்.
கூட்டம் நிரம்பி இருந்தது.
என்ன வகை மரம் என்பதை ஒவ்வொரு மரத்திலும் எழுதி வைத்திருக்கிறார்கள்.யாரும் அதை கவனித்தமாதிரி தெரியவில்லை.ஆனால் அழகை ரசிக்கிறார்கள்.பசுமையை நேசிக்கிறார்கள்.செல் போனில் படம் எடுத்துக் கொள்கிறார்கள்.
அன்னங்கள் தடாகங்களில்!கரையில் வண்ண வண்ண வர்ண ஜாலங்களில்  பெண்கள்..
சிறுவர்,சிறுமியர் ஓடி விளையாடுவதை பார்த்து பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி .
வளைந்து வளைத்து செல்லும் வழிகளில் பக்கப் பகுதிகளில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளும் இருக்கின்றன.
அந்த பகுதிகளை காதலர்கள் நிரப்பி இருந்தனர்.
ஏறத்தாழ கட்டி அணைத்தபடி ,கன்னங்கள் சேர்ந்தபடி .உதடுகள் உரசியபடி....!
அவர்கள் மாணவ மாணவியராக ,அலுவலகப் பணியாளர்களாக ,தெரிந்தார்கள்.தோற்றம் அப்படி!ஒருவேளை அது தவறாக க் கூட இருக்கலாம்.
"இன்று மட்டும்தான் இப்படியா ,அல்லது வழக்கமாகவே இப்படியா?"-சீருடை அணிந்த பூங்கா பணியாளரிடம் கேட்டேன்.
"தினமும் பார்க்கலாம் சார்"! என்றார்.
"அத்து மீறுதல் உண்டா?"
"உதடுகளுடன் சரி.இதற்காக  வருகிறவர்கள் யார் ,படிப்பதற்காக வருகிறவர்கள் யார் என்பதை பார்த்ததும் தெரிந்து கொள்ளலாம்.அவர்களை நாங்கள் கடுமையாக கண்காணித்தப்படி இருப்போம்."என்றார்.
ஆறுதலாக இருந்தது.
இருந்தாலும் பெற்றவர்களுக்கே தெரியாமல் இப்படி சந்திப்பவர்கள் பூங்கா பணியாளர்களை ஏமாற்றுவது  பெரிய காரியம் அல்ல!
இதைக் காரணமாக சொல்லி பூங்காவை மூடாமல் இருக்க வேண்டும்.அதுதான் எனது கவலை!

ஏனென்றால் அது கலைஞர் கருணாநிதி திறந்த பூங்கா!

கருத்துகள் இல்லை: