ஞாயிறு, 30 டிசம்பர், 2012

சன்னிகளும் பாலியல் வன்முறைகளும்...

உண்மைகளை ஒப்புக் கொள்வது ஆண்மை.!
ஆனால் ஆணாதிக்க சமுதாயத்தில் இது சாத்தியம் இல்லை .
மருத்துவக் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டு கோரமான முறையில் சிதைக்கப் பட்டு  செத்தும் போனாள் !தலைநகர் டெல்லியில் மிகப் பெரிய போராட்டம் நடத்திக் காட்டப்பட்டது .
மாணவியின் மரணத்துக்கு காரணமானவர்களுக்கு தூக்குத் தண்டனை கொடு என ஒரு சாராரும்,மரணதண்டனை தீர்வாகாது என மறு சாராரும் சொல்லி வருகிறார்கள்.பாலியல் வல்லுறவு என்பது இந்தியாவின் தென் கோடியிலிருந்து வட  கோடி வரை பரவிக் கிடக்கிறது.
என்ன கொடுமை என்றால் பச்சிளம் குழந்தைகளைக் கூட பாவிகள் விட்டு வைக்கவில்லை .தமிழ் நாட்டிலேயே  வன்கொடுமை-பாலியல் வல்லுறவுகள்-கொலைகளும்  நடந்திருக்கின்றன.
எவனும் கொதித்ததில்லை '
எந்த கட்சியும் கொடி பிடித்து களம் கண்டதில்லை பத்தோடு பத்தாக கண்டித்து தீர்மானம் போட்டு கையை கழுவிக் கொண்டார்கள் . வாய் நிறைய வீரம் பேசினார்கள் .
பெண்கள் நடமாட முடியவில்லை.இந்தியாவில் ஜனநாயகம் செத்துவிட்டது என்பதாக குரல் எழுப்பினார்கள் இத்தகைய கொள்கை கோமான்கள் சன்னி லியோன்களும் ஷெர்ளின் ஷோப்ராக்களும் நிர்வாண ப் படங்கள் கொடுத்த போது வாயில் நீர் சுரக்க பார்த்து மகிழ்ந்தவர்கள்தானே!இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது பெண்களைப் பற்றி பேசுவதற்கு ?ஜிஸ்ம் 2 படத்தில் சன்னி லியோன் நிறைய மார்புகளை காட்டியபோது சிலிர்த்து ப் போகவில்லையா?
ஷெர் லின் ஷோப்ரா பிளே பாய் பத்திரிகைக்கு முழு நிர்வாண போஸ் கொடுத்தபோது கள்ளத்தனமாக வரவழைத்து வாங்கிப் பார்த்தவர்கள் தானே இவர்கள்?

சினிமாவில் நிர்வாணத்தை வரவேற்று ரசிக்கும் காமரச கண்ணியவான் களுக்கு பெண்களைப்பற்றி பேசும் தகுதி இல்லை.


கருத்துகள் இல்லை: