செவ்வாய், 15 ஜனவரி, 2013

மீரா ஜாஸ்மினின் கருத்து சரியா?

கல்யாணம் என்பது ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்கு இந்த சமுதாயம்  கொடுக்கிற அங்கீகாரம்.
எல்லா மதங்களிலும் -சில  இனங்கள் தவிர -எல்லா இனங்களும் ஏற்றுக் கொண்ட 'பழக்கம்'.
நாகரீகம் 'வளர்ந்து' வருகிற இன்றைய விஞ்ஞான உலகத்தில் சில பழக்க,வழக்கங்கள்,மரபுகள் காணாமல் போகின்றன.
மணமாகாத ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு என சொன்ன இந்த சமுதாயத்தில் இன்று  சேர்ந்தே வேலை பார்க்கிறார்கள்.'பழகுகிறார்கள்'.
உள்ளத்தளவில் ஒன்றாகிப் போனவர்கள் உடலளவில் கலந்தும் போகிறார்கள் .பிறகு பிரிந்தும் போகிறார்கள்.
இதைப் பற்றி அவர்கள் கவலைப் படுவதில்லை.
"மலஜலம் பிரிவதைப் போல உடலுறவும்!!கங்கையில் குளித்தால் எல்லா பாவங்களும் கரைந்து போகிறது என்கிற போது ...நாங்கள் சந்தோசமாக இருப்பதும் பின்னர் பிரிந்துபோவதும் சரிதானே...ஒரு சொம்பு தண்ணீரை கங்கை நீராக நினைத்து பாவத்தைப் போக்கிக் கொள்கிறோம்".என்கிறார்கள்.
"பாவம் எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது என்கிறபோது அந்த பாவத்தை செய்வதில் எங்களுக்கு தயக்கமில்லை "என பேசுகிறார்கள்.
எல்லாமே அவர்கள் வருவாய் ஈட்டும் வரைதான்!
அதன் பின்னர்தான் வருந்தத் தொடங்குகிறார்கள்.
நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம் செய்யவில்லை.
செய்துகொண்டால் என்ன எல்லாம் கிடைக்குமோ அவையெல்லாம் அவரால் அனுபவிக்க முடிகிறது.
அவர் கேட்கிறார்.
"மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு கல்யாணம் 'கியாரண்டி'கொடுக்கிறதா?உறுதி கொடுக்கிறதா?
அப்படி உறுதி கொடுக்காத சம்பிரதாயத்தை ஏற்காமல் வாழ்கிற எங்களால் சந்தோஷமாக வாழ முடிகிறது,எனக்கு கல்யாணம் என்பதில் நம்பிக்கை இல்லை. அதனால் நானும் மாண்டலின் ராஜேசும் சேர்ந்து வாழ்கிறோம்.வழக்கு மன்றம்,விவாகரத்து என்கிற அவஸ்தைகள் இல்லை" என  சொல்கிறார்..
அது உண்மைதானே?
கல்யாணம் செய்து கொண்டபின்னர்  ஆண் வேறு துணை நாடி சென்றதில்லையா?செல்வதில்லையா?
"டி .ஜி.வீட்டுக்குப்  போகிறேன்"எனப் பெருமையாக சொல்கிறான்
ப்ராஸ்ட் டியூட் என சொன்னால் கவரவம் குறைகிறது என நினைத்து 'டெம்பரவரி கேர்ள்  'என்பதை சுருக்கி டி ஜி.என்கிறான்.
ஆக இன,மான உணர்வு பேசுகிற நம்முடைய  மறு பக்கம் நமக்கு தெரியாமல்  வேறு பக்கத்தை எழுதிக் கொண்டிருக்கிறதே.

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...