செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

வீரமும் விவேகமும் சிம்புவின் லட்சணம்.

டி .ராஜேந்தர் எதற்கும் அஞ்சாதவர்.ஆட்சியில் இருப்பவர்களின் ஆத்திரத்துக்கு ஆளாக வேண்டுமே என்கிற அச்சமின்றி அவர்களையும் விமர்சிப்பவர்.
அதனால் இழந்தது எவ்வளவோ..
பிரதிபலன் எதிர்பார்ப்பதில்லை. தவறிழைத்தவனை   தட்டிக் கேட்கும் போது,அவன் நண்பனாக இருந்தாலும் சமரசம் என்பதில்லை.
தமிழனாக ஆண்மையுடன் நிமிர்ந்து நிற்பவர் டி .ஆர்.
இவரின் பிள்ளைதான் சிலம்பரசன்.
அண்மையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வீரத் திருமகன் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் சிங்கள வெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட படம் வெளியாகி இருந்தது.
பன்னிரெண்டு வயதான அந்த பாலகன் ஏதுமறியாமல் அமர்ந்திருப்பதை பார்க்கும்போது நெஞ்சம் நெகிழ்ந்தது.அள்ளி அணைத்து முத்தமிட வேண்டும் போலிருந்தது.
அப்பாவி பாலகனை ஐந்து குண்டுகளால் சாய்த்து வீழ்த்திய மற்றொரு படத்தை பார்த்தபோது........
கொதிக்காதவன் தமிழனே இல்லை.
அந்த படம் வெளியான நாளில் ஐதராபாத் ராமோஜி ராவ் திரைப்பட நகரில்.இருந்தார் சிம்பு.'வாலு 'படத்தின் படப்பிடிப்பு.
பாலகனின் பால்மணம் மாறாத முகத்தை பார்த்ததும் சிம்புவுக்கு கோபமும் சோகமும் ஒரு சேர தாக்கியது.
தன்னால் நடிக்க இயலாது என்பதை உணர்ந்தார் .உணவு துறந்தார்.அன்றைய நாள் கோபத்தின் வெளிப்பாடாக சோகத்தில் புதைந்தது.
இவருக்கு இருந்த உணர்வு பலருக்கு இருந்திருக்கலாம்.ஏனோ தெரியவில்லை வெளிக்காட்டிக் கொள்ள இயலவில்லை.
வீரமும் விவேகமும் சிம்புவின் லட்சணம் !

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

அமீரின் ஆதி-பகவன்

ஆதி பகவன் என பெயர் வைக்கக் கூடாது என எதிர்ப்புக் கிளம்பிய பின்னர் அமீரின் ஆதிபகவன் என பெயர் சூடப்பட்ட படம்.
அந்த படம் ஹிட்டா,பிளாப்பா என்பதை பற்றிய அலசல் அல்ல இது.
ஆதி-பகவன் என்பதன் பொருள் என்ன அது கடவுளரின் பெயரா,இந்து அமைப்பினர் எதிர்த்தது சரியா என்கிற விவாதத்திற்கும் நான் போக வில்லை.
பொதுவாக ஒரு பெயருக்கு தமிழில் பல பொருள்கள் உண்டு.
ஆதிக்கு அதிசயம் இடம்,பழமை,புத்தன் ,பரமசிவன்,புத்தன் என பொருள்கள் உள்ளன.
பகவன் என்பதற்கு குரு,அரன்,புத்தன் என பொருள்கள் இருக்கின்றன.
எனவே கடவுளரைத்தான் குறிக்கிறது என வாதிட முடியாது.
இந்த ஆதியும் பகவனும் யார் தெரியுமா?
வேதியனுக்கும் அருள்மங்கை என்பவர்க்கும் பிறந்தவள் இந்த ஆதி.
இவள் பிறந்ததுமே மண்புயல் அடித்து அந்த ஊரே அழிய இவள் மட்டும் தப்பிப் பிழைக்கிறாள்..பிற ஊர் சென்று பகவன் என்பவனை மணந்து அவ்வை,உப்பை,அதிகமான்,உறுவை,கபிலர்,வள்ளி,வள்ளுவர் என பிள்ளைகளை பெற்று விட்டு செல்கிறாள்.
பகவன் என்பவன் யார்?
பெருஞ்சாகரன் என்பவனின் பிள்ளை.
காசி யாத்திரை புறப்படுகிறான்.இருட்டாகிறது.மேலூரில் ஒரு சத்திரம் .அங்கு தங்கல்.
அங்கே ஒரு பெண் இருக்கிறாள்.அவளை கீழ்சாதிக்காரி என எண்ணி சட்டுவத்தினால் அவளின் மண்டையில் அடித்து விரட்டுகிறான்.
விடிந்தது. காசிக்கு பயணம்.அந்த காலத்தில் காசிக்கு பயணம் என்பது பெரும்பாலும் கால்நடைதானே.மாதங்கள் பல கடந்து காசி சேர்ந்து நீராடி பலமாதங்கள் கழித்து திரும்புகிற வழியில் மேலூரில் அதே சத்திரத்தில் இரவு தங்கல்.
அப்போது ஒருத்தியை பார்க்கிறான்.மயங்குகிறான்.மணந்து கொள்ள விரும்புகிறான்.அவளை வளர்த்தவரின் அனுமதி பெற்று மணந்து கொண்டான்.
அக்கால முறைப்படி மணப்பெண்ணுக்கு மங்கல ஸ்நானம் செய்ய வேண்டும் .
முடியை வகிடு பிரிக்கும் போது காயத்தின் வடு தெரிகிறது.தாழ்ந்த சாதிக்காரி என நினைத்து எவளின் மண்டைய பிளந்தானோ அவள் தான் இப்போது அவனின் மனைவி.ஆதி.!
ஓட ஆரம்பித்தான்.அவள் விடுவதாக இல்லை.தாலி கட்டியவன் ஆயிற்றே ,பின் தொடர்ந்து ஓடினாள்.இருவரும் களைத்து ஒரு ஊரில் தங்க ,இரவில் காமுற்று அவளை புணர பிறந்த குழந்தைதான் அவ்வை.
இவர்கள் பயணத்தில் ஆங்காங்கே தங்கி புணர்ந்து பிள்ளைகளை பெற்றுப்போட்டுவிட்டு போய்க் கொண்டே இருந்தனர் என்கிறது தமிழின் அபிதான சிந்தாமணி.தமிழர்க்கு இருக்கிற ஒரே ஒரு என்சைக்ளோபீடியா.
இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?