வெள்ளி, 29 மார்ச், 2013

அஞ்சலியும் அழுத்தமான முத்தமும்...!

தமிழ்த் திரைப்படங்களில் லிப்-லாக் எனப்படும் பிரஞ்சு முத்தம் மலிவு விலைப் பொருளாகி விட்டது.
முன்னெல்லாம் கன்னத்தில் முத்தமிட்டாலே கலாசாரம் போச்சு என கத்திக்கதறி கூப்பாடு போடுவார்கள்.
காலத்தின் ஓட்டத்தில் கலாசாரம் என்பது சுருட்டி வீசப்பட்ட கிழிந்த காகிதம் !
கணவன் மனைவி இடையே நடப்பதெல்லாம் நடிப்பு என்கிற பெயரில் செல்லுலாயிடில் பதிவாகிக் கொண்டிருக்கிற இந்த காலத்தில் லிப்-லாக் பண்ணி நடிப்பீர்களா என் கேட்பதே அறியாமை !
நடிகையர் அதை இழிவாக நினைக்கவில்லை.
அஞ்சலி என்பவர்தான் தைரியமாக "அப்படி நடிப்பேன்"என டிக்ளேர் பண்ணியிருக்கிறார்.
எத்தனையோ பேர் திரைக்குப் பின்னால் செய்வதை அஞ்சலி தைரியமாக்  பகிரங்கமாக செய்கிறார்.அதற்கு பெயர் நடிப்பு.!
''ஹன்சிகாவுக்கு முத்தம் கொடுத்திருக்கிறாரா ஆர்யா?"என கேட்டால் டைரக்டர் கண்ணன் சொன்ன பதில் "ஹன்சிகா கொடுத்ததை 'சீட்டிங்' பண்ணி எடுத்திருக்கிறோம் .ஆனால் அஞ்சலியின் முத்தம் கதைக்கு அவசியம் என்பதால் லிப்-லாக் பண்ணியிருக்கிறோம்" என்றார்.
"அப்படியானால் முத்தங்கள் தொடருமா" என செய்தியாளர் கேட்க அஞ்சலி எவ்வித தயக்கமும் இல்லாமல் "கதைக்கு தேவைப் பட்டால் நடிப்பேன்" என்று பதில் சொல்கிறார்
ஆக இனி ஒவ்வொரு டைரக்டரும் கதைக்கு முக்கியம் என சொல்லி அஞ்சலியிடம் கால்ஷீட் கேட்பார்கள்
சம்பளமும் உயரும் !
இதுதானே உண்மை.!
பிழைக்கத்தெரிந்த பெண்.
அடுத்து வருகிற நடிகையர் தைரியமாக முத்தம் கொடுப்பார்கள் .இனி தியேட்டர்களில்  எச்சல் வழிந்தோடும்.
தமிழனின் கலாசாரம் என்பதெல்லாம் வளரும் நாகரீகத்தில் முகம் மாறிப் போகும்.
ஏனென்றால் இன,மான ,உணர்வு என்பதெல்லாம் அரசியல் வாதிகளால் கற்பழிக்கப்பட்டு கிழிந்து கிடக்கிறது.இதில் எங்கே கலாசாரம் பற்றிய கவலைக்கு இடம்?

1

ஞாயிறு, 24 மார்ச், 2013

விவேக் நாத்திகரா?

விவேக் நாத்திகரா?
படங்களில் ஆத்திகவாதிகளை  கிழிக்கிறாரே ,அப்படியானால் அவர் கடவுள் நம்பிக்கைக்கு எதிரான ஆளாகத்தானே இருப்பார்?
இப்படியொரு எண்ணம் ரசிகர்களில் பலருக்கும் இருக்கும்.
விமர்சகனுக்கு அப்படியொரு எண்ணம் இருக்காது.இருந்தால் அது அவனின் தனிப்பட்ட வெறுப்பின் விளைவாக இருக்கலாம்.
அவர் நாத்திகர் இல்லை.கடவுளின் பெயரை சொல்லி மூட நம்பிக்கைகளை வளர்ப்பவர்கள் மீது அவருக்கு கோபம் உண்டு.
"குற்றாலத்துக்கு போற வழியில் உள்ள மைல் கல்லுக்கு சந்தனம் பூசி,குங்குமம் வச்சு அதுதான் சாமின்னு சொல்றத கண்டிக்கிறேன்.அந்த குற்றாலநாதரை நான்  கும்பிடுறேன்."என்கிறார்.
இவர் ஷீரடி சாய் பாபாவின்  பக்தர்.வியாழக் கிழமையன்று பாபா கோவிலுக்கு செல்லும் வழக்கம் உண்டு.
சரி, சாமியார்களை நம்புவதும் ஒரு வகையில் மூட நம்பிக்கைதானே?
சாமியார்களை கடவுளின் பிரதிநிதிகளாக எண்ணி வணங்குவதும் தப்புதானே?
நித்தியானந்தரை விவேக் நம்புவது எதன் அடிப்படையில்?
விவேக் மட்டுமில்லை,இன்னும் நிறைய சினிமா பிரபலங்கள் அவரை நம்புகிறார்கள்.
அந்த 'ஆனந்தர்'மீது பாலியல் ரீதியான குற்றசாட்டுகள் வந்த பிறகும்,எப்படி நம்புகிறார்கள்?

புரியவில்லை.

கலைவாணரும் கொலையும்.....!

பிரமுகர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளுக்கு செய்தியாளனாக செல்வதற்கும் ,பார்வையாளனாக கலந்து கொள்வதற்கும் வேறுபாடுகள்  உண்டு.
முன்னதில் பேச்சாளர்களின் பேச்சில் எதைக் குறிப்பெடுக்கலாம் என்பதிலேயே கவனம் இருக்கும்.பின்னதில் ரசித்து  லயித்துப் போகலாம்.
'குமுதம்' குழுமம் அண்மையில் சிறப்புடன் நடத்திய 'நீதியின் குரல்' புத்தக  வெளியீட்டு விழாவில் அதை உணர முடிந்தது.
உச்ச நீதிமன்ற நீதியரசராக இருந்து ஓய்வு பெற்ற மாண்பமை ஏ.ஆர் .லட்சுமணன் அவர்கள் எழுதிய புத்தகம்.
'சிறந்த விமர்சகன்' என்கிற விருதினை பல்லாண்டுகளுக்கு முன்னர் அந்த பெருமகனிடம்  பெற்றிருக்கிறேன் .சினிமா ரசிகர்கள் சங்கம் சார்பில் எனக்கு  வழங்கப் பட்டது.
'குமுதம்'நடத்திய விழாவில் கலந்து கொண்ட வாழ்வியல் கவிஞர் வாலி பேசுகையில் ஒரு  உண்மை  நிகழ்வினை   எடுத்துச் சொன்னார்.
மனதளவில் கூட பிறர்க்கு தீங்கு நினைத்தல் கூடாது என்பதற்கான சான்று அது.!
இந்துநேசன் பத்திரிக்கை நடத்திய லட்சுமிகாந்தன் படுகொலையில் அமரர்கள் எம்.கே.தியாகராஜ பாகவதர்,கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இருவரும் சிறைவாசம் அனுபவித்து திரும்பி இருந்த  காலம்.
நினைவினில் வாழும் நடிகர் வி.கோபாலகிருஷ்ணன்,வாலி இருவரும் ஒரு நாள் ஒப்பனை அறையில் கலைவாணரை பார்க்க சென்றிருக்கிறார்கள் .
கலைவாணர் குடும்பத்திற்கு வாலி  நன்கு அறிமுகமானவர்.
கையை வேண்டும் என  கேட்டாலும் வெட்டிக் கொடுக்கக் கூடிய வள்ளல் கலைவாணர் என்பதால்  .'அவரா கொலை செய்திருப்பார்?' என்கிற ஐயம் வாலியின் மனதில்.
அதை கோபாலகிருஷ்ணனிடம் சொல்லியிருந்தார்.
இருவரும் கலைவாணரை சந்தித்தபோது வாலி இப்படி சந்தேகப் படுகிறார் என கோபி சொல்ல...
கலைவாணர் சற்றும் கோபப்படவில்லை.
"சினிமாக்காரர்களை இப்படி கன்னா பின்னான்னு எழுதுறாங்களேன்னு மனசளவில் நினைச்சன் .வேற எதுவும் இல்ல.அப்படி மனசளவில் நினைச்சதுக்குதான் தண்டனை.அடுத்தவனுக்கு மனசில் கூட தீங்கு நினைக்கக் கூடாது"என கலைவாணர் சொன்னாராம்.
ஆனால் அடுத்தவன் கெட்டுப்போகவேண்டும் என நினைப்பவர்கள்தான் பெரும்பான்மையினராக இன்று  இருக்கிறார்கள்.

ஆம்,இது கலிகாலம்.
ஞாயிறு, 17 மார்ச், 2013

ரஜினியும் அரசியலும்...மோகன்பாபு

ஞாயிறு காலையில் மகள் லட்சுமி மஞ்சு நடித்திருந்த படத்தின் தனி காட்சிக்கு மோகன் பாபு வந்திருந்தார்.படத்தின் பெயர் 'மறந்தேன்,மன்னித்தேன்'
இந்த படத்தில் வருகிற சில காட்சிகள் தங்களை இழிவு படுத்துவதாக சொல்லி ஆந்திராவில்ஒரு பிரிவினர்  போலீசில் புகார் செய்திருக்கிறார்கள்.
இது பற்றி மோகன் பாபுவிடம் கேட்டேன்.
அவர் கையினால் சின்ன வட்டம் போட்டு விட்டு [பூஜ்யம்] "அது ஒண்ணுமில்ல.எந்த முட்டாளும் ஜாதி பேச மாட்டான்.அந்த மாதிரி ஜாதிய சொல்லி ஏமாத்த முடியாது.தாய்க்கு நாலு பிள்ளைக.தமிழ்,தெலுங்கு,கன்னடம் ,மலையாளம்னு நடிகர் சங்கத்தின் சின்னம் இருக்கு.சிவாஜி சார் வளர்த்த சங்கம்.நான் ஒரு ஸ்கூல் ஆரம்பித்தேன்.அதை திறந்து வைத்தவர் சிவாஜி சார்.அந்த பிராஸ்பெக்டில் 'கேஸ்ட் 'என்பதே இருக்காது.அந்த பிராஸ்பெக்டை  முதலில் வாங்கியவர் கமலா அம்மா.அப்படிப்பட்ட நானா ஜாதியை இழிவு படுத்துவேன்"என்றார்.
அவர் பேசுகையில் "நாற்றமெடுத்த அரசியலில் நானும் இருந்தேன்.நாற்றம் தாங்க முடியாம வெளியே வந்துவிட்டேன் "என்று சொன்னதை குறிப்பிட்டு இன்னொரு கேள்வியையும் கேட்டேன்.
"அப்படியானால் ரஜினி அரசியலுக்கு வருவதற்கு தயங்குவதற்கு நீங்கள்தான் காரணமா?''என்றேன்.மோகன்பாபுவும் ரஜினியும் சூப்பர் தோஸ்துகள்.என்பது உலகம் அறிந்தது.
"அந்தாளு இத பத்தி என்னிடம் கேட்க மாட்டார் .நானும் கேட்கமாட்டேன்"என்று எஸ்கேப் ஆகி விட்டார்.
இவரை சினிமாவில் அறிமுகப் படுத்தியது சிவாஜி கணேசன் என்பதை மறக்காமல்  அடிக்கடி நினைவு கூர்ந்ததை கவனித்தேன்,
அரசு நிலம் கொடுத்தும் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டாமல் சாக்கு போக்கு சொல்லிவரும் நடிகர் சங்கத்தையும் நினைத்துப் பார்த்தேன்.
இதைப் பற்றி கேட்கப் பயப்படும் நடிகர்களையும் ........
என்னவென சொல்வது?

"

சனி, 16 மார்ச், 2013

பாலாவின் 'பரதேசி'

இதைப் படிப்பவர்களில் சிலர் கோபப்படலாம்.பலர் மகிழலாம்.அது அவரவர் உணர்வு.அத்தகைய உணர்வை அவர்களின் 'விமர்சனங்களில்' காண நேர்ந்ததால் முன்னதாகவே எனது கருத்து இதுதான் என்பதை பதிவு செய்வது நல்லது..
என்னுடைய மனதில் எழுந்ததை எழுதியிருக்கிறேன்.
'பரதேசி'படம் முடிந்து வெளியில் வந்த போது நான்  கனம் கூடியிருந்தேன்.மனம் கனத்திருந்தது.
இதுவரை தமிழில் இப்படி ஒரு படம் வந்ததில்லை.சிலர் வேறு மாநிலங்களை சுட்டி சொல்லலாம்.அல்லது சர்வதேச நாடுகளை காட்டலாம்.
எனக்கு என் நாட்டவன் -தமிழன் என்ன எடுத்திருக்கிறான் ,சாதித் திருக்கிறான் என்பதுதான் முக்கியம்.
தன்னுடைய படத்துக்கு 'பரதேசி'எனப் பெயரிட்டிருப்பதை என்னிடம்தான் முதன் முதலில் சொன்னார்.அது  'குமுதம்' வாரஇதழில் பேட்டியாக வந்திருந்தது"பாலாவின் கோபத்தில் சொல்லப் பட்டிருக்கலாம்,இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் படம் வந்தபிறகு பரதேசியாவார்கள் என்பதை சொல்லி இருக்கலாம் "என இப்படியெல்லாம் சக நண்பர்கள்விமர்சித்து  எழுதினார்கள்.
ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்தி ஒன்பதுகளில் மக்கள் எத்தகைய நிலையில் வாழ்ந்தார்கள் என்பதை திரையில் காட்டுவது,சொல்வது என்பதுஆய்ந்து சொல்லப் பட வேண்டியது.
1945-ல் மதுரையில் அதிகாலையில் ஒவ்வொரு வீட்டுக்கும் இலவசமாக டீ  கொடுத்தது ஒரு ஆங்கிலேய டீ நிறுவனம்,அந்த வீட்டுக்கு டீ கொடுக்கப் படுகிறது என்பதற்காக ஒவ்வொரு வீட்டு சுவரிலும் அடையாளம் போட்டிருந்தனர்.
கிராப் தலையுடன் பல சிறுவர்கள் இளைஞர்களை அன்று பார்க்கலாம்ஆனால் பெரும்பாலான பெரியவர்கள் வட்டக்குடுமியும்,அரை மண்டையுமாக அதரவா ஸ்டையிலில் இருப்பார்கள் .இதில் பெரும் பணக்காரகளும் அடக்கம்,
ஏழை,பணக்கார்கள் என்கிற வித்தியாசம் இல்லாமல் அன்று இலவசமாக சூடான டீ கொடுத்தது எத்தகைய கொத்தடிமையின் பின்னணியில்  என்பதைபரதேசியில் நான் உணர்ந்தேன்.
பரதேசி நமது வரலாறு-வலி.இதை சொன்னதற்காக விமர்சனம் என்கிற பெயரில் பாலாவை சாடியிருக்கிறார்கள்.
பாலா தனித்து நிற்பவன்.
இதிகாசங்களை தழுவி எடுப்பவன் இல்லை.
மெத்த படித்த மேதாவி அல்ல பாலா.
மணிரதனத்தை விட சிறந்த கலைஞன் .என்பது இந்த தமிழனின் கருத்து,
கடலை விட பரதேசி சிறப்பாக வந்திருப்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கிற ஒரு குழு பாலாவை தூற்றத் தொடங்கி இருக்கிறது.
என்னவோ தெரியவில்லை பாலாவும் மணிரத்னத்தைப் போல நண்பர்களிடம்
விலகியே நிற்கிறார்.

காரணம் தெரியவில்லை.

திங்கள், 11 மார்ச், 2013

கண்ணதாசனின் 'தாய்லாந்து கிளிகள்'

கவிச்சக்கரவர்த்தி கண்ணதாசனை விரும்பாதவர்கள் யாரேனும் இலக்கியவட்டத்தில் இருக்கமுடியுமா?
அவரது கவிதைக்கு மயங்காதவர்கள் இருக்கிறார்களா?
அருவியாக வீழும் பேச்சில் கிறங்காதவர்கள் உண்டா?
இவரைப்போல் எழுதவேண்டும் என்கிற உந்துதலை ஏற்படுத்திய மாபெரும் மனிதன் .
வரலாறு வாழ்த்துகிறது அந்த தமிழ்ப் பேரரசனை.!அவருடைய 'மனவாசத்தை'மறுபடியும் படிக்க வேண்டும் என்கிற எண்ணம் என்னை அழுத்தியது.
எனது சிறிய நூலகத்தில் இருக்கிறது.
எடுத்து வாசித்தேன்.
தாய்லாந்து பெண்களை பார்த்ததும் அந்த புலவன்  எழுதிய கவிதை என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழே..தமிழே!உனதருமை அறியாமல் வாழ்கின்ற தமிழர்களும் தன்னை தமிழர் என்றே சொல்லிவருகிறார்கள்.!இன்னமும் மக்களை ஏமாற்றிக் கொண்டு வருகிறார்கள்.
உனது புகழ் ஓங்குவதற்கு உழைக்க ஒரு சிலர்தான் இருக்கிறார்கள்.
எஞ்சியவர்கள் ஏமாற்றுக்காரர்கள்.
என்ன செய்வது தமிழச்சாதியின் விதி.
ஈழத்தமிழர் வரலாறு எழுதுவதற்கு  உன்னைப்போல எவரும் இல்லை.
அது எம் விதி!
கவிஞர் எழுதிய அந்த கிளிகளை நீங்களும் பாருங்கள்.
"கள்ளரும்பிய வாயிதழ் மழைக் 
      கார் அரும்பிய பூங்குழல் 
உள்ளரும்பிய பல்லணி அதன் 
      ஊடரும்பிய தேன்மொழி 
வெள்ளரும்புகள் பால்நுதல் சிறு 
      விழியரும்புகள் நாடகம் 
தள்ளரம்பையின் சாயலோ இளந் 
      தோளரும்பிய 'தாய்க்கிளி'

பொன்னடங்கிய பெட்டகம் கனி
     போல் அடங்கிய மார்பகம் 
மின்னடங்கிய மெல்லிடை அதன் 
     மேலடங்கிய ஆலயம் 
தன்னடங்கிய முனிவனும் மனம் 
      தானடங்குவ  தில்லைகாண்  
இன்னடங்கிய பாத்திரம் அவள் 
      ஈடடங்கிய  'தாய்க்கிளி'
இன்னமும் இருக்கிறது கவியரசரின் வித்தக வரிகள்.
மனவாசம் வாங்கிப் படியுங்கள்."கள்ளரும்பிய வாயிதழ் மழைக் 

   கார் அரும்பிய பூங்குழல் 
உள்ளரும்பிய பல்லணி அதன் 
  ஊடரும்பிய தேன்மொழி 
வெள்ளரும்புகள் பால்நுதல் சிறு 
  விழியரும்புகள் நாடகம் 
தள்ளரம்பையின் சாயலோ இளந் 
   தோளரும்பிய 'தாய்க்கிளி.'

பொன்னரும்பிய  பெட்டகம் கனி 

   போல் அடங்கிய மார்பகம் 
மின்னடங்கிய மெல்லிடை அதன் 
   மேலடங்கிய ஆலயம் 
தன்னடங்கிய முனிவனும் மனம் 
    தானடங்குவ  தில்லைகாண் 
இன்னடங்கிய பாத்திரம் அவள் 
    ஈடங்கிய  'தாய்க்கிளி'

இன்னும் உள்ள எஞ்சிய கவிதைகளை மனவாசம் வாங்கி படித்துக் கொள்ளுங்கள்.


தமிழ்ச சினிமா மறந்து விட்ட அந்த சரிததிர நாயகனை நாம் மனதில் வைப்போம்.

ஒன்பதுல குரு

ஒப்பனிங்  சீனில் சாங்.
பவர் லாஸ் ஸ்டார் சீனிவாசனின் சகிக்க முடியாத டான்ஸ்.கேமராமேன் புண்ணியத்தால் சிக்-ஜாக் வேலையுடன் முடிகிறது.
அவருக்கு என்ன பவர் என்பது குருவில் தெரிகிறது.பாவம் அவர் என்ன செய்வார் ,வைத்துக் கொண்டு வஞ்சகம் பண்ண!
கதை என்ன என்பதை தேட வேண்டியதாக இருக்கிறது.கதை வசன ம் இயக்கம்  என இறங்கி இருக்கும் நண்பர் பி.டி .செல்வகுமார் இயக்குனர் எஸ்.ஏ .சந்திரசேகரின் நீண்ட கால உதவியாளர்.இளைய தளபதி விஜயின் பி.ஆர்.ஒ.வாக பணி ஆற்றியவர்.இளைய தளபதியின் பேட்டி வேண்டுமென்றால் இவரைத்தான் அணுகவேண்டும்.ஆக திரைப்படத்தின் ஆக்கம் பற்றி இவருக்கு அத்துபடியாக இருக்கிறது.அவரது முதல் படைப்பு என்பதால் ஏகத்துக்கும் நமக்கு எதிர்பார்ப்பு ஏறிக்கிடந்தது.
ஆனால் எங்கே அவர் சறுக்கி இருக்கிறார்?
திரைக்கதையில்,வசனத்தில்,காட்சி அமைப்பில் .இப்படி நிறைய இருக்கிறது.
அவர் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய.
ஒன்பதில் குரு  என்றால் உச்சம் போகலாம் என்பார்கள்.
இங்கே கட்டம் சரியில்லை.அதனால் குரு ஓடிவிட்டார்.

சனி, 9 மார்ச், 2013

இரவுமயக்கம்.

என்னவோ தெரியவில்லை.சனிக்கிழமை இரவு என்னால் மறக்க இயலாத நிகழ்வாக இருந்து விட்டது.
காலையில் நடைப் பயிற்சி செல்லும்போது வழக்கமாக சந்திக்கும் கண்கள்தான்.
மாலையில் பழ அங்காடியில் சந்தித்தபோது அந்த வசீகர கண்கள் என்னுடன் மின்மினியாய் பேசின.இமைகளில் இருந்த கலிங்கம் பளபளத்தது .கருவிழிகள் உருண்டு பக்கம் பார்த்தன.
பாதிப்பு  நேர்ந்துவிடக்கூடாதே என்கிற பயமாகவும் இருக்கலாம்.
கண நேரத்தில் காலையில் கடந்து விடும் கண்களை மாலையில் முழுமையாக பார்க்கநேரிடும் என நினைத்ததில்லை.
ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்க்கும்போது எங்கெல்லாம் அவனின் கண்கள் ஊர்வலமாகச் செல்லுமோ,எனது கண்களும் சென்றன.
அவள் விரும்புகிறாள் என்பதை தலை கவிழ்த்து விழி மட்டும் உயர்த்தி சிருங்காரமாக பார்த்தாள் .
அச்சம் எனக்கு.
வேறு யாரும் என்னை பார்த்து விடக்கூடாதே!
அவளுக்கும் இருந்தது.அடிக்கடி அங்கும் இங்கும் பார்வையை வீசியபடிதான் என்னை கவனிக்கிறாள்.
அவள் நிற்கும் இடம் நோக்கி நகர்ந்தேன்.வாழைப்பூ வாங்கியவள் மெதுவாக பேசினாள் .
அவளுக்கு செழுமையான தேகம்.வணங்காமுடியாக வார்க்கப்பட்ட  ஏராளமான மார்பகம்.
"என்ன பண்றீங்க?"
"உங்கள தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்!"
"ஜோக்கா?"சிரித்தாள் "என்ன வேலை பார்க்கிறீங்கன்னு கேட்டேன்?"
"ஜர்னலிஸ்ட்."[நிருபர்னு சொன்னா கெம்பீரம் இல்லையோ என்கிற நினைப்பு.]
"டை அடிச்சா இன்னும் அழகா இருப்பீங்கன்னு உங்களை பார்க்கிற போதெல்லாம் தோணும்  ,ஆனா சொல்ல முடியிறதில்ல.என்னோட பிரதருக்கு உங்க வயசுதான் இருக்கும்.டை  அடிச்சிட்டா வயச கண்டு பிடிக்கமுடியாது. அவர் ஞாபகம்தான் உங்களைப் பார்க்கிறபோதெல்லாம் வரும்"என்றார் அந்தப் பெண்.
வக்கிரம் ஆண்களிடம்தான் இருக்கிறது.என்பதை உணர்ந்தேன்.அந்த பெண்ணரசியின் பார்வையில் சகோதரத்துவம் இருந்தது.ஆனால் எனது பார்வையில் காமம்.
என்னால் மறக்க இயலாத இரவு.

ஜெயம் ரவியின் மசான கொள்ளை.


 சென்னையின் அழியாத தடங்களாக  இன்னும் இருப்பது மசான கொள்ளை .!சிவ ராத்திரி அன்று பக்தர்கள் ஆவேசமாக இரவில் ஆடிப்பாடுவார்கள்.இத்தகைய காட்சியை பூலோகம் படத்துக்காக ஆஸ்கார் ரவிச்சந்திரன் படமாக்கிருக்கிறா ர்.ஜெயம் ரவி ஆவேசமுடன் நடித்திருக்கிறார்.

ராம்கியின் மறு பிர 'வேஷம்.'

ஒரு காலத்தில் பேசப்பட்ட நடிகர் ராம்கி.தமிழர்.
நடிகை நிரோஷாவுடன் சேர்ந்து வாழ்பவர்.
என்ன காரணமோ தெரியாது அவரை தமிழ் சினிமா மறந்திருந்தது.நடிக்கத் தெரியாதவனெல்லாம் நாயகனாக வெள்ளித்திரையில் வலம் வரும்போது இந்த ராம்கியை மட்டும் படைப்பாளிகள் ஏனோ மறந்துவிட்டனர்.
எத்தனை தடவை போன் பண்ணினாலும் எடுக்கத்தெ ரி யாதவர் இயக்குனர் வெங்கட் பிரபு.இவரின் பார்வையில் எப்படியோ பட்டு பிரியாணியாக மணக்கப் போகிற நேரத்தில் மாசாணியின் அருள் கிடைத்திருக்கிறது.
முக்கிய வேடத்தில் நடிக்கும் இவரது இணை  நடிகை இனியா!
"எட்டு ஆண்டுகால இடைவெளி என்பது நடிகனுக்கு பெரிய தண்டனை.கவலையில் அடிபட்டே முதுமையில் மூழ்கி விடுவான்.?ஆனால் இன்றும் இளமையுடன் இருப்பது எப்படி?"
நண்பர் ஒருவர் கேட்டார்.
"தியானம்.யோகா.மாமிசம் தவிர்த்தல் !"என்றார்.
உண்மைதான் இளமையின் அடிப்படை யோகா வும் ,உணவு முறையும்தான்.
இவர் கூடுதலாக சொன்னது" முடி கொட்டாமல் கொத்தாக இருப்பதாக!"
இடையில் ப்ரொடக்ஷன் துறையிலும் இருந்திருக்கிறார்.
அவரின் வருகை வெற்றியாக அமையட்டும்.

வியாழன், 7 மார்ச், 2013

மதில் மேல் பூனை...நீ .....ள ....மான படம்

அனேகமாக இந்த வருடத்தின் மிக நீளமான படமாக 'மதில் மேல் பூனை'தான்  இருக்கமுடியும்.
இரண்டு மணி நாற்பது நிமிடம்.!
இந்த நேரத்தை கடந்து சாதனை படைக்க வேண்டும் என்றால் அது ஷங்கர் ஒருவரால் மட்டும்தான் முடியும்.ஆனால் அவர் கூட இப்படியொரு கதைக்கு இவ்வளவு நேரம் எடுத்துக் கொள்வாரா?
உண்மைச் சம்பவம் என்கிறார் இயக்குனர் பரணி ஜெயபால்.
பாண்டிச்சேரியையும் தேனி அல்லி நகரத்தையும் .அவர் இணைத்துக் கதை சொன்ன பாங்கு இடைவேளையில் தெரிகிறது.!
நல்ல உத்தி.!
ஆனால் இடைவேளைக்குப் பின்னர் கதையின் பாத்திரங்கள் ஓடுகிற அளவுக்கு கதை ஓடவில்லை.நாயடி,பேயடி வாங்கியும் கை கால் முறிக்கப் பட்டும் மைல் கணக்கில் ஓடுகிறார்கள்.குற்றுயிராக இருக்கிற நாயகன் ஓடுவதும் சண்டை போடுவதும் இயல்பாக இல்லை.
அரும்பிலேயே நச்சு !. வளரும் போது அது சேர்ந்தே உயருகிறது.இப்படி நால்வர்.ஒரு பெண்ணை ஒழிப்பதற்காக அவர்கள் சேர்ந்தே இருபது வருடங்கள் கார்த்திருக்கிறார்கள்.
பொதுவாக புகைப்பவர்களுக்கும் குடிப்பவர்களுக்கும் ஸ்டாமினா இருக்காது என்பார்கள்.இந்த மொடக்குடியர்களுக்கு எப்படித்தான் ஸ்டாமினா இருக்கிறதோ!
இது கூட புகைப்பவர்களையும் குடிப்பவர்களையும் உற்சாகப்படுத்தக்கூடும் .
மதில் மேல் பூனை.
ஒரு பக்கம் வெற்றி
மற்றொரு பக்கம் தோல்வி.
எந்த பக்கம் குதிக்கப் போகிறதோ பூனை?

புதன், 6 மார்ச், 2013

எத்தனை ரஜினிகள் சிவாஜிக்குள்!

எழுபதுகளில் வெளியான 'வசந்த மாளிகை' படத்தினை ஏறத்தாழ இருபத்தி ஐந்து ஆண்டுகள்  கழித்து மறுபடியும் பார்த்தேன்..
வெள்ளி விழா கொண்டாடிய படம்  .தமிழ்த் திரை உலகின் பொற்கால கலைஞர்கள் வாழ்ந்து வரலாறு எழுதிய காலத்தில் வந்த படம்.
பெருமையாக இருந்தது.
இன்றைய கால மாறுதல் ,தலைமுறை இடைவெளி ,இரசனை ,விஞ்ஞான முன்னேற்றம் ஆகியவை  'வசந்த மாளிகை'யை பொருட்படுத்தாமல் போகலாம்.
ஆனால் ஆயிரம் ரஜினிகள் அன்றைய நடிகர் திலகத்திடம் காண முடிந்தது.
இரட்டை முடிவுகள் இந்த படத்துக்கு.!
சிவாஜி இறந்ததாக காட்டப்பட்டதை ரசிகர்கள் ஏற்கவில்லை என்பதால் உயிர் பிழைத்து வாணிஸ்ரீ யை மணந்து கொள்வதுபோல் ஒரு முடிவு தமிழ்நாட்டில்.!ஆனால் கேரளத்தில் சிவாஜி இறந்து விடுவார்.
இப்படி இரட்டை முடிவுகள்.
கதையின் நாயகர்களை பிடித்துப்போனால் ரசிகர்கள் அவர்களை கடவுளுக்கு சமமாக மதிக்கும் போக்கு இன்றும் இங்கு இருக்கிறது.
இது ஏற்புடையது அல்ல ; ஆனால் ரசனை கெட்டுப்போய் வெகு காலமாகி விட்டது
பாலமுருகனின் வசனம் ,கவியரசர் கண்ணதாசனின் வளமிகு வரிகள்,இசையரசர் கே.வி.மகாதேவனின் மெட்டுகள் இவைகளுக்கு சிகரமாக சிவாஜி கணேசனின் நடிப்பு படத்துடன் நம்மை அறியாமல் ஒன்றிப் போகிறோம்.
சில காட்சிகளில் கண்ணீர் வருவதை தவிர்க்க முடியவில்லை
இதயம் கனத்தது.
"இடைவிட்ட பூவினால் கடை வைத்துக் காட்டுவேன்.கனி விட்ட மார்பில் சூட்டுவேன்"
 ""ஓடிவரும் ஓடையிலே-உன்
உள்ளமும் சேர்ந்து மிதந்து வர,
மல்லிகை காற்று மெல்லிடை மீது
மந்திரம் போட்டுத் தாலாட்ட
வள்ளி மலைத்தேன் அள்ளி எழுந்த
வண்ண இதழுன்னை நீராட்ட!"
அடடா...என்ன வருணனை!
வசந்த மாளிகை -