Sunday, March 24, 2013

கலைவாணரும் கொலையும்.....!

பிரமுகர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளுக்கு செய்தியாளனாக செல்வதற்கும் ,பார்வையாளனாக கலந்து கொள்வதற்கும் வேறுபாடுகள்  உண்டு.
முன்னதில் பேச்சாளர்களின் பேச்சில் எதைக் குறிப்பெடுக்கலாம் என்பதிலேயே கவனம் இருக்கும்.பின்னதில் ரசித்து  லயித்துப் போகலாம்.
'குமுதம்' குழுமம் அண்மையில் சிறப்புடன் நடத்திய 'நீதியின் குரல்' புத்தக  வெளியீட்டு விழாவில் அதை உணர முடிந்தது.
உச்ச நீதிமன்ற நீதியரசராக இருந்து ஓய்வு பெற்ற மாண்பமை ஏ.ஆர் .லட்சுமணன் அவர்கள் எழுதிய புத்தகம்.
'சிறந்த விமர்சகன்' என்கிற விருதினை பல்லாண்டுகளுக்கு முன்னர் அந்த பெருமகனிடம்  பெற்றிருக்கிறேன் .சினிமா ரசிகர்கள் சங்கம் சார்பில் எனக்கு  வழங்கப் பட்டது.
'குமுதம்'நடத்திய விழாவில் கலந்து கொண்ட வாழ்வியல் கவிஞர் வாலி பேசுகையில் ஒரு  உண்மை  நிகழ்வினை   எடுத்துச் சொன்னார்.
மனதளவில் கூட பிறர்க்கு தீங்கு நினைத்தல் கூடாது என்பதற்கான சான்று அது.!
இந்துநேசன் பத்திரிக்கை நடத்திய லட்சுமிகாந்தன் படுகொலையில் அமரர்கள் எம்.கே.தியாகராஜ பாகவதர்,கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இருவரும் சிறைவாசம் அனுபவித்து திரும்பி இருந்த  காலம்.
நினைவினில் வாழும் நடிகர் வி.கோபாலகிருஷ்ணன்,வாலி இருவரும் ஒரு நாள் ஒப்பனை அறையில் கலைவாணரை பார்க்க சென்றிருக்கிறார்கள் .
கலைவாணர் குடும்பத்திற்கு வாலி  நன்கு அறிமுகமானவர்.
கையை வேண்டும் என  கேட்டாலும் வெட்டிக் கொடுக்கக் கூடிய வள்ளல் கலைவாணர் என்பதால்  .'அவரா கொலை செய்திருப்பார்?' என்கிற ஐயம் வாலியின் மனதில்.
அதை கோபாலகிருஷ்ணனிடம் சொல்லியிருந்தார்.
இருவரும் கலைவாணரை சந்தித்தபோது வாலி இப்படி சந்தேகப் படுகிறார் என கோபி சொல்ல...
கலைவாணர் சற்றும் கோபப்படவில்லை.
"சினிமாக்காரர்களை இப்படி கன்னா பின்னான்னு எழுதுறாங்களேன்னு மனசளவில் நினைச்சன் .வேற எதுவும் இல்ல.அப்படி மனசளவில் நினைச்சதுக்குதான் தண்டனை.அடுத்தவனுக்கு மனசில் கூட தீங்கு நினைக்கக் கூடாது"என கலைவாணர் சொன்னாராம்.
ஆனால் அடுத்தவன் கெட்டுப்போகவேண்டும் என நினைப்பவர்கள்தான் பெரும்பான்மையினராக இன்று  இருக்கிறார்கள்.

ஆம்,இது கலிகாலம்.
No comments:

இது மகா கேவலம்!

"என்னதான் கோவம் இருந்தாலும் போய்த்தான் ஆகனுங்க. கல்யாணம் காட்சிக்கு போவலேன்னாலும் கேத காரியம் .துஷ்டிக்கு போகணும்!" சர்வ சாதா...