
"தென்றிசையைப் பார்க்கின்றேன்;என் சொல்வேன் என்றன்
சிந்தையெல்லாம் தோள்களெலாம் பூரிக்கு தடடா !
அன்றந்த லங்கையினை ஆண்ட மறத் தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும் தன் புகழை வைத்தோன்
குன்றெடுக்கும் பெருந்தோளான் கொடை கொடுக்கும் கையான்
குள்ள நரிச் செயல் செய்யும் கூட்டத்தின் கூற்றம்
என் தமிழர் மூதாதை !என் தமிழர் பெருமான்."பாவேந்தன் பாரதிதாசன் பாடியது சக்கரவர்த்தி இராவணனை என்றாலும் எனக்கென்னவோ உலகத் தமிழினத் தலைவன் பிரபாகரனை நினைத்துப் பாடியதாகவே உணர்கிறேன்.
1986-ல் முதன் முதலில் சந்தித்தது.'பேபி'யை!எல்லோருக்கும் இவரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
குள்ளமான உருவம்,காலில் செருப்பு இருக்காது.வன்னிக் காடுகளில் வெறும் கால்களுடன் நடந்து தன பாதத்தையும் இறுக்கமாக வைத்திருந்த புலி.
சிங்கள விமானத்தை முதலில் தகர்த்த அஞ்சா நெஞ்சன்.
ஒருநாள் " தம்பி உங்களை பார்க்கணும் "என்று சொன்னார்.
அந்த மாவீரனை என்று காண்போம் என்று ஏங்கிக் கிடந்த எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
ஒரு நாளை.குறிப்பிட்டார்.
நானும் எனது புகைப்பட நண்பர் ஹமீதும் புறப்பட்டோம்.
யாழ் தமிழர்க்கே உரிய வழக்குத் தமிழில் வரவேற்றார்.
பேசினோம் ,நிறைய,
எம் இனம் அந்நியன் சிங்களனிடம் அடிமைப் பட்டுக் கிடக்கும் அவல நிலையை எடுத்துச் சொன்னார்.புகைப் படங்களை கொடுத்தார். அத்தனையும் அன்று முன்னணியில் இருந்த 'தேவி'வார இதழில் தொடர்ந்து எழுதினேன்.
இன்று எவர் எவரோ வீரப்புலிகளின் நேரடி வாரிசுகளைப் போல் வீரம் கொப்பளிக்கப் பேசுகிறார்களே அவர்களெல்லாம் அன்று அஞ்சிக் கிடந்தனர்.
பிரபாகரனை சந்தித்துவிட்டு இனப்படுகொலை நடத்திக் கொண்டிருக்கும் ராஜபக்சேயையும் சந்தித்து பரிசுகள் வாங்கியவர்கள்தான். இவர்களை இன்னமும் தமிழன் நம்பிக் கொண்டிருக்கிறான் .உணர்ச்சிகரமாக குரல் உயர்த்தி பேசுவதெல்லாம் உண்மை என நம்புகிறான்
இனப்படுகொலைக்கு யார் யார் காரணமோ,பதவியை காப்பதற்காக பொய்யாக நாடகமாடி நம்மை திசை திருப்ப பார்த்தார்களோ அவர்களை இந்த தமிழன் இன்னமும் நம்புகிறான்.
இந்த நிலை மாறுமா?
பொய்யர்களுக்கு வாக்களிக்காமல் அவர்களை புறக்கணிப்பார்களா
.