ஞாயிறு, 12 மே, 2013

டி.எம்.எஸ்.ஒரு சித்தரா?ரஜினி சொன்னது என்ன?

தமிழ்ச்சினிமாவில் தனக்கென ஒரு சிம்மாசனம் போட்டுக் கொண்டிருப்பவர் டி.எம்.சவுந்திரராஜன்.எம்.ஜி.ஆர்,சிவாஜி,ஜெமினி ஆகிய மூவேந்தர்கள் வாழ்ந்த காலம்தான் தமிழ்ச்சினிமாவின் பொற்காலம் எனலாம்.இவர்கள் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் சம பலத்துடன் அண்ணா,கருணாநிதி கண்ணதாசன் ஆகியோருடைய ஆதிக்கமும் இருந்தது.மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் -ராமமூர்த்தி ஆகியோர் இன்னிசை ஊற்றாக இருக்கிறார்கள்.இவர்களின் இசையில் பாடியவர்களில் இன்றும் இருப்பவர் டி.எம்.சவுந்திரராஜன்.
அடிக்கடி இமயமலையின் அடிவாரம் செல்லும் ரஜினிகாந்திடம் அங்கிருந்த சில  சித்தர்கள் "டி.எம்.எஸ்.சித்தர் எப்படி இருக்கிறார்?"எனக் கேட்டார்களாம்.நமது பின்னணிப் பாடகரை அவர்கள் சித்தர் என்பதாகவே சொல்கிறார்கள்.