சனி, 31 டிசம்பர், 2016

விஷாலை மிரட்டுகிறவர்கள் யார்?

மிரட்டலும் விரட்டலும் கோலிவுட்டில் நாகரீகமாக மாறிக் கொண்டிருக்கிறது. வன்முறை இல்லாமல்  நிர்வாகிகள் தேர்தலைக் கூட  நடத்த  முடியவில்லை தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், தொழிலாளர்கள் யாராக இருந்தாலும்  அவர்களது அமைப்பில் கோஷ்டிகள் இல்லாமல் இல்லை..முட்டி மோதினாலும் தேர்தலுக்குப் பின்னர் ஒன்றாக இருப்பது  போல ஒரு மாயை.

நடிகர்கள்  சங்கத் தேர்தல் முடிந்து விட்டாலும் இன்றும் ஒற்றுமை இல்லாமல்தான் காலம் கடந்து கொண்டிருக்கிறது.

தற்போது  விஷாலை யாரோ சிலர் ஆசிட் ஊற்றுவதாக மிரட்டி இருக்கிறார்களாம். இதனால் தற்போது கிட்டத்தட்ட  12 தனியார் காவலர்களை  வைத்து இருக்கிறார். வீட்டிலிருந்து யார் வெளியே சென்றாலும் அவர்களுக்கு  இரண்டு காவலர்கள்..

காவல் துறையிலும் புகார் செய்யவில்லை.

அவரை மிரட்டுவது  யாராக இருக்கும்?

விஷால் சொன்னால்தான்  தெரியும்.

வெள்ளி, 30 டிசம்பர், 2016

புத்தாண்டு எப்படி இருக்கும்?

அப்படி இருப்போம்னு உறுதி மொழிகளெல்லாம் எடுக்கிறது உண்டு. சிலர் பெருமைக்காக புருடா விடுறதும் உண்டு. நாம எடுக்கிற உறுதி மொழியெல்லாம் அப்படியேவா நடக்கிறது? நாட்டு நிலைமை நம்மளை  அப்படியே புரட்டி அடிச்சிடுதுள்ள. பிச்சைக்காரனா ஏடிஎம் வாசல்லே  நிப்போம்னு எவனாவது நினைச்சுப் பாத்திருப்பானா? புத்தாண்டுலேயும்  இத விட மோசமா இருக்கப்போவுதுடியோவ்! தமிழ்நாட்டு அரசியல் எப்படி மாறி கெடக்குன்னு தெரியுதா? அந்த திருநள்ளாறு சனி பகவானே வந்தாலும்  தலை எழுத்தை மாத்த முடியாது, குடிக்காதவனா இருந்தியா..இனி அப்படி இருக்காதே ..பாங்கு வாசல்ல ,ஏடிஎம் வாசல்ல ராத்திரியில இருந்து காத்துக்கெடக்கிறதுக்கு சரக்கு அடிச்சிட்டு மயங்கி கெடக்கிறதுதான் வழி!

ஜெயலலிதா செத்தது எப்படின்னு கூட  தெரியாம இருக்கோமே....! அத அரசாங்கமும் மறைக்கிது,மோடி மவராசனும் மறைக்கிறாரு! எங்கே போய் முட்டிக்குவே? இனிமே  இலவச ஸ்கூட்டி எப்ப கெடைக்கும்னு எவனாவது கேக்க முடியும்? கதவு இடுக்கில சிக்கின எலிதான் நாம்ப.!

பணக்காரன் அவன் ஸ்டடியாகிட்டான்.மல்லையாவை நோண்ட முடிஞ்சிதா? மணல்ல கோடிகளை அள்ளுனானுகளே அவனெல்லாம் சுகவாசியாதான் இருப்பானுக,அரசியல்வாதிகளே அவனுக கிட்டத்தானே  காசு வாங்குறானுக..அங்க வாங்கி இங்க தேர்தல்ல நமக்கு கொடுக்கிறானுங்க! இனிமே ஓட்டுக்கு ரெண்டு நோட்டு! பத்து நோட்டு கொடுக்கிற அளவுக்கு சக்தி இருக்கு.அப்பறம் என்ன ..நாடு எக்கேடு கெட்டா நமக்கென்னப்பா?

அப்பறம் நம்ம தமிழ்நாட்டு அரசியல் எப்படி இருக்கும்னு எதிர்பாக்கிறிங்க?
அதே அடிமைகள், அதே விசுவாசிகள்.அவங்கதான் நமக்கு எஜமான்கள்.நம்ம  வாழ்க்கையல எந்த மாற்றமும் வரப்போறதில்ல.!

அதனால இந்த புத்தாண்டுல இருந்து நானும் ஒரு அடிமையா விசுவாசியா மாறுனா என்ன தப்புன்னு கேக்கிறேன்?ராம் மோகன ராவ் வாழ்க.சேகர் ரெட்டி வாழ்க.லோத்தா வாழ்க.

செவ்வாய், 27 டிசம்பர், 2016

தமன்னா....,நயன் பொங்கியது நியாயம்தானா?

பெருமாளுக்கு தேங்காயே ஆகாது என்கிறபோது  தேங்காய்ப் பூ மட்டும் ஆகுமா?

'உங்க அக்கா தங்கச்சியை  பத்தி  இப்படி சொல்ல முடியுமா " என்று கேட்கிற  நயன்தாரா  டூ பீஸ் போட்டுக்கொண்டு வந்தபோது கவுரவமிக்க உங்க குடும்பத்தின்  ரீ ஆக்சன் எப்படி இருந்தது? முதல் காதலன்,இரண்டாவது காதலன் மூணாவது காதலன் என மாற்றி கொண்டபோது  குடும்பத்துப் பெண்கள் கைதட்டி வரவேற்றார்களா? பலே நயன்தாரா என்று பாராட்டுப் பத்திரம் வாசித்தார்களா?உங்களின் சினேகிதியை கேட்டுச்சொல்லுங்களேன்!

கவர்ச்சியைப் பற்றி கண்டனக்குரல் வாசிக்கிற உங்களுக்கு டூ பீஸ் மட்டும் பிடித்தது எப்படி? அதனால்தான் பெருமாளின் தேங்காய்ப்பூ பற்றி சொல்ல வேண்டியதாகிவிட்டது.  தெலுங்கு பிரதேசம் பக்கம் போனால் தமன்னாவின்  கவர்ச்சியினால்  அந்த விசுவாமித்திரன் துறவறத்தை மறுபடியும் விட்டிருப்பான்.

கையளவு கர்ச்சீப் கொடுத்தாலும் கட்டிக்கொள்கிறவர்கள் கவர்ச்சி பற்றி பேசக்கூடாது..அசிங்கமான  மூவ்மெண்ட்ஸ் கொடுத்தாலும் ஆடுகிறவர்கள்  நாகரீகம் பற்றி உபதேசிக்கக்கூடாது.. ஆடைகளை கொடுக்கும்போது முகத்தில் கடாசி இருந்தால் அது பெண்மைக்குப் பெருமை. கிளிவேஜ் காட்டமாட்டேன் என்று கடுமை காட்டி இருந்தால் எவனாவது உங்களை அப்படி நடிக்கச்சொல்லி இருப்பானா?

நயனும் தமன்னாவும் அப்படி பொங்கியதில் அர்த்தம் இல்லை. சுராஜ் பேசியதும் நியாயம் இல்லை.

திங்கள், 26 டிசம்பர், 2016

ஜனவரி 15 க்குள் சசிகலா முதல்வர்!?

அவசர செய்திதான். மேஷம் மீனம் பார்த்து சொல்ல முடியுமா என்ன?

ஜனவரி பதினைந்தாம் தேதிக்குள் சசிகலா முதல்வர் பதவி ஏற்றாகவேண்டும் என்று இன்று பிற்பகல் முடிவு எடுக்கப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன.

அதற்கான ஏற்பாடுகளை வேகமாக செய்து வருகிறார்கள். மதியம் வரை தயங்கிய சசியை  சம்மதிக்க வைத்தது நடராஜன் என்கிறார்கள். கணவன் சொல்வதே மந்திரம் என்று அவரும் தலையாட்டி விட்டார்.

இனி மோடிஜி என்ன பண்ணப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போமாக.!

வாழ்க தமிழ்நாடு. வாழ்க தமிழன்.

பொங்கிய நயன்,தமன்னா...மன்னிப்பு கேட்ட இயக்குநர்!

என்ன பண்றதுன்னே புரியலிங்க. இழுத்துப் போர்த்திக்கிட்டு இடுப்பு மடிப்புக் கூட தெரியாம நடிக்கிற நயன்தாராவும் தமன்னாவும் பொங்கினத பார்த்தால் அந்த பொங்குமாங்கடலே ஓடையாகிப்போகும் !

"எப்படி டைரக்டர் சுராஜ் அப்படி சொல்லலாம். மன்னிப்பு கேள் " என்று கால் கொலுசுடன் நீதி கேட்க கிளம்பி விட்டார்கள்.

டைரக்டர் சுராஜும் பயந்து போயி எங்கே நம்ம சிம்மாசனத்தை கவுத்திப் போட்டு காவு வாங்கிவிடுவார்களோ என பயந்து போயி ஒரு டம்மி அறிக்கையை வெளியிட்டு எஸ்கேப் ஆகிட்டார். அந்த அறிக்கையில் கையெழுத்து இல்லீன்னா அது டம்மிதானே ..இல்ல வேற மாதிரியும் சொல்லலாம்ல! எதுவோ ஒன்னு! விடுங்க,

சரி மேட்டருக்கு போவோம்.!

டிவிட்டரில் எழுதுறவங்களை ஒண்ணா கூட்டி மாநாடு போட்டு பேசிருக்காரு. அப்ப "தமன்னாவை அப்படி கவர்ச்சியா காட்டி இருக்கிங்களே"ன்னு அப்பாவியா  யாரோ ஒருத்தர் கேட்டிருக்கார். அவரு  தமன்னாவின் கவர்ச்சிப் படங்களை  பார்த்தே இருக்கமாட்டார் போல. படு சுத்த சைவம்டா  சாமி.!

"காசு வாங்குறாங்கள்ல. கவர்ச்சியா நடிக்கிறதில தப்பு இல்ல"ன்னு  சொல்லிட்டாராம். உடனே நயன் கொதிச்சிட்டாராம். சிம்பு நயனின் உதட்ட கடிச்சி போஸ்டர் போட்டதெல்லாம் மறந்து போயிருக்கு. கவர்ச்சியா நடிச்ச தமன்னாவும் கண்டன அறிக்கை வாசிக்க சினிமா உலகமே  உறை பனியில  உறைஞ்சு போச்சு. வேற வலி இல்ல, சுராஜ் மன்னிப்பு கேட்டுட்டார்.




ஞாயிறு, 25 டிசம்பர், 2016

சசிகலாவுக்கு ஆர்.கே.நகர் தொகுதி கை கொடுக்குமா?

அடுத்த வீட்டுக்காரன் கோழியில் தன் வீட்டில் பிரியாணி செய்கிறவன்  ஜோஷ்யம் பார்ப்பானா? ஈரத்துணியில் ஒரே அமுக்கில் கோழியை அடக்கி  வீட்டுக்கு  கொண்டு வந்து போட்டுவிடமாட்டானா?

ஆனால் அரசியல்வாதிகள் மட்டும் எந்த காரியம் செய்வதாக இருந்தாலும்  தங்களது ஆஸ்தான  ஜோதிடர்களை கலந்து ஆலோசிக்காமல்  செய்வதில்லை. இதற்கு தமிழகத்தில் எந்த கட்சியும் விதி விலக்கு இல்லை.  தற்போது தலைமையை  யார் கை பற்றுவது என்பதில் அதிமுக வில் ஆதிக்கப்போட்டி நடந்து வருகிறது.

ஜெயலலிதாவின் இடத்தை சசிகலாவினால்தான் நிரப்ப முடியும் என்று கட்சியில் உள்ள பெரும்பான்மையினர் 'நம்புகிறார்கள்'. போயஸ் கார்டனை  கைப்பற்றியுள்ள சசிகலாவை எதிர்க்க எவரும் இல்லை என்கிற நம்பிக்கை  ஒரு பக்கம்.இன்னொரு பக்கம் இன்னும் நாலரை ஆண்டுகள் பதவியில்  இருக்க ஆசை.இதனால் எல்லோரும் அவரை சின்னம்மா என்றே அழைக்கிறார்கள். அவரும் ஜெயலலிதா அமர்ந்திருந்த ஆசனத்தில் அமர்ந்தே  சந்தித்து வருகிறார்கள்.

முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு மத்திய அரசு ஆதரவு இருப்பதால் சிலருக்கு  அவரை எதிர்க்கவும் முடியவில்லை. சசிகலாவை விட்டு விலகவும் முடியவில்லை. இந்த நிலையில்தான் ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல். ஜெயலலிதா நின்று வெற்றி பெற்ற அந்த தொகுதியில் சின்னம்மாவும் நிற்க வேண்டும்  என்கிற பேச்சு அதிமுக மேல்மட்ட தலைவர்களின் கருத்தாக இருக்கிறது.

ஆனால் ஜெயலலிதாவின் ஆஸ்தான சோதிடர் கருத்து வேறாக இருப்பதாக  ஓர் ஆங்கில இணையம் தகவல் சொல்லி இருக்கிறது.

விஜயகாந்தின் முதல் வெற்றி விருத்தாசலத்தில் தொடங்கியது  அந்த தொகுதியில் சின்னம்மா நின்றால்தான் ஜெயிக்க முடியும் என்பதாக ஜோதிடர் கருதுவதாக சொல்கிறார்கள்.அந்த தொகுதியில்தான் ஜெயலலிதாவின் பேச்சை கேட்பதற்காக மாபெரும் கூட்டம் கூடியது. நெரிசலில் ஒருவர் மாண்டார்.பலர் காயமடைந்தனர்.பாமகவின் கோட்டை எனப்படும் அந்த தொகுதியில் யாருடைய சப்போர்ட்டும் இல்லாமல் விஜயகாந்த்  ஜெயித்ததை  மாயை என ஜெ. நிரூபித்தார் அல்லவா! ஆகவே ஜோதிட கட்டங்கள்  சசிக்கு விருத்தாசலம் தொகுதியை கை காட்டுவதாக சொல்வதாக அந்த இணைய தளம் எழுதி இருக்கிறது.

சசிக்கு வெற்றி எந்த தொகுதியில் என்பது தற்போது  பரிசீலனையில் !

பார்க்கலாம்.

இந்த வருடம் எம்.ஜி.ஆரின் நினைவு நாள்  முன்னைப்போல சென்னையில்  நடக்கவில்லை. எப்படியும் தெருவுக்கு பத்து பேராவது எம்.ஜி.ஆரின் படத்தை வைத்து விளக்கு ஏற்றி இருப்பார்கள் .அந்த காட்சியை இந்த ஆண்டு பார்க்க முடியவில்லை. நினைவு நாள் சுவரொட்டிகள் பெரும்பாலும் ஆர்.எம்.வீரப்பன் ,ஏ.சி.சண்முகம் வெளியிட்டதாவே இருந்தன, சில இடங்களில் திருநாவுக்கரசர் படத்தை போட்டு காங் கட்சியினர் சுவரொட்டிகள் ஒட்டியிருந்தனர்.ஆக தொண்டர்கள் மத்தியில் சசிக்கு ஆதரவு இருப்பதாக தெரியவில்லை.

வெள்ளி, 23 டிசம்பர், 2016

பன்னீர்செல்வம் மோதுவதற்கு தயார்!

எத்தனை நாளைக்குத்தான் கையைக்கட்டிக் கொண்டு முட்டியிட்டு மடிப்பிச்சை கேட்பது  மாதிரி .....அது ஜெயலலிதாவுடன் முடிந்து விட்டதடா சாமி  என்று இப்போது சிலிர்த்து எழுந்து இருக்கிறார் ஒ.பி.எஸ்.!

"சின்ன அம்மா, நடு அம்மான்னு சொல்லி யாரும் குட்டையை குழப்பக்கூடாது. என்  தலைமை  பிடிக்காதவர்கள் தயவு செய்து  ஒதுங்கி விடுங்கள். தலைமை செயலர்  வீட்டில் சோதனை நடந்தது அமைச்சரவைக்கு அவப்பெயரை கொண்டுவந்து விடக்கூடாது .அரசுப்பணிகளில் தீவிரக்கவனம் செலுத்துங்கள்" என்று அமைச்சரவைக் கூட்டத்தில் கர்ஜித்ததாக சொல்லுகிறார்கள். முக்குலத்து சிங்கத்திடம் மோதக்கூடாது என சில அமைச்சர்கள் அமைதியாகிவிட்டார்கள் என அதிமுக வட்டாரத்திலேயே பேசிவருகிறார்கள். தம்பிதுரைக்கும் முதல்வர் ஒ.பி.எஸ்.க்கும் அவ்வளவாக  ஆகவில்லை என சொல்லுகிறார்கள். பிரதமரை சந்திக்க சென்றபோது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கசந்து பிரிந்திருக்கிறார்கள். என்கிறார்கள்.

பொதுக்குழு முடிவுகளை தொடர்ந்து மத்திய அரசின் நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள். திமுக தலைவர் உடல்நலம் பெற்றுவந்ததையும் ,வீடு திரும்பியதையும் படம் பிடித்து காட்டி விட்டார்கள். ஆனால் அம்மா சிகிச்சை பெற்றது பற்றி ஒரு படம் கூட காட்டவில்லையே என்கிற ஆதங்கம் கட்சிக்காரர்களுக்கு மட்டுமில்லை.மக்களுக்கும் வந்திருக்கிறது.சந்தேகமும்  வலுத்திருக்கிறது.

இந்த நிலையில்தான் ஒ.பி.எஸ். கடுமை காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். திமுக .இவர் மீது கடுமையாகத்தான் இருக்கிறது,  

மக்கள் மத்தியில் சசிகலாவுக்கு ஆதரவு இருக்கிறதா?

தினமும் சர்வ மதத் தலைவர்களும், ஊடக அதிபர்களும்,படைத்துறையை சார்ந்த சகலரும் சசிகலாவை சந்திப்பது மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் மன மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறார்கள்.

கவுரவர்கள் கட்டிய மாய மாளிகையை விட  பலவீனமானது அவர்களது நம்பிக்கை.  மக்கள் மிகத் தெளிவாகவே இருக்கிறார்கள்.அமைச்சர்களும் அவரது சார்பான சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ,இன்னும் பல பொறுப்புகளிலும் இருக்கிறவர்கள் தங்களது பதவிகாலம் முடியும் வரை அதனுடைய சுகத்தை இழக்கவிரும்பவில்லை. மிச்சம் இருக்கிற நாலரை ஆண்டு காலமும் தங்கச்சுரங்கம்.அதனாலேயே இந்த ஆதரவுப் படலம்!. ஆட்சி ஆட்டம் காணுமேயானால் பழ மரத்தை நாடி ஓடிவிடுவார்கள்.

அதிகாரம் போய்விட்டால் அதனுடைய விளைவுகள் ?

தலைமைச்செயலரையே புழலுக்கு அனுப்பிய மத்திய அரசு தங்களை சுழற்றி சுழற்றி அடிக்காதா என்ன!

அப்பல்லோவில்  முதல்வர் ஜெ இருக்கும்போது மண் சோறு சாப்பிட்ட உருக்கம் என்ன...கண்ணீர் வற்றும் வரை கதறி அழுத சோகம் என்ன..தங்கத்தேர் இழுத்தார்கள். கோவில் கோவிலாக யாகம்,சிறப்பு வழிபாடுகள் என புகைப்படங்களுடன் விளம்பரம் கொடுத்தார்கள்.

ஆனால் அம்மா இறந்து விட்டார் என்றதுமே யாரும் கதறவில்லை.மயக்கம்  அடையவில்லை.அப்பாவி தொண்டர்கள்தான் கதறினார்கள்
.கத்தினார்கள்.பலர் மாரடைப்பினால் மாண்டார்கள்.ஆனால் அமைச்சர்களும் மற்ற பெருமக்களும்  சட்டையை மாற்றுவதுபோல விசுவாசத்தை சசியின் பக்கமாக திருப்பிவிட்டார்கள்.அடடா என்னே உருக்கம். என்னே கலக்கம்!

ஊரெங்கும் 'சின்னம்மா வாங்கம்மா...அனாதைகளாக நிற்கிறோம் .தலைமை பொறுப்பு ஏற்று காப்பாற்றுங்கள் சின்ன அம்மா!" என சுவரொட்டிகள். சசியை முன்னிறுத்தி ஜெ.யை பின்நிறுத்தி படங்கள்.அவர்கள்தான் அம்மாவின் நிரந்தர விசுவாசிகள் அடிமைகள் என முன்னர் சுவரொட்டிகளில் சத்திய  பிரமாணம் செய்திருந்தவர்கள். எவ்வளவு சுலபமாக சத்தியத்தை வசதிக்கு ஏற்ப மாற்றுகிறார்கள். அவர்களுக்கு சத்தியம் என்பது  சால்னா கடை முட்டை பரோட்டா!

ஆனால் தொண்டர்கள் சசியை நம்பவில்லை.மக்களும் நம்பவில்லை .காதுபடவே பலவிதமாக பேசுகிறார்கள். அடுத்த ரெய்டு சசிகலாதான் என்று  விகடன் குழும ஏடு செய்தி போடுகிறது. சோ வின் துக்ளக் சசிக்கு கண்டித்து எதிர்த்து தலையங்கம் தீட்டுகிறது.

இவ்வளவும் தெரிந்தும் திரை உலகை சேர்ந்தவர்கள் ஊர்வலம் நடத்தி ஷோ காட்டுகிறார்கள். ஜெ.ஆட்சியின் போது போயஸ்கார்டன் கேட்டில் கூட நிற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டவர்கள்தான் திரை உலகத்தினர். எந்த சலுகையும் அரசு அளிக்கவில்லை என்றாலும் நடிகர்கள்தானே..வேஷம் மாறுவதற்கு தயங்காதவர்கள். வீர வசனங்கள் பேசுவதில் வல்லவர்கள்.

வியாழன், 22 டிசம்பர், 2016

மோடியின் திட்டத்தால் சாதாரணமக்கள் அவதி!

'எல்லோரும் இந்நாட்டு மன்னர் ' என்றனர் இந்தியா விடுதலை பெற்ற பிறகு.!

ஆனால்அரசியல்வாதிகள்தான் மன்னர்களானார்கள். மக்கள் வழக்கம் போல ஏழைகளாகவே  வாழ்க்கையை தொடங்கினார்கள். இன்று வரை அது  செழிப்பாகவே வளர்கிறது.அவர்களுக்கும் ஏழ்மை பழகிப்போய்விட்டது.

இருந்தாலும் மக்களை தொடர்ந்து ஏமாற்றுவதில் தலைவர்களுக்கு தனித்த சுகம். அதனால் 'வறுமையே வெளியேறு' கரிபி கடோ என்கிற புதிய மந்திர சொல்லை புகுத்தினர். அதையும் நாடு நம்பியது.ஏழை மோழையாகி விட்டதால்  வறுமையை  சாமான்யனின் நிரந்தர சொத்து என்பதாக தலைவர்கள் எழுதிவிட்டார்கள்.

நீ ஏழையாக இருப்பதற்கு கறுப்புப்பணம்தான் காரணம் என்பதை காலம் காலமாக சொல்லிவந்த---வருகிற   அரசியல்வாதிகள் அதை ஒழிப்பதற்கு என்ன செய்தார்கள்?

ஆங்கிலேயர்கள் அவர்களது ஆட்சி காலத்தில் 1934-ல் 500,1000 ரூபாய் தாள்களும் 1938-ல் 10 ஆயிரம் ரூபாய் தாள்களும் வெளியிட்டனர். பின்னர்  அவர்களே 1946-ல் 1000,10 ஆயிரம் ரூபாய் தாள்கள் செல்லாது என அறிவித்தனர். அதிக மதிப்புள்ள தொகை என்பதால் ஏழைகள் பாதிக்கப் படவில்லை. பணக்காரர்கள்தான்  பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.         அதனால் மக்களும்   அதைப்பற்றி  கவலைப்படவில்லை.

இந்தியா விடுதலை அடைந்த பின்னர் மொரார்ஜி தேசாய் தனது பதவி காலத்தில் 1000,5000,10 ஆயிரம் ரூபாய் தாள்களை புழக்கத்தில் இருந்து விலக்கி உத்திரவு பிறப்பிக்க அதற்கு ரிசர்வ் பாங்கு கவர்னர் படேல் ஆதரவு தரவில்லை.மக்களும் பாதிக்கப்படவில்லை.

ஆனால் 2016 டிசம்பர் 8-தேதி இரவில்  வெளியிட்ட ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் தாள்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்த அறிவிப்பு அடித்தட்ட மக்களை கொல்லாமல் கொன்று வருகிறது. அரசின் புதிய ரூபாய்தாள்கள் முன்னதாகவே பணக்காரர்களுக்கு  போய் சேர்ந்திருக்கிறது. அரசு அதிகாரிகள் தவறான வழிகளில் வங்கிகளிடம் இருந்து பெற்றிருக்கிறார்கள். தமிழக அரசு அனுமதி பெற்ற காண்ட்ராக்டர் சேகர் ரெட்டியிடம் கோடி கோடியாக புதிய தாள்கள் ,தலைமைச்செயலர் ராம் மோகனராவ்,அவரது மகன்,மற்றும் உறவினர் வீடுகளில் வரலாறு காணாத சோதனை.கறுப்புப்பணம் கைப்பற்றல் என தமிழகமே அவமானத்தில் தலை குனிந்து நிற்கிறது.

இந்த முறைகேடான மெகா ஊழலுக்கு  யார் காரணம்,எவருடைய தலைமை காலத்தில் அரங்கேறியது என்பதை மக்களுக்கு தெரிவித்தாக வேண்டும்.

''என் கண் முன் நில்லாதே..போ"

"கம்பனை  மட்டுமே  படிக்க வேண்டுமா...அவன்  எதைத் தழுவினானோ , அதையும்  சற்று  படி...முழுமையும்  படிக்கத்தேவை இல்லை. இலக்குவனை நோக்கி சீதை கடிந்து சொன்னதை மட்டும் படித்துப்பார். தமிழ்ப்பண்பாடு  மீது   கம்பனுக்கு இருந்த காதல்  உனக்குப்  புரியும்"

சொன்னவர்  வேறு  யாரும் இல்லை. எனது  மதிப்பிற்குரிய  சகோதரர்  சிவகுமார் தான்!

அவருக்கு கம்பனின் மீது எத்தகைய காதல் இருந்தது என்பது எனக்குத் தெரியும். அவரது  இராமாயண படைப்புக்கு  'கம்பன் என் காதலன்" என  தலைப்பு   சூட்டியது  நான்தான்.! முப்பத்தைந்து வருட காலம்  நாங்கள்  நண்பர்கள். நல்ல நண்பர்கள். இன்று வரை  கசப்பு இன்றி  தொடர்கிறது. இனியும்  தொடரும்.

அவர் சொன்னதின் பேரில்  வால்மீகியை  தொட்டேன். இலக்குவனை சீதை  கடிந்து சொன்னது  எந்த படலத்தில் என்பது  தெரியும். 

மாரீசன் வதை படலத்தின்  தமிழாக்கம்  தேடிப்பிடித்து  வாசித்தேன்.

தன்னைக் காத்து  நிற்கும்  இலக்குவனைப் பார்த்து  ஜானகி  இப்படி  சொல்கிறாள்.;

"இராமன்  அழிகையில் அவனை காக்க  கருதாமல் கவலையற்று  என்னைக் காத்து  நிற்றல் யாது பயன்  கருதியது?

என்  தலைவனுக்கு ஆபத்து நேர்ந்தவிடத்து என்னை பெண்டாள கருதியே நீ  உன் மனைவியை அயோத்தியில் விட்டு விட்டு தனியே தொடர்ந்து வந்தாய். நான் உன்னை ஒரு பொருளாக மதியேன். இனி என்  நில்லாதே போ !"

எத்தகைய  சீற்றம்  அவளது  பேச்சில்!

ஆனால்  கம்பன்  இதைப்பற்றி  கண்டு கொள்ளவே  இல்லை. இராமன்,இலக்குவன், சீதை  மூவரையும்  உயர்வாகவே  பார்த்தான். களங்கம்  விளைவிக்க  அவனது  தமிழ்ப்பண்பாடு  இடம் தரவில்லை.

லட்சுமண் ரேகா  என்று  சொல்லப்படுகிற  லட்சுமணன்  கோடும் கம்ப காவியத்தில் இல்லை. 

திங்கள், 19 டிசம்பர், 2016

ஓ.பி.எஸ்.சின் முதல்வர் பதவி காலியாகிறதா?

அப்பல்லோவில் முதல்வராக ஜெயலலிதா சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டதுமே பின்னணியில் ஒரு வலையும் அதன் தொடர்பாகவே  பின்னப்பட்டிருக்கிறது என்பது தற்போதுதான் உணரப்படுகிறது.

ஜெயலலிதாவினால் இரண்டு தடவை முதல்வராக பொறுப்பில் நியமிக்கப்பட்டவர்தான் தற்போதைய முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்.
அதிமுகவினரால் அம்மா என அழைக்கப்படுகிற ஜெயலலிதாவே ஒ.பி.எஸ்.சை நம்பியிருக்கிறபோது அம்மாவின் மறைவுக்குப் பிறகு  சசிகலாவை  அந்த பதவியில் அமர்த்தவேண்டிய  அவசியம் என்ன?
ஒ.பி.எஸ்.சின் மீது நம்பிக்கை இல்லாமல் போவதற்கு  என்ன காரணம்,? ஓட்டுப் போட்ட சாமான்யனின் கேள்விதான் இது!

பதவியில் இருந்து கொண்டிருக்கிறவர்களைத் தவிர மக்களின் ஆதரவு யாருக்கு என்பது தெரியவில்லை. கட்சியில் பலரின் எதிர்ப்பு சின்னம்மா என்கிற சுவரொட்டியை கிழிக்கிற அளவுக்கு இருக்கிறது என்பதை சென்னையில் பல இடங்களில் பார்க்க முடிகிறது.

முதல்வராக ஓபிஎஸ் இருந்தாலும் சின்னம்மாவின் கட்டளைக்குத்தான் அரசு அதிகாரிகள் கட்டுப்படுகிறார்கள்.இது உலகம் அறிந்த உண்மை.இந்த அளவுக்கு பதவியில் இல்லாமலேயே அதிகாரத்தை கையில் வைத்திருப்பதின் ரகசியம் என்ன? இதனால்தான் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா எத்தகைய நிலையில் அனுமதிக்கப்பட்டார், வீடு திரும்புவார் என தினமும் ஒரு அரசியல்வாதி அறிக்கை வாசித்தபின்னர்  திடீரென ஒருநாள் கார்டியாக் அரெஸ்ட் என மாறியது ஏன் என்பது போன்ற பல விஷயங்கள் முழுமையாக தெரியாமல் மர்மமாக இருக்கிறதா?

மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிவருமா என்பது தெரியவில்லை.ஆனால்  ஓபிஎஸ் பதவி பறிக்கப்படலாம் என்பதற்கு பின்புலமாக இருப்பவர் நடராஜன் என்பதாக ஒரு பேச்சு இருக்கிறது. இவர்தான் மத்திய மாநில அரசு எந்திரங்களை முழுமையாக கையாளத் தெரிந்தவர் என்பது அறிந்திருக்கிற உண்மை!

மத்திய அரசு ஓபிஎஸ்.சை கைவிடாது .ஆளுநர் துணை நிற்பார், உள்துறை அமைச்சகமும் சில நெருக்கடிகளை கொடுக்கும் என சிலர் நம்புகிறார்கள்.

பார்க்கலாம் யாருடைய நம்பிக்கை பலிக்கும் என்பதை!

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

கேரள மாணவர்களின் 'ராகிங்' கோரம்.

"சாப்பிட்டதும் உடனே தூங்கிடனுமா? வாங்கடா!"

கோட்டயம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆஸ்டலில் சேர்ந்த  ஜூனியர்களை தங்களது அறைக்கு வலுக்கட்டாயமாக கூட்டிக்கொண்டு போகிறார்கள் சீனியர்கள்.

"ம்ம்.....அந்த மூலையில போய் உக்காருங்க!"

உட்காருகிறார்கள்.

'' இப்ப எந்திரிச்சு  ஒத்த கால்ல நில்லுங்க!"

நிற்கிறார்கள்.

"ரைட். இப்ப நூறு புஷ்-அப்,  நூறு சிட்-அப்  எடுங்க!"

சிலர் களைத்துப் போகிறார்கள்.சிலர் மயங்குகிறார்கள்.

"பத்து நிமிஷம் ரெஸ்ட் எடுத்திட்டு மறுபடியும் ஆரம்பிங்கடா!"

அதில் அவினாஷ், சியூஜி  இருவரும் மோசமாக பாதிக்கப்பட்டாலும் சீனியர்கள் கவலைப்படவில்லை.!

"ஓகே! இப்ப சீனியர்கள் கெட்ட வார்த்தையில பாடுவாங்க. அத மறக்காம நீங்க  பாடனும். புரியிதா?"

தலையாட்டுகிறார்கள்.ஆனால் அவர்களால் முழுமையாக பாட முடியவில்லை. விடிகாலை மூன்று மணிக்கு பாடி முடித்ததும் அப்படியே  அள்ளிக்கொண்டு பாத் ரூமுக்கு போகிறார்கள். குளிக்கச்சொல்கிறார்கள்.

"சரி..இப்ப தண்ணி அடிக்கணும். அதுவும் ராவா! மிக்ஸ் பண்ணக்கூடாது."

வாந்தி எடுத்தவர்களுக்கு  சரமாரியாக அடி உதை!

ஆகஸ்ட் மாதம் கோட்டயம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த இந்த ராக்கிங்கில் முன்னாள் மாணவர் ஒருவரும் சம்பந்தப்பட்டிருக்கிறார்.

அவினாஷ் ,சியூஜி இருவரில் அவினாஷ் கிட்னி பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் டயாளிஸ் சிகிச்சையில்! மற்றொருவர் தீவிர சிகிச்சையில்!

மாறுபட்ட அரசியல் சார்ந்த மாணவர்களை தண்டிக்க இப்படிப்பட்ட ராக்கிங் நடப்பதாக சொல்கிறார்கள். தொடர்புடைய மாணவர்களை போலீஸ் தேடுகிறது.

ராக்கிங்கே தப்பு. இதில் அரசியல் வேறயா? விளங்கும்.

சனி, 17 டிசம்பர், 2016

திருநாவுக்கரசரும் வெள்ளை அறிக்கையும்!

ஆதாயம் இல்லாமல் யாரும் கள்ளக் கணக்கு எழுதுவதில்லை.

அரசியலும் அப்படித்தான்.

 பெருந்தலைவர் காமராஜரின் தலைமைக்குப் பின்னர் தமிழக அரசியலில் காங்.கட்சி சரிவையே சந்தித்து வருகிறது. தலைமைகள் மாறினாலும் வளர்ச்சி என்னவோ கோஷ்டிகளைதான்  வளப்படுத்துகிறது. ஆனாலும்  அகில இந்திய அளவில் ஆள்வதற்கு உரிய வாய்ப்பு  இருப்பதால் மாநில கட்சிகளுக்கு தேசிய கட்சிகளின்  உதவி தேவையாக இருக்கிறது.இதனால்தான் பா.ஜ.க., காங் .ஆகிய கட்சிகளுக்கும் திராவிடக் கட்சிகளின் தோள் அவசியப்படுகிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் மண்டிக் கிடக்கிறது , உண்மை புதைக்கப்பட்டிருக்கிறது என்பதாக மக்களும் கட்சிகளும் நினைப்பதால்  வெள்ளை அறிக்கை கேட்டிருந்தார் டாக்டர் ராமதாஸ்.

இதை பாஜக ரசிக்கவில்லை.

பாராளுமன்றத்தில் அதிமுகவின் எண்ணிக்கை பெருமளவில் இருக்கிறது.மற்ற எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளும் கேடயமாக அதிமுகவை பயன்படுத்துவதற்கு ஜெயலலிதாவின் மரணம் பாஜகவுக்கு உதவி இருக்கிறது.. செல்லாத நோட்டுகள் அறிவிப்பு பற்றி அதிமுக மவுனராகம் வாசிப்பதும் பயத்தின் விளைவுதான்! ஜெ.வின் மரணத்தில் மர்ம முடிச்சுகள் இருப்பதாக  சந்தேகிப்பதற்கு எத்தனையோ காரணங்களை ஊடகங்கள் எழுப்பியிருக்கின்றன..இவைகளுக்கு விடை கிடைக்குமா என்பது ஐயமே!

காங்.கட்சியின் தமிழக தலைமை பொறுப்பில் நியமிக்கப்பட்டிருக்கிற திருநாவுக்கரசர்  "வெள்ளை அறிக்கையாவது, கறுப்பு அறிக்கையாவது  அறிக்கை வெளியிட்டால் ஜெயலலிதா உயிருடன் திரும்புவாரா?" எனக்  கேட்டிருப்பது அகில இந்திய தலைமையின் கருத்தாக இருக்காது . முன்னாள் தலைவர் இளங்கோவன் சொல்லியிருப்பதிலிருந்து அது திருநாவுக்கரசரின் சொந்த கருத்து என்பதாகவே நினைக்க முடிக்கிறது..

 திமுக அலைவரிசையிலிருந்து காங்.கட்சியை அதிமுக அலைவரிசைக்கு  மாற்றுகிற முயற்சியாகவே தெரிகிறது. இந்த முயற்சியின் பின்னணியில் ம.நடராஜனின் ராஜ தந்திரமும் இருக்கலாம். காங்.கட்சியின் கொள்கையான  அடிப்படைக் கொள்கையிலிருந்து திருநாவுக்கரசர் மாறுபட்டு விட்டாரோ என சந்தேகம் வருகிறது.சொந்த அபிமானம் .வேறென்ன சொல்ல முடியும்!

ம.நடராஜன் நினைப்பது நடக்கும் என்றே தெரிகிறது.

பக்தா..என்னவரம் வேண்டும்....கேள்?

மன்னாரின் சேட்டைகள்.(2.)

கடவுள்:  " பக்தா! என்ன வரம் வேண்டும்? கேள்"?

மன்னாரு: "அமெரிக்காவுக்கு  ரோடு போடணும் கடவுளே!"

கடவுள்: " கடல் மீதெல்லாம் ரோடு போட முடியாது மகனே!"

மன்னாரு: "அப்ப என் மனைவி என்னை எதிர்த்துப் பேசாமல் இருப்பதற்கு அருள் புரிவாய் ,அப்பனே!"

கடவுள்: ( பதறிப்போய்) " அமெரிக்காவுக்கு ஒரு வழிப்பாதையா,
இருவழிப்பாதையா?"
____-----------------------------------------------------------------

மனைவி.: " நகைகளுக்கும் மோடி உச்ச வரம்பு கொண்டு வரப்போகிறாராமே? என் நகையில பாதியை எங்கம்மாவிடம் கொடுத்து பத்திரப்படுத்தவா?"

மன்னாரு.: " அத  எங்கம்மாகிட்ட கொடுக்கலாமே?"

மனைவி.: "அந்த கிழவிக்கு எதுக்கு அவ்வளவு நகையை கொடுக்கணும்?"
--------------------------------------------------------------------

தயாரிப்பாளர்.: "கதைக்கு என்ன டைட்டில் வச்சிருக்கே?"

மன்னாரு.: "இளம்பெண்ணும் ஏடிஎம்மும்!"

தயாரிப்பாளர்.: "சூப்பர்.! ஒப்பன் பண்ணுனா கிலோமீட்டர் தூரம் கியூ! ஹீரோயின் டைட் டாப்ஸ் ,லேக்கிங்க்ஸ்ல வர்றா! ஹீரோ அவளுக்கு  இடம்  கொடுக்கிறான். மத்தவங்க எதிர்த்து குரல் விடுறாங்க. சரக்னு கத்தியை காட்டுறான்.அடங்கிப் போறாங்க. அப்பத்தான் ஒரு வயசான அம்மா அவனை  நோக்கி வர்றாங்க. தாங்க்ஸ்பா .சுமதிக்கு இடம் பிடிச்சுக் கொடுத்ததுக்குன்னு  சொல்லிட்டு ஹீரோயினை பார்த்து 'நீ போம்மா ஆபிசுக்கு 'ன்னு சொல்லி  அவளை அனுப்பிட்டு அவ நின்ன இடத்தில அந்த அம்மா நிக்கிறாங்க. இந்த இடத்தில ஒரு பைட் வைக்கிறோம். மொத்த கூட்டமும் ஹீரோவை அடிக்க அவன் திருப்பி அடிக்க ..இப்படித்தான் லவ் ஸ்டார்ட்  ஆகுது!"

தயாரிப்பாளர்.: பின்னிட்டே!பிளாக் பஸ்டர்யா!"
-----------------------


செவ்வாய், 13 டிசம்பர், 2016

வம்புக்கு வருகிறது அ..ம்..மா. திரைப்படம்!

சனியன் பிடிச்ச நாரை கெழுத்தி மீனை விழுங்கின கதையாகி இருக்கிறது தெலுங்கு படத் தயாரிப்பாளர் சி.ஆர்.மனோகரின் நிலை.!

தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ,இந்தி என ஐந்து மொழிகளில் படம் எடுத்திருக்கிறார்.

கதாநாயகி கவர்ச்சி நடிகை ராகினி திவேதி. படத்தின் பெயர் 'அம்மா!'

இந்த டைட்டிலுக்கு உரியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்பது இந்தியாவுக்கு தெரியும்.டைரக்டர் பைசல் சயிப் என்ன நினைத்து அந்த டைட்டிலை வைத்திருக்கிறாரோ! கொஞ்சம் விவகாரமான மனிதர்தான்!

இந்த படம் போன வருடமே வந்திருக்க வேண்டும். ஜெ.யின் மறைவுக்குப் பின்னர் சில காட்சிகளை ரீ ஷூட் பண்ணியிருக்கிறாராம்.

ஜெ.க்கும் கதைக்கும் சம்பந்தம் இல்லை பொதுவாக அம்மாவை பற்றிய கதை என்று பொங்கல் வைத்து சூடம் அணைத்து சத்தியம் பண்ணுகிறார் தயாரிப்பாளர்.

ஆனால் தமிழ்நாட்டில் அதிமுகவினர் நம்பணுமே!

என்னன்ன சிக்கல் சிகையை விரித்து ஆடப்போகிறதோ!

ஞாயிறு, 11 டிசம்பர், 2016

சசியினால் அதிமுக பலம் பெறுமா?

நெருப்பை விழுங்கிவிட்டு நீர்மோர் குடிப்பவர் திருமதி சசிகலா நடராஜன்.

கணவன்-மனைவி இருவரைப் பற்றி அதிமுகவின் தொண்டர்கள் அனைவர்க்கும் தெரியும். திரு.நடராஜன் போயஸ்கார்டன் எல்லைக்குள்ளேயே  வரக்கூடாது என செல்வி.ஜெயலலிதாவினால் தண்டிக்கப்பட்டவர். அப்பல்லோ மருத்துவமனை பக்கம் கூட  வந்ததில்லை. ஆனால் செல்வியார் மரணம் அடைந்ததுமே ராஜாஜி மண்டபத்தில் தலை தெரிய ஆரம்பித்தது.

தற்போது மனைவியை அதிமுகவின் தலைமையில் அமர்த்தும் சாணக்கிய வேலையில் இறங்கி விட்டதாக பரவலாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
அவரின் வருகை குறித்து கட்சியின் மூத்த தலைவர்களால் கேள்வி கேட்க  முடியவில்லை.தங்களின் பதவியை தக்கவைத்துக்கொள்வதற்காக போற்றி பாடிக் கொண்டிருக்கும் அவர்களால் எப்படி கேட்கமுடியும்?

இதுவும் சரியாகத்தான் இருக்கிறது.

ஆனால் பரவலான எதிர்ப்பு தொண்டர்களிடம் இருக்கிறது. அதை சன் தொலைக்காட்சி தனக்கு சாதகமாக்கி விட்டது.

தனியார் இணையதளம் ஒன்று அதிமுகவின் செல்வாக்கு பற்றி கருத்து கணிப்பு நடத்தியது. முதல்வர் செல்வி.ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு நடத்திய சர்வே அது.

திமுக.அணிக்கு ஆதரவாக 36.95 சதமும் ,பா.ம.க.வுக்கு சாதகமாக 22.8 சதமும் அ.தி.மு.க.வுக்கு   ஆதரவாக 16.67 சதமும் , பா.ஜ.க.வுக்கு 8.93 சதமும், நாம் தமிழர் இயக்கம் 7.24 சதம், தே .மு.தி.க .4.92 சதம் என  மக்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாக சர்வே சொல்கிறது என அந்த இணைய தளம் தெரிவித்திருக்கிறது.

திருமதி.சசிகலா கட்சியின் உயர்மட்ட பதவியை அடைந்த பிறகு அதிமுக பலம் பெறுமா ,அவரை முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்தினால் வெற்றி பெறுமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.

பார்க்கலாம். மக்களின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதை!

அது சரி செல்வியார் அறிவித்த ஸ்கூட்டி உங்களுக்கு கிடைத்து விட்டதா?

சனி, 10 டிசம்பர், 2016

பா.ஜ.க..காங். கட்சிகளால் கறுப்புப் பணத்தை ஒழிக்கமுடியுமா?

ஊழல், லஞ்சம் ,கருப்பு பணம்  ஆலமரமாக வளர்ந்து விழுதுகள் விட்டு ஆழமாக வேர் ஊன்றி இருக்கிறது.

அந்த ஆலமரத்தை முல்லைக்கொடியாக மாற்றிக் காட்டுகிறேன் என்று இந்தியப் பிரதமர் மோடி இறங்கி இருக்கிறார். அதன் முதல் வேலையாக  செல்லாத நோட்டுகள் அறிவிப்பு என்கிறார்கள்.

அதன்விளைவுகள் எப்படி என்பதை ஏழை எளியவர்களின் அழுகுரல் திசை எங்கும் கேட்கிறது. இந்த அழுகுரலை சகித்துக் கொள்ளுங்கள் .சில மாதங்களில்  சரியாகிவிடும் என்கிறார் பிரதமர்.

எனக்குள்  எழுந்துள்ள கேள்வி  பா.ஜ.க.வும், காங்.கட்சியும் தங்களுக்கு கிடைத்திருக்கும் 'பொலிடிகல் பண்ட்ஸ்' பற்றிய முழுமையான விவரத்தை  அறிவிக்க முடியுமா? கருப்புப்பணத்தின் ஊற்றுக்கண் எங்கிருக்கிறது என்பது  தானாகவே தெரிந்து விடும்!

தேர்தலில் செலவிடும் பணம் மெகா..மெகா கோடீஸ்வரர்கள் கொடுத்த  நன்கொடைதானே! அவர்களின் பட்டியலை இந்தியாவில் உள்ள அத்தனை கட்சிகளும் வெளியிடுமா?

யோகா குரு பாபா ராம்தேவ் எப்படி தொழிலதிபர் ஆனார்? அவருக்கு பாஜக  மேலிடம் உதவி செய்யவில்லையா?

"நாட்டில் சட்டம் என்பது இல்லாவிட்டால் 'பாரதமாதாவுக்கு ஜே' சொல்லாதவர்களின் தலையை வெட்டுவேன்" என்று பகிரங்கமாக சொல்கிற தைரியம் எப்படி வந்தது? பிரதமர் மோடி அரசின் சலுகை இருப்பதால்தானே!

வாழ்க ..வளர்க ..கருப்புப்பண ஒழிப்பு திட்டம்!
   

ஏங்க நர்ஸின் கையப் பிடிச்சிங்க?

மன்னாரின் சேட்டைகள்:
-------------------------

ஒருவர்: " சிட்டிசன்னா?"

மன்னாரு: "இல்லிங்க ..நான் வில்லேஜ் சன்!"

ஒருவர்: " கையில் கட்டிருக்கிற வாட்ச்சை கேட்டேன்?"

மன்னாரு: " அத விக்கிறதில்லிங்க!"

ஒருவர்: " சுத்த கேனையாக இருக்கியே?"

மன்னாரு: " கேனைன்னா என்னங்க அர்த்தம்,"

ஒருவர்.: " முட்டாள்னு அருத்தம்!"

மன்னாரு.: உங்களைப்பத்தி கேக்கலிங்க! கேனைய பத்தி சொல்லுங்க!
---------------------------------------

மனைவி.: " போட்டோ நேச்சுரலா இருக்கனும்டா! அப்பா தோள் மேல கைய  போட்டுக்க!"

மன்னாரு.: " போடி இவளே! என் சட்டை  பைக்குள்ள கைய விட்டாத்தான்  நேச்சுரலாக இருக்கும்!
-------------------------------------------

மனைவி.: " ஏங்க நர்ஸின் கைய பிடிச்சிங்க? இப்படியா அடி  வாங்குறது?"

மன்னாரு.: "சிஸ்டருக்கு உதவும்னு ஷஷ்டி கவசத்தில சொல்லி இருக்கேன்னு கைய பிடிச்சு ஹெல்ப் பண்ணலாம்னு நினைச்சேன்டி! இப்படி அப்புவான்னு  நினைக்கல!"

மனைவி: " வீட்டுக்கு வாங்க. நானும் நாலு அப்பு அப்புறேன்!"

மன்னாரு.: "???????????????????????
-----------------------------------
படம்: இணையத்தில் சுட்டது.





நிழல் முதல்வர் நிஜ முதல்வர் ஆவாரா?

தமிழக அரசின் ஒட்டு மொத்த நிர்வாகம் ,காவல் துறை உள்பட  அரசுக்கு சற்றும்  தொடர்பில்லாத சசிகலாவுக்கு அடி பணிந்து நிற்கிறது.

காரணம் என்ன? இதை மத்திய அரசு அனுமதிப்பது ஏன் ?

அவர்தான் நிழல் முதல்வராக இருந்து வந்திருக்கிறார்.ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தாலும் சசிகலாஇல்லாமல் அவர் எந்த முடிவையும்  எடுத்ததில்லை.

இப்படித்தான் யூகிக்க முடிகிறது. ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டபிறகு அவரது விரல் அசைவுக்குதான் மருத்துவமனையும்  அரசும் கட்டுப்பட்டிருந்தது. முறைப்படி அரசு அறிவிக்கவேண்டிய கடமை இருந்தும் அது நடக்கவில்லை என்றால் அதற்கு காரணம் சசிதான்!

மர்மங்கள் இனி அவிழப்போவதில்லை.அது முதல்வருடன் சந்தனப்பேழையில் உறங்கிக்கொண்டிருக்கிறது. அதன் உறக்கத்தை கலைக்கும் மந்திரம் மோடிக்கு மட்டுமே தெரியும்.

நேற்றுவரை உடன் பிறவா சகோதரியாக அறிவிக்கப்பட்டவர் இன்று நாளேடுகளின் விளம்பரங்களில் சின்னம்மா ஆக வாழ்த்தப்படுகிறார். பொதுக்குழுவுக்கு முன்பே அவரை பதவி ஏற்க பெரும்புள்ளிகள் வற்புறுத்துகிறார்கள் இதுவரை இரண்டாம்  கட்ட தலைவர்களை முதல்வராக இருந்த ஜெயலலிதா உருவாக்கவில்லையா? திறமை இல்லாதவர்களையா தனக்கு அடுத்த நிலையில் வைத்து ஆட்சியையும் கட்சியையும் நடத்தி இருக்கிறார்?

இப்படி மக்கள் நினைக்கலாம்! அவர்கள் 'தெய்வமகள்" சீரியல் பார்ப்பவர்களாக இருந்தால் ஓரளவுக்கு புரிந்தவர்களாக இருக்க முடியும்!

நிழல் நிஜமாகும் நாள் நெருங்கிவிட்டது. ஜெ.மறைந்ததும் அவரது சொந்த மாளிகைக்குள் நுழையும் 'உரிமை 'பற்றி எவரேனும் கேட்க முடிந்ததா? அதைப்போலத்தான் நாளை பொதுச்செயலாளர் ஆகப்போகும் சசியைப் பற்றி எவரும் கேள்வி கேட்கப்போவதில்லை.

மருத்துவமனைக்கு சென்ற அனைத்துக்கட்சி தலைவர்களும் மனசாட்சியை  அடகு வைத்துவிட்டு யாரோ சொன்னதை கேட்டு ஊடகங்களிடம் சொன்னதைப் போல நாளையும் இதை
வரவேற்பார்கள். நாளை கூட்டணி  சேரவேண்டிய அவசியம் இருக்கிறது.

செல்லாத நோட்டு அறிவிப்பினால் சாதாரண மக்கள் படுகிற அவதிகளை கண்டும் காணாமலும் பெயருக்கு அறிக்கை வாசிக்கிற எதிர்கட்சிகளுக்கு  பதவிதான் முக்கியம் என்றாகிப்போனபின்னர் நாடு எக்கேடு கெட்டால் இவர்களுக்கு என்ன?

நிஜ முதல்வராகப்போகும் சசிகலாவுக்கு முன்னதாகவே வாழ்த்துகள்.

வெள்ளி, 9 டிசம்பர், 2016

அதிமுக .எம்.எல்.ஏ.க்களை சேர்க்க மறுக்கும் தி.மு.க.!

வலிமையான தலைமையை இழந்து தடுமாறி நிற்கிறது அதிமுக,

இடுப்பு ஒடியும் அளவுக்கு குனிந்து வணங்கியவர்கள். வானத்தில் தெரியும்போதே விமானத்தைப் பார்த்து வணக்கம் வைத்தவர்கள் , கை கட்டி  வாய் புதைத்து பணிந்து நின்றவர்கள், இன்று தலைமையை  எதிர்க்க துணிந்து விட்டனர்.

சசிகலாவின் ஆதரவில் முதல்வர் ஓ.பி.எஸ்.

மோடியின் ஆதரவில் தம்பிதுரை.

வைகுண்டராஜனின் சட்டைப் பையில் கணிசமான கண்ணியவான்கள். ஜெய  லலிதா ஆட்சியில் அமர்ந்திருந்தபோது அசைக்க முடியாத எதிர்ப்பாளராக  இருந்தவர்தான் இந்த மணல் மன்னர்!

செங்கோட்டையனின்  ஆதரவாளர்கள்.

கட்சிக்கு எந்த அளவும் தொடர்பில்லாத சசிகலாவை ,  அம்மாவுடன் இருந்தவர்  என்பதற்காகவே கட்சியின் உயர்வான பதவியில் அமர வைக்க முடியாது  என குமுறுகிறவர்கள் .

இப்படி பல பிரிவினர் கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க இறங்கி இருக்கிறார்கள். சசிகலாவுடன் ஆலோசனை நடத்த வேண்டிய அவசியம் ஏன்?
அவருக்கும் கட்சிக்கும் என்ன தொடர்பு?

நடுநிலையாளர்கள் கேட்கிற கேள்வி இது!

இவ்வித குழப்பங்களுக்கு  மத்தியில் திமுகவில் இணைவதற்கு பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்து  திமுக பிரமுகர்களை அணுகியபோது  கலைஞரும், ஸ்டாலினும் மறுப்பு தெரிவித்து விட்டதாக தெரிகிறது.

"வேண்டுமானால் பதவியை விட்டு விலகி விடுங்கள் . மறுதேர்தல் வரட்டும். அப்போது மக்களை சந்திப்பதற்கு  திமுக துணை நிற்கும்" என்று அவர்களிடம்  சொல்லிவிட்டதாக  அறிவாலயம் வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

ஆனால் தம்பிதுரையை தனது பிடியில் வைத்து அரசியல் பண்ணுகிற பாஜக தலைமை அதற்கு இடம் தராத வகையில் வருமானவரித் துறையை வைத்து  மிரட்டல் வேலைகளில் இறங்கி இருக்கிறது.சசியின் குடுமி தற்போது மோடியின் பிடியில்!


ஆனால் தமிழகத்தில் மக்களை கவரக்கூடிய தலைமை பாஜகவுக்கு இல்லை என்பதாக  அந்த கட்சியின் சூப்பர்மேன் சுப்பிரமணியன் சுவாமியே சொல்லி  கலங்கடிக்கிறார். அதனால்தான் வெங்கைய நாயுடுவிடம்  அந்த பொறுப்பினை தலைமை ஒப்படைத்திருப்பதாக கூறப்படுகிறது.

எதுவாக இருந்தால் என்ன வலிமையான கட்டிடத்துக்கு  அவர்களே குண்டு வைக்கப்போ பார்க்கிறார்கள்!

மக்கள் திலகம் கட்டி வளர்த்த கோட்டையில் வெடிப்புகள்!


வியாழன், 8 டிசம்பர், 2016

கலைஞரை ராகுல்காந்தி பார்க்காவிட்டால் குடியா முழுகி விடும்?

''ஜெயலலிதாவுக்காக  இரண்டு தடவை சென்னை வந்த ராகுல்காந்தி ஒரு முறை கூட எங்கள் தலைவரை பார்க்கவந்தாரா ?"என்று திமுகவினர் ஆதங்கப்படுவது  அவர்களின் பலவீனத்தைத்தான் காட்டுகிறதோ?

திராவிடக் கட்சிகளில் எவருடைய தோள் வசதியானதோ அதில் சவாரி செய்து பழக்கப்பட்ட  காங்.கட்சிக்கு தற்போதைய  சிந்தனை தி.மு.க.வா, அதிமுகவா யாருடன் உறவு கொள்ளலாம் ,எந்த வகையில் அதிமுக- பாஜக.நட்பை  உடைக்கலாம் என்பதாகக் கூட இருக்கலாம் அல்லவா? ஜெயலலிதா போன்ற  இரும்பு மனுஷியின் இழப்பு அதிமுகவை மிகவும் வெறுமைப் படுத்தி இருக்கிறது. உரியவன் இல்லாவிட்டால் எவன் வேண்டுமானாலும்  அறுவடை செய்துகொள்ளலாம் என்கிற நிலையில்தானே அந்த கட்சி தனது  உரிமையாளரை இழந்து  நிற்கிறது!

"அ.தி.மு.க.கண்டிப்பாக பிளவு படும். அதில் ஒரு பிரிவினரை தங்கள் பக்கம்  இழுத்துக்கொள்ளலாம் " என்பது ராகுல் காந்தியின் எண்ணமாக இருக்கலாம்  அதனால் தி.மு.க.தலைவரை சந்திக்காமல் தவிர்த்திருக்கக்கூடும்  அல்லவா?

அதிமுக வின் தலைவர்களை  தமிழ்நாடு காங்.கட்சி தலைவர் திருநாவுக்கரசருக்கு நன்கு தெரியும் என்பதால் அவர் மூலமாக  காய் நகர்த்த முடியும். இந்த நகர்த்தல் வேலைகள் திமுகவினரை எரிச்சல் அடைய வைக்கும் என்பதால் ராகுல் முன் எச்சரிக்கையாக  கலைஞரை சந்திக்கவில்லை என்றே தோன்றுகிறது.

ஆனால் ராகுலை நினைத்து தன்னை பலவீனப்படுத்திகே கொள்கிறது தி.மு.க.!
எப்படியெல்லாம் நெஞ்சு உயர்த்தி களம் பல கண்ட திமுகவுக்கு இப்படி ஒரு  நிலையா?




நடிகரின் மனைவி கர்ப்பம்! நடிகையின் ஆவேசம்!

கவர்ச்சி என்பது இயற்கையின் நன்கொடை.

சிலை வடிப்பதைப் போல உளி கொண்டு செதுக்கி கவர்ச்சியை பெற முடியாது.

செயற்கை வழி கவர்ச்சி சிறு குழந்தை 'எழுதும்' ஓவியம் மாதிரி!

ஆண் தம்ஸ் காட்டுவான்.விரிந்த மார்பை காட்டுவான். அது அவனது பெருமை.கவர்ச்சி !

அவனைப் போல பெண் தனது  பெருமையை ,கவர்ச்சியை வெளிப்படையாக  காட்ட முடியாது. அதை சமூகம் அனுமதிப்பது இல்லை.

அந்த சமூகத்தின் கட்டுப்பாடு சிறிது, சிறிதாக நொறுக்கப்பட்டு கொண்டிருக் கிறது. அதற்கு திரைப்பட ஊடகம் பெரிதும் துணை நிற்கிறது.

நடிகைகள் தங்களின் கட்டுடலை கவர்ச்சியை திரைப்படங்களில்   காட்டுவதற்கு தயங்குவதில்லை. அதனால் அவர்களை தரம் தாழ்ந்தவர்கள் என மதிப்பிடுவதும் மதியீனம்தான்!

பணம் படைத்தவர்களது குடும்பத்துப் பெண்கள் கவர்ச்சி பொங்க இறுக்கமாக  உடை அணிவது தாராளமாகி இருக்கிறது. அதை உயர்வாக கருதுகிறார்கள்.நட்சத்திர விடுதிகளில் மது அருந்துகிறார்கள். ஆண் நண்பர்களுடன் உல்லாசமாக இருக்கிறார்கள்.இதை படம் பிடித்துப் போடுகின்றன சில பத்திரிகைகள்.

நடிகை வித்யாபாலன் கவர்ச்சியாக நடிப்பதற்கு  தயங்குவதில்லை. அதனாலேயே  ஊடகங்கள் அவரிடம் அறம் தவறிய கேள்விகளை கேட்பதற்கும்  தயங்கியதில்லை .எதையும் கேட்கலாம் எப்படியும் கேட்கலாம் என்பது ஊடகங்களின் உரிமை என கருதப்படுகிறது.

அப்படித்தான் அன்றும்...!

"எப்போது பிள்ளை பெத்துக்கப் போறிங்க?"---நாட்டுக்கு தேவையான கேள்வியை வித்யாபாலனிடம் கேட்டார்கள்.

"உங்களின் அபிமான நடிகரிடம் இதைப் போல அவரின் மனைவி எப்போது  கர்ப்பமாகப் போகிறாள் என்று கேட்பீர்களா?" --செவிட்டில் அறைகிற மாதிரி  பதில் சொன்னார் வித்யா.

அத்துடன் வித்யாபாலன் நிற்கவில்லை.!

"பத்திரிகையாளர்கள் பெரும்பாலும் இதே கேள்வியைத் தான் என்னிடம் கேட்கிறார்கள். நடிகர்களை பார்த்து அவர்களின் மனைவி எப்போது கர்ப்பமாவாள் என்று கேட்டது உண்டா? ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை இருக்கிறது.அதை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.என்னை கணவனின்  கைப்பொம்மை என்பதாக நினைக்கிறார்கள் போலும்! நான் அந்த மாதிரியான டைப் பெண் இல்லை!"

சூடான பதில்தான்!

புதன், 7 டிசம்பர், 2016

ரஜினி அரசியலில் இறங்குவதற்கு இது நல்ல வாய்ப்பா?

தமிழக அரசியலில் ஆளும் கட்சியான அதிமுகவில்  மிகப்பெரிய வெற்றிடம்  ஏற்பட்டிருக்கிறது.

முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் அந்த கட்சியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாகி விட்டது. அந்த வெற்றிடத்தை  'தல'அஜித்தை வைத்து  நிரப்ப முடியுமா என்கிற சிந்தனை அந்த கட்சியில் உள்ள சிலருக்கு இருப்பதாக சொல்கிறார்கள். முன்பே உளவுத் துறையை பயன்படுத்தி சில புள்ளிவிவரங்களை  எடுத்து வைத்து இருக்கிறார்களாம் .

ஆனால் அஜித் அரசியலுக்கு வருவார்  என்பது கங்கையை சுத்தப்படுத்த முடியும்  என்பதை போலத்தான்! பின்னது நடக்கும் என்றால் முன்னதும் நடக்கும்!

"வட்டத்துக்கு ஒரு ரவுடி. ஏரியாவுக்கு ஒரு தாதா...எப்படி தமிழ்நாடு உருப்படும்?" என்று கேட்டவர்தான் 'தல'. இது படத்தில் இடம் பெற்ற  வசனம்  இல்லை. அவர் என்னிடம் சொன்னது. அதை நான் பேட்டியாக வெளியிட்டிருக்கிறேன். அப்படிப்பட்டவர்  அரசியலுக்கு வரமுடியுமா?

வேண்டுமானால் அவரது பெயரை பயன் படுத்திக்கொள்ள முடியும்.அதையும்  அவர் அனுமதித்தால் மட்டுமே  சாத்தியம்.

தமிழகத்தின் சூப்பர்ஸ்டார் ரஜினி ஆண்டவனை கை காட்டி அவன் நினைத்தால் அது நடக்கும் என்று சொல்லி வருகிறவர். அவரது ரசிகர்கள்  இதுதான் தலைவர் அரசியலுக்கு வருவதற்கு சரியான நேரம் என நினைக்கிறார்கள்.

திமுக தலைவர் கலைஞர் தீவிர அரசியலில் இறங்க முடியாது. அதிமுகவிலும் செல்வாக்குள்ள தலைமை இல்லை. எனவே இதுதான்  நமக்கு சரியான நேரம் என ரசிகர்கள் நினைக்கிறார்கள்.

ஆனால் தமிழக அரசியலில் பாஜக தனது கிளையை படரவிடுவதற்கு இதுவே  தகுந்த சமயம் என நினைத்து வெங்கையா நாயுடுவை இறக்கி விட்டிருக்கிறது. அவரும் ஆளும் கட்சியில் பாஜகவை ஆதரிக்கிற ஒரு குழுவை இயக்கிக்கொண்டிருக்கிறார்.

இது ரஜினிக்கு தெரியும். இப்படிப்பட்ட சதுரங்க விளையாட்டில் அவர் காயை  நகர்த்த மாட்டார்.

என்றாலும் ரசிகர்களுக்கு ஒரு நப்பாசை!

ஆனால் நமக்கு தெரிந்தவரை 'தல'யோ ,சூப்பரோ  வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றே நினைக்கிறேன்.

ஆனால் நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே!

புதிய தலைமைச்செயலகத்திற்குள் கால் வைக்க மாட்டேன் என சத்தியம் பண்ணிய ஜெயலலிதாவை அந்த கட்டிடம் உள்ள வளாகத்தில் தானே  வைத்திருந்தார்கள்
..

அது விதிதானே! 

தமிழக அரசியலில் அடுத்த கட்டம் எப்படி இருக்கும்?

தமிழக அரசியலில் ஒழுக்கம் என்பது தொலைந்து போய் அறுபது ஆண்டுகள்.

தனி நபர் விமர்சனம் தவிர்க்கப்படவேண்டியவை, ஆனால் தகுதி அற்றவர்கள்  தலைமைக்கு வருகிறபோது தவிர்க்க இயலாது போகிறது. இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் அது தேசியவியாதி ஆகி இருக்கிறது.

நேற்று வரை ஜெயலலிதா என சொல்லியவர்கள் இன்று முதல்வர் ஜெயலலிதா என சொல்கிறார்கள்,, அம்மா ,மக்கள் முதல்வர், புரட்சித் தலைவி என பெயர் சொல்லாமல் அடைமொழியால் மட்டுமே அழைத்தவர்கள்
மரணித்தபிறகு ஜெயலலிதா என சொல்கிறார்கள்.முகம் நிலம் பட குனிந்து வணங்கியவர்கள் சசிகலாவையும் அப்படி வணங்குவார்களா? ஜெயலலிதாவின் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளக்கூடாது என தடை விதிக்கப்பட்ட எம்.நடராஜனை ஜெயலலிதாவின் இறுதி நிகழ்ச்சியில் காண முடிந்தது.

இனிமேல்தான் அவரது அரசியல் முழு வீச்சில் இருக்கப்போகிறது.


இதுதான் விசுவாசம் என்பதின் பொருளா? செஞ்சோற்றுக் கடன் என்பதின் விரிவாக்கமா?

முதல்வராக இருந்து ரகசியமாக சிகிச்சை அளிக்கப்பெற்ற செல்வி.ஜெயலலிதா  அடக்கம் செய்யப்பட்ட சமாதியின் ஈரம் இன்னும் முற்றிலும் காயவில்லை.மருத்துவமனை மர்மமும் வெளிப்படவில்லை.

அதற்குள் பதவிச்சண்டை. ஜெயலலிதாவினால் விரட்டப்பட்டும் பின்னர் அழைக்கப்பட்டும் ஒட்டிக் கொண்டுவிட்ட உடன்பிறவா சகோதரி  பொதுச்செயலாளர் என அறிவிக்கப்படலாம் .என்கிறார்கள். ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் வேட்பாளராக அவரை   அதிமுக அறிவிக்கவேண்டும் என சிலர் அழுத்தம் கொடுப்பதாகவும் பேசப்படுகிறது.

இது அந்த கட்சிக்கு வளர்ச்சியாக இருக்குமா, நரம்புத் தளர்ச்சியாக இருக்குமா?

சிங்கத்தின் கர்ஜனையை கேட்டு பழக்கப்பட்டுவிட்ட மக்கள் 'மியாவ்' சப்தத்துக்கு மயங்குவார்களா?? செல்வியார் இடத்தை யாராலும் நிறைவு  செய்யமுடியாது என்பது இன்டர்நேஷனல் ட்ருத். மற்ற கட்சித் தலைவர்கள் அவரிடம்உரத்துப் பேசுவதற்கே  தயங்குவார்கள்.அவர்கள்  புதிய தலைமைக்கு கட்டுப்படுவார்களா?. தங்களது கட்டுக்குள் கொண்டுவரவே முயற்சி செய்வார்கள்.தங்களை விட்டால் அதிமுகவினால் தனித்த வெற்றியை முன்னர் போல பெற முடியாது என்பது அவர்களது கணிப்பாகவே இருக்கும்.

தனித்து போட்டியிட்டு வெற்றி பெற அதிமுகவினால் இனி இயலுமா? மக்களை கவரும் தலைமை இருக்கிறதா? ஜெயலலிதாவுக்கு இருந்த கரிஸ்மா ,செல்வாக்கு,காந்த சக்தி அவர்களில் யாருக்கு இருக்கிறது?

பெரிய கேள்விக்குறி!

எவரும் இருப்பதாக நமது கண்களுக்கு தெரியவில்லை. அமரர் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மையாரை ஏற்க மறுத்தவர்கள் இந்த சசிகலாவையோ அல்லது மற்றவர்களையோ சக்தி வாய்ந்தவர்களாக கருதுவார்களா?

இனிதான் சொத்து பிரச்னைகள், ஜெயலலிதாவின் ரத்த உறவுகளின் வாரிசு பிரச்னை என வரிசை கட்டப் போகின்றன?

"ஜெயலலிதா உயிர் பிழைத்தால் அது மெடிக்கல் மிரக்கிள் என சொன்ன சுப்பிரமணியன் சுவாமி அவரது திருவாயினால் " நிச்சயம் அதிமுக பிளவு படும்" என கணிக்கிறார். அவர் பாஜகவின் சாணக்கியனாக கருதப்படுகிறவர். வலுவான உளவுப்படையை தனித்து இயக்கி வருகிறவர்.

பாஜகவின் கைப்பிடியில்தான் தற்போதைய அதிமுக சிக்கி இருக்கிறது. டெல்லியின்  அனுமதி இல்லாமல் சுயமாக முடிவெடுக்கும் தைரியம் அந்த கழகத்துக்கு இல்லை.இத்தகைய பலவீன பின்னணியில் அதிமுக இருக்கிறது.

வலுவான திமுக தனக்கு சமமான எதிர்க்கட்சியை இழக்கிறது என்றே சொல்லலாம். தனது கட்டுக்கோப்பை திமுகவும் இழக்குமேயானால் தமிழகம்  தேசியக் கட்சிகளின் வணிக சந்தை ஆகிவிடும் !இது பேராபத்து.!

தமிழக அரசியலில் அடுத்த கட்டம் இப்படித்தான் இருக்கும்.

ஜெயலலிதா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தனது உயிலை பத்திரிகையாளர்  சோவை வைத்து எழுதி இருப்பதாக சொல்கிறார்கள் .அது உண்மையாக இருந்தால் வெளியாகும் பட்சத்தில் புதியதொரு பிரச்னை எழும்.

பார்க்கலாம். இனி மீடியாக்களுக்கு கொழுத்தவேட்டைதான்!


ஞாயிறு, 4 டிசம்பர், 2016

அப்போலோவில் திடீர் பரபரப்பு....என்ன காரணம்?

இணைய தளங்களில்  முதல்வர் ஜெ.வைப்பற்றி முதலில் செய்தியை  போடுவது  விகடன் டாட் காம் தான் !

பரபரப்புக்காக  கொளுத்திப் போடுவதில்லை. காதுக்கு வந்த செய்தியை  களத்தில்  இருக்கிற  செய்தியாளர்களிடம்  சொல்லி  கேட்டு  வாங்கிப் போடுவார்கள்.

அந்த நம்பிக்கை  இருப்பதால்தான்  அதை பலர்  எடுத்துக் கையாளுகிறார்கள்.

சில மணிகளுக்கு முன்னர்  தமிழக  அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும்  அப்போலோவில்  குவிந்தார்களாம். எய்ம்ஸ்  மருத்துவமனை  டாக்டர்களும்  வந்து சென்றதாக வும்  சொல்லப்படுகிறது. அத்தனை  காவல் நிலையங்களுக்கும் செய்திகள்  சென்றதாகவும் அந்த தளம் சொல்கிறது.

இதய நிலைமை பற்றி  மருத்துவர்கள்  சொன்னது  பற்றி  தெரியவில்லை.

மிகவும்  பலவீனம்  அடைந்திருக்கிறது. இது நாள் வரை  ஆரோக்கிய அறிக்கை  சொல்லிவந்த தலைகளை  அதிமுகவினர்  தேடுவது  மட்டும் தான்  தெரிகிறது.


அரசு  பேச்சு மூச்சு காட்டவில்லை. இத்தனை நாட்களாகியும்  முதல்வரின்  உடல் நலம் பற்றி  எதையுமே சொல்லாமல்  மக்களை  குழப்பத்தில்  ஆழ்த்தி  வதந்திகளுக்கு  வால்  முளைக்க வைத்த அரசு  இனி  என்ன சொல்லப்போகிறது? 

ஹிட்லர் மாவீரனா....இல்லையா?

இது ஒன்றும் பட்டி மன்றத்தலைப்பு இல்லை.

உலகமே அஞ்சிய சர்வாதிகாரி ஹிட்லர் என்கிறோம். அவன் கோழையாக  இருந்திருந்தால் சர்வாதிகாரியாக  மாறி இருக்கமுடியாது.

தனது நாடு தனது மக்கள் என வாழ்ந்தவன்.அற்புதமான ஓவியன்.

நெப்போலியனை எப்படி பார்க்கிறேனோ அதைப்போலவே ஹிட்லரையும் பார்க்கிறேன். அவனது மனத் திண்மை எனக்கு பிடிக்கும். வறுமையின் கொடுங்கரத்தில் சிக்கி, அனாதை என்ற பட்டியலில் அவன் பெற்று வந்த உதவித் தொகையும் போதாமல் வயிற்றை சுருக்கி வாழ்ந்தவன்.

அந்த நிலையிலும் அவன் மனம் கலங்கவில்லை.

"விதியை வெல்ல முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருந்தது. என் தந்தை  பயணப்பட்டதைப்போல நானும் தனியனாகவே வியன்னாவுக்கு பயணமானேன் " என்கிறான் ஹிட்லர்.

அவனை வரலாற்றாசிரியர்கள் பார்த்த பார்வை அந்த கால கட்டத்துக்குள்  உள்ளடக்கி  எழுதப்பட்டே இருக்கும். அரசியல் சார்ந்தும் அவனை சார்ந்தும்  எதிர்த்தும் எழுதப்பட்டவையே! "எம்.ஜி.ஆர்.தகனம் செய்யப்பட்ட இடத்திலேயே சமாதி கட்டப்பட்டது" என்று ஆங்கில பத்திரிக்கை மேதை ஒருவர் எழுதவில்லையா? அந்த புத்தகத்தில் 1967-ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் பற்றியும் பேரறிஞர் அண்ணா  முதல்வராக பதவி ஏற்றதையோ குறிப்பிடவில்லை.கலைஞர் கருணாநிதி  முதல்வர் பதவி ஏற்றதையும் எழுதவில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் பதவி ஏற்றதை மட்டுமே சுட்டியிருந்தார்,

இதையும் ஜனங்கள் நாளை நம்புவார்கள்.

எனது போராட்டம் என்கிற ஹிட்லரின் புத்தக மொழி பெயர்ப்பினை வாசித்தேன்.

அதில்  ஒரு குறிப்பு.

'ஜெர்மனியின் மிகப்பெரிய மானக்கேடு 'என்கிற பெயரில் ஒரு  அறிக்கை. அதை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்  ஒரு புத்தக வியாபாரி.ஜோகன்ஸ் பிலிப் பாம். ஒரு ஆள் காட்டி அவரை பிரெஞ்சுக்காரர்களிடம் காட்டி கொடுத்து  விட்டான். வழக்கு நடந்தது.

கொடுமையாக சித்திரவதை செய்யப்பட்டும் அந்த துண்டறிக்கையை யார் எழுதியது என்பதை சொல்ல மறுத்து விட்டார்,

இதனால் அவரை  சுட்டுக்கொல்ல நெப்போலியன் உத்தரவிட்டான். ஹிட்லர் பிறந்த சிறிய ஊரான பிறவுனா ஆன் த இன் என்கிற ஊரில்தான் சுட்டுக்கொல்லப்பட்டான். அங்கு ஒரு நினைவுச்சின்னம் கட்டப்பட்டிருந்தது. தனது சிறு வயதில்  அந்த வழியாக சென்று வந்த ஹிட்லரிடம் பெரிய பாதிப்பை  உருவாக்கி இருந்தது. அது நாளடைவில் விருட்சமாக வளர்ந்து  அவனை வீரனாக சர்வாதிகாரியாக  மாற்றியது.

அவனது வரலாறை முழுமையாக படித்தவர்களுக்கு  தெரியாமல் இருக்காது. ஆனால்  அவர்கள்  எம்.ஜி.ஆர். தகனம் போல கருத்தை பதிவிடக்கூடாது.

   

சனி, 3 டிசம்பர், 2016

தமிழக கவர்னர் கையில் ஆட்சி அதிகாரம்?

நீயும் பொம்மை நானும் பொம்மை என்று  வீணை எஸ்.பாலசந்தர் படப் பாடல்  மாதிரி தமிழக அரசு நிர்வாகத்தில் ஒரு தேக்க நிலை இருந்து வந்தது.

அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை 'சிலரின்' ஆளுகைக்குள் அடங்கி கிடந்தனர். முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கிட்டத்தட்ட  நூறு நாட்களை கடந்தும் அரசு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான  மருத்துவ அறிக்கை வாசிக்கப்படவில்லை.

இதற்கு விளக்கம் எவர்தரப்பிலிருந்தும் அளிக்கப்படவில்லை. ஏன் என்றும்  தெரியவில்லை.கார்த்திகைப் பனியாக நிர்வாகம் !

தற்போது ஓரளவுக்கு பனி மூட்டம் கலையத் தொடங்கி இருக்கிறது.

தமிழக ஆளுநர் தனது அதிகாரத்தை பயன் படுத்தத் தொடங்கி இருக்கிறது.
பல்கலைக்கழகத்திலும் ,அதன் அதிகார வட்டத்துக்குள் வரும் கல்லூரிகளிலும் பண பரிவர்த்தனை எலக்ட்ரானிக் எந்திரங்கள் வழியாக  நடக்கவேண்டும் என்பதாக சொல்லி இருக்கிறாராம்.

இது அவரது எல்லைக்குள் வரவில்லை என்றாலும் அதிகாரம் உயிர் பெற்றிருக்கிறது என்கிறார்கள்.

ஆளுநரை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்கும்படி  பேரவைத் தலைவரிடம் ஆளுநர் சொல்லியிருப்பதாக ஊடகங்கள் சொல்கின்றன.

இது போன்ற நிகழ்வுகள் தொடரலாம் . நல்லதுதானே! 

வெள்ளி, 2 டிசம்பர், 2016

தென்னாட்டு மக்கள் நிர்வாணமானவர்களா?

இத்தாலிய நாட்டு  சுற்றுலாவாசி  மார்க்கபோலோ.
கி.பி.13 -ம்  நூற்றாண்டு முடிவில் தென்னிந்தியாவில்  ஒன்னரை ஆண்டுகள்  பிரயாணம் செய்திருக்கிறான்  என்கிறார்  தமிழ்ப் பேராசிரியர்  அ.கி. பரந்தாமனார்.. மதுரை  தமிழ்நாடு  நாளிதழில்  செய்தியாளனாக  பணியாற்றியபோது  அவரிடம்  தமிழ்  பயின்றிருக்கிறேன். அந்த காலக்கட்டத்தில் தான்  சகோதரர்  கா. காளிமுத்துவின் நட்பு  கிடைத்தது. அது  அவரது  கடைசி  காலம் வரை  தொடர்ந்தது.

அது  தனி  அத்தியாயம்  எழுதக்கூடியது.

அய்யா  பரந்தாமனார்  எழுதிய  'மதுரை  நாயக்கர்  வரலாறு' நூலை வாசித்தபோது  எத்தனையோ  ஆச்சரியங்களையும்  அதிர்ச்சி  செய்திகளையும் அனுபவித்தேன்.

 அதில்  சில....

"தென்னாட்டில்  அக்காலத்தில்  மக்கள்  உடம்பில் எத்தகைய  உடையும்  அணிந்து கொள்ளாமல் இருந்தது  மார்க்கபோலோவுக்கு  வியப்பாக  காணப்பட்டது. தையற்காரர்களே  இந்நாட்டில்  இல்லை  என்று  எழுதிவிட்டான்.

மரண தண்டனைக்கு ஆளான குற்றவாளிகள்  தங்களை  தெய்வங்களுக்கு  பலியிட்டுக் கொள்வதுண்டு. சாணத்தால்  தரையை மெழுகுவது  சாதாரணமாக காணப்பட்ட வழக்கம்.

ஏழைகளும் செல்வந்தர்களும்  தரையில் அமர்வது  வழக்கம்.ஒரு நாளைக்கு இரண்டு வேளை குளித்திருக்கிறார்கள்.  குடிக்கும்போது  குவளையை குவளையைத்  தூக்கி வாயின் எச்சில் படாமல் மக்கள் குடிப்பது வழக்கம் என போலோ  எழுதியிருக்கிறார்.

கள் குடிப்பது  குறைவு! குடியர்களும் கப்பலில் வேலை செய்பவர்களும்  சாட்சி சொல்வதற்கு  தகுதியற்றவர்களாக  கருதப்பட்டார்கள்.[ அதை இந்த காலத்தில்  அமல்படுத்தினால்  ஓரளவு  நாடு உருப்படும்.] 

ஒருவன்  கொடுக்கவேண்டிய கடனைத் திரும்பப்பெறுவதற்குக் கடன் கொடுக்கவேண்டியவனைக் கண்டுவிட்டால்  அவன்  நிற்கும் இடத்தைச்சுற்றி  கோடிட்டுப்  பணத்தை  கொடுக்காமல்  அந்த இடத்தை விட்டு நகரக்கூடாது  என  ஆணையிடும்  வழக்கம் இருந்தது  என்றும்  மார்க்கபோலோ  எழுதியிருக்கிறார்.

அப்படி எல்லாம்  நாணயமானவர்கள்  வாழ்ந்த  பூமியா  அய்யா இது? 

மக்களைவிட  நமது  அரசியல்வாதிகள்  படிக்கவேண்டியது  நிறைய  இருக்கிறது  மார்க்கபோலோவின்  பயண  குறிப்புகளில்!

ஆனால் கடவுளே வந்து  சவுக்கினால்  நாலு  இழுப்பு  இழுத்தாலும்  திருந்தாத  ஜென்மங்கள்  ஆயிற்றே! 
    

அரசனைக் கொன்றுவிட்டு ஆட்சி பீடம் பிடித்தவர்கள்.

ரா குல சாங்கிருத்யாயன்.

இவரது 'வால்காவிலிருந்து கங்கை வரை' நூலைப் படித்தவர்களுக்கு இவரது படைப்பின் தன்மை புரியும்! உண்மைகளையும் கதையாக சொல்வதில் மென்மையும் மேன்மையும் மேலோங்கி இருக்கும்.!

அண்மையில் அவரது 'ராஜஸ்தானத்து அந்தப்புரங்கள்' என்கிற படைப்பை படிக்கநேர்ந்தது.  ர.சவுரிராஜன் என்பவரது மொழி பெயர்ப்பு.!

அதில் ஒரு சிறு பகுதி. குறும் பகுதி என்று கூட சொல்ல முடியாத அளவுக்கு  சிறிய பகுதி.!

"சகோதரச் சண்டைகளுக்கும் கொடிய துரோகங்களுக்கும் பிரபலமானதுதான்  ராஜஸ்தான்!

ஒரு சமயம் ஜெய்பூர் மன்னரும், ஜோத்பூர் மன்னரும் திருத்தல யாத்திரை  சென்றபோது  ஹரித்வார் சேர்ந்தார்கள். இருவரும் கங்கையில்  ஆனந்தமாக குளித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர் மேல்  ஒருவர் தண்ணீரை வாரி இறைப்பது முக்கிய விளையாட்டாக இருந்தது. 

இந்த சமயத்தில் ஒரு அரசர் பக்கத்திலிருந்த சாரண் கவி ( துதி பாடும் புலவன்.) சூர்யமல் என்பவனிடம் " எங்கள் புகழை மேம்படுத்தும் வகையில் ஒரு கவிதை பாடு. பார்க்கலாம்' என்றார்.

கவி இருவரிடமும் முன்னதாகவே வாக்குறுதி வாங்கிக்கொண்டு மன்னிப்பையும் கேட்டுக்கொண்டு ஒரு கவிதை பாடினான்.

அது இதுதான்!

"ஜெய்பூர் அரசர் கம்தாஜ் அவர்களும் ஜோத்பூர் அரசர்  முரதர் அவர்களும்  இப்போது நீரை வாரியடித்து  விளையாடுகிறார்கள். இருவரும் தமது தந்தையரை கொன்று விட்டு ஆட்சி பீடத்தைக் கைப்பற்றியவர்கள் .அதனால் சம அந்தஸ்து உள்ளவர்கள்."

இந்த கவிதையை படித்தபின்னர் அந்த கவிஞர்களின் கதை என்ன ஆனதோ! தெரியாது!

ஆனால் "ஜனக பக்ஷா ராஜகுமாரா" என்றொரு சம்ஸ்கிருத பழமொழி அதற்கு  முந்தைய காலத்தில் இருந்தே இருக்கிறது. அதாவது ராஜபுத்திரர்கள் தந்தையை கொள்பவர்கள் என அர்த்தமாம்.

வியாழன், 1 டிசம்பர், 2016

இதுவும் பாலியல் வன்முறைதானே...?


யாரையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை.மனதில் பட்டது.சிந்திக்க வேண்டிய தாகிவிட்டது .எங்கு பார்த்தாலும் ''சுவாமியே சரணம்''கோஷம்.காவியுடை.குறுந்தாடி.பக்தி பரவசமுடன் விரதம் இருக்கிறார்கள்.ஒழுக்கம் தவறாமை.சிலர் புகைக்கிறார்கள் என்பதால் ஒட்டுமொத்த பக்தர்களையும் குற்றம் சொல்லிவிட முடியாது.ஒரு மண்டலம் பெண் சுகம் கிடையாது.கணவன்  தனிப் படுக்கை. மனைவி தனி படுக்கை.மாலை போட்ட பக்திமான்கள்  கோவில் ,பஜனை என மனதை ஒரு நிலை படுத்திக் கொள்ள முடிகிறது. சிலரால் முடியவில்லை ,மாலையை கழற்றிவிட்டு தாம்பத்திய வாழ்க்கையில் இறங்கிவிடுகிறார்கள்.ஒருநிலை படுத்த முடியாத மனைவிகளின் நிலை என்ன?
குளிர் காலம்.பருவதாகம்.அதுநாள்வரை கணவனின் அருகாமையில்  அணைப்பில் சுகம் கண்டு வாழ்ந்த பெண்களின் நிலை என்ன?
தொலைக்காட்சிகளில் காதல் பாட்டுகள்.விரசம்தூண்டும் காட்சிகள்.ஊடல் ,கூடல் வசனங்கள் என அன்றாடம் வரும் சீரியல்கள்.பெண்களின் மனதை பாதிக்குமா, பாதிக்காதா?அவர்களால் புலன் அடக்கி வாழமுடிகிறது என்றாலும் ஒரு வகையில்  பாலியல் ரீதியான கொடுமைதானே?கணவன் இருந்தும் அவள் விரும்புகிற போது  தாம்பத்திய சுகம் பெற விரதம் தடை என்கிறபோது ஆணாதிக்கத்தின் வன்மைதானே   மேலோங்கி நிற்கிறது.விரகதாபம் மேலிடும் போது விரதமிருக்கும் கணவனுடன் அவளால் சேர முடியவில்லை. ஆனால் விரதமிருக்கும் சாமி மாலையை கழற்றி பாலில் போட்டுவிட்டு விரதத்தை முறித்துக் கொள்ளலாம்,என்னய்யா நியாயம்?
இதுவும் ஒருவகையில் பாலியல் வன்முறைதானே?

சினிமா கொட்டகைகளில் தேசிய கீதம்! சரியா?

" ஏங்க ஒத்த பிள்ளையைப் போட்டு இப்படி அடிக்கிறிங்க.. கையாங்க அது மெல்ல பிடிச்சாக்கூட இரும்பா இருக்கும்...எதுக்கு அடிக்கிறிங்க?"

"பின்ன என்னடி..நம்ம நாட்டு தேசிய கீதத்துக்கு என்னடா அர்த்தம்னா பள்ளிக்கூடத்தில சொல்லிக்கொடுக்கலங்கிறான்.! "

" நம்ம மந்திரிகளுக்கே தெரியாது. இந்த பச்ச பிள்ளைக்கு மட்டும் என்ன தெரியப்போகுது? முதல்ல உங்களுக்கு தெரியுமா?"

"வெவரம் கெட்டதனமா பேசாதடி! சினிமா தியேட்டர்ல தேசிய கீதம் போடணும்னு  சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் சொல்லிருக்காங்க. இந்த பயபிள்ளதானே கிளாஸ்க்கு கட்  அடிச்சிட்டு தியேட்டருக்கு போகுது? நாளுக்கு போலீசை விட்டு படம் பாக்க வந்த  எத்தனை பேருக்கு அர்த்தம் தெரியும்னு நீதிபதிகள் உத்திரவு போட்டா நானா மாட்டிப்பேன்? இந்த சிறுக்கி பிள்ளைதானே மாட்டிக்கும்!"

"அதுக்கு ஏன்யா என்ன இழுக்கிறே? நம்ம அரவிந்த சாமி இதுக்கு எதிர்ப்பு சொல்லி இருக்கார் அது தெரியுமா?"

"தெரியாதுடி! பெரிய பெரிய ஸ்போர்ட்ஸ்களில் நாம பங்கெடுத்தா தேசியகீதத்தை போடலாம். அதைவிட்டுட்டு தியேட்டர்கதவுகளை மூடி தேசிய கீதத்தை போடுறது சரிதானா?உப்கார் படத்தில இப்படி கதவை பூட்டிக்கிட்டபோது தீ விபத்து நடந்து புகை மூட்டத்தில் சிக்கி 59 பேரு செத்துப்போனாங்களே மறந்திட்டிங்களான்னு கேட்டிருக்கார்."

"ஓ...இப்படியெல்லாம் கேட்கிறாரா?"

"பொம்பள எனக்கு தெரிஞ்சிருக்கு. மீசை வச்ச ஆம்பள உங்களுக்கு தெரியல. இந்த ராம்கோபால்வர்மான்னு ஒரு ஏடா கூடம் இருக்கே..அதுதான் வசமா மாட்டிக்கிற மாதிரி சொல்லிருக்கு! அந்தாள  தோசைக்கல்லுல இட்லி அவிக்க விடனுங்க! '

"நைட் கிளப்களில் ட்ரிங்க்ஸ் சாப்பிடுறதுக்கு முன்னாடி, அயிட்டம் டான்ஸ் ஆடுறதுக்கு முன்னாடி,தேசிய கீதம் பாடணுமாம்.ஒவ்வொருடி.வி.சீரியல் ஆரம்பிக்கிறபோது பாடணுமாம்.கோவில்,சர்ச்.மசூதி இங்கெல்லாம் வழிபாடு  ஆரம்பிக்கிறபோதும் தேசிய கீதம் பாடணுமாம்.இப்படி எல்லாம் அந்த கூறு கெட்ட குப்பன் வர்மா சொல்லிருக்கார்.இதுக்கு யாரை அடிக்கிறது? சொல்லுங்க!"

"தெரியலடி!"

இல்லாத வீட்டுப்பிள்ளைகளா ஸ்ரீதேவியின் மகள்கள்?

அவஸ்தை என்பது தமிழ்ச்சொல் இல்லை. அது வட சொல் என நம்புகிறேன். ஏனென்றால் தமிழ்ச்சினிமாவில்  இடம் பெற்றுள்ள இனம் தெரியாத வசனம் எல்லாம் தமிழ் என தமிழக அரசு நியமித்த  வரி விலக்கு குழு புலவர்கள் கருதி  பரிந்துரை செய்து வருகிறார்கள். அவர்களில் தமிழில் சரியாக எழுதத் தெரியவில்லை என்பது கூடுதல் தகுதி.அப்படி இருக்கும்போது ஒரு சொல்லை எவன் வீட்டு சொத்து என்பது அதிகபிரசங்கித்தனம் ஆகி விடும்!

கர்ப்ப அவஸ்தை,ஜன்ம அவஸ்தை, பால்ய அவஸ்தை, யவன அவஸ்தை ,ஜரா அவஸ்தை, மரண அவஸ்தை, நரக அவஸ்தை என ஏழு அவஸ்தைகளை வடசொல் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

 எல்லாம் இருந்தும் ஏழு பிறவிகளுக்கும் சொத்து இருந்தும் பரதேசி பக்கிகளாக  அலைவதை எந்த அவஸ்தையில் சேர்ப்பது? இது அடியேனுக்கு வந்த நரக அவஸ்தை! சரியாகத்தான் சொல்லிருக்கேனா?

ஒரு காலத்திய கனவுக்கன்னி ஸ்ரீதேவி. சிவகாசி அப்பாவுக்கு பிறந்த இந்த நடிகையின் சொத்துகள் எக்க சக்கம். எல்லா சொத்துகளையும் மருமகன்கள் அனுபவிக்கவேண்டும் என்பது அம்மையார் வாங்கி வந்த வரம் ! அம்மைக்கு  ஜான்வி ,குஷி என இரு மகள்கள். வயதுக்கு வந்தவர்கள். ஜான்விக்கு காதலர் கிடைத்து விட்டார். இவர் அப்ரூவ்டு பிளாட்.

பக்கிரி வீட்டுப் பிள்ளை கூட கிழியாமல் சட்டை, பேண்ட் என போடுகிறான்.ஆனால் இந்த கோடீஸ்வரிகளுக்கு என்ன ஆயிற்று?

படு கேவலமாக கிழிந்துள்ள ஜீன்ஸ்களை அணிந்து நிகழ்ச்சிகளுக்கு வருகிறார்கள்.

"யோவ்  மூனா ..அது பேஷன்யா...! அல்ட்ரா மாடர்ன்  நாகரீகம்...அதெல்லாம் உன்னைப் போன்ற கூமுட்டைக்கு தெரியாது என்று சொன்னால்....?

சாமியே......ய்! சரணம்தான் எனது பதில்!

மாராப்பு பக்கம் கிழிசல் இல்லாமல் இருந்தால் சரிதான்!

புதன், 30 நவம்பர், 2016

ஏட்டுக்கும் எழுத்துக்கும் கற்பு தேவை.

படிப்பதற்கு சற்று சலிப்பு தரலாம்.

ஆனால் சில உண்மைகள் கசந்தாலும் அது காலம் காலமாக இருந்து வருபவை.இலக்கியத்திலிருந்து எடுத்துக் கையாள்வது வேறு.அதையே  தனது படைப்பாக திரிப்பது திருட்டு.மேலை நாட்டு கதைகளை திருடுவது தமிழ்ச்சினிமாவுக்கு புதிது இல்லை. இதைப் போல இலக்கிய வரிகளை தனது பாடல்களில் சொந்த சரக்கு என சொல்லி பெயர் பெறுவது இன்றும் நடக்கிறது.

பேராசிரியர் தி.ராஜகோபாலன் எழுதிய ஒரு கட்டுரையை இன்று காலை  வாசிக்க நேர்ந்தது,அதை பகிர்ந்து கொள்வதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. தவறு என நினைத்தால் மன்னித்துவிடுங்கள்.

இதோ அவரது கருத்துகள்.!

"முதுமொழிகளை நாடித் திருடி,ஒருபடி நெருடிக்  கவிபாடித் திரியும் சில புலவர் ' , 'தெரியும் அருமை        பழைய மொழியைத் திருடி நெருடிக் கவி பாடி'என அருணகிரியார் அடையாளம் காட்டுகிறார்.

சீத்தலைச் சாத்தனார் திருக்குறளில் இருந்து ஒரு செய்தியை எடுக்கிறபோது 'அறம் பாடிற்று  அன்றே ஆயிழை கணவ'என்றார்.

பாரதி தனது பாஞ்சாலி சபதம் வியாசரைத் தழுவியது.தமிழ் நடை மட்டுமே தன்னுடையது என்றார்.

'சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே  நில்லென்று எனக்  கூறி நிறுத்தி வழிச்சென்றவரே ' எனும் வரிகளை பல்லவியாக அமைத்தபோது இதனை நாட்டுப்புறப் பாடலில் இருந்து எடுத்தேன்' என கம்பீரமாக  ஒப்புக் கொண்டார் கண்ணதாசன்.

ஒரே ஒரு பாடல் பொருளை வைத்துக் கம்பர் பாடிவிட்டார் என கேட்ட ஒட்டக்கூத்தர் தாம் பாடிய இராமாயணத்தில் உத்திர காண்டத்தைத் தவிர  மற்றவற்றை எரித்துவிட்டார்.

கண்ணகி காதையை சீத்தலைச்சாத்தனார் பாடத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அத்துயரக் கதையைக் கேட்ட  இளங்கோவடிகள் "நாட்டுதும் யாமோர் பாட்டுடைச்செய்யுள் " எனத் தொடங்கிவிட்டதால் சாத்தனார் மாதவி மகள் மணிமேகலை காப்பியத்திற்கு மாறிவிட்டார்.

ஆனால் நம் முன்னோர்கள்  காத்த கண்ணியம் இன்றில்லை!

கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுமன்று.ஏட்டுக்கும் எழுத்துக்கும்  கூடத் தேவை.

இவ்வாறு பேராசிரியர் தி.இராசகோபாலன் கவலைப்பட்டு எழுதி இருந்தார்.

காலங்கள் கடந்தும் எழுத்துத்திருட்டு இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
 

திங்கள், 28 நவம்பர், 2016

காமக் கொடூரன்களை காய் அடியுங்கள்!---நடிகை போர்க்குரல்!!

போகத்துக்குரியவளா பெண்?


போகிற போக்கில் சிறுநீர் கழித்துவிட்டுப் போவதைப் போல் ஆகிவிட்டது பெண்களுக்கு எதிரான வன்முறைகள்.!

தன்னை கற்பழித்துவிட்டான் என புகார் தெரிவித்தால் அவன் உன்னை எங்கெங்கு தொட்டான், அப்படி தொடும்போது சுகமாக இருந்ததா இணங்கித்தானே அவனுடன் இருந்திருக்கிறாய் என 'நாகரீகமாக ' வழக்குரைஞர்கள் கேட்கிறபோது 'தொழில் தர்மத்தின் உயரம்' எத்தனை  பெண்களின் கற்பு, ஒழுக்கத்தைக் கொன்று விட்டு அதன்   மீது அமர்ந்திருக்கிறது என்பது புரிகிறது!

காமுகர்களின் எளிதான இலக்குகளாக தலித் பெண்கள்தான் இருக்கிறார்கள். உயர்சாதியினரின் அரக்கத்தனத்துக்கு இரையாவது  அவர்கள்தான்!

அண்மையில் கேரளத்தில் தலித் பெண்ணை வன்புணர்வு செய்துவிட்டு  அவளை கொலை செய்து விட்டார்கள்.அறிவு ஜீவிகள் அதிகம் வாழ்கிற  மாநிலம் என்கிற பெருமை வேறு!

பெரும்பாவூர் வந்திருந்த முன்னாள் நடிகை மீரா ஜாஸ்மின் பெண்ணியக்கவாதிகளை  அழைத்துக் கொண்டு பத்திரிகையாளர்களை  சந்தித்தார்.

அவர் சொன்ன ஆலோசனை  ஒருவகையில் ஏற்புடையதாகவே இருந்தது.

''அப்பாவிப் பெண்களை வன்புணர்வு செய்கிறவர்கள் வாழ்நாள் முழுவதும்  வலியை சுமந்தாக வேண்டும். அப்போதுதான் அத்தகைய கொடூரன்களுக்கு அச்சம் இருக்கும்!

அவர்களை காயடித்து விடுங்கள்! இதுதான் ஒரே வழி! இதைத் தவிர  வேறு  வழி இல்லை!"என அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறார்  மீரா ஜாஸ்மின்!

வரவேற்க வேண்டிய யோசனை!

நடிகை டாப்சி முன்யோசனையாக சில சொல்லியிருக்கிறார்.

"வன்முறையாளர்களிடம் இருந்து தப்புவதற்கு சில மரண அடிகளை பெண்கள் கற்றுக்கொள்ளவேண்டும்!"

சரிதானே! என்ன சொல்கிறீர்கள் மக்களே?


ஞாயிறு, 27 நவம்பர், 2016

அம்மாவை மறக்கடித்த மோடி வித்தை!

தமிழக   அரசியல் தலைவர்கள்  'அம்மா'வையும்  மறந்து விட்டார்கள். அப்போலோவையும் மறந்து விட்டார்கள். அவர்களுக்கு இப்போது செலெக்டிவ்   அம்னிஷியா ! தற்போது  நினைவில் இருப்பது 'நமோ  நமோ' தான்!

மளிகைக்கடை மாதிரி தெருவுக்கு ஒரு கட்சி   நடத்துகிறவர்களைக் கூட விடாமல் தினமும்  அழைத்து வந்து அம்மாவை  நேரில் பார்த்தது போல  ரிப்போர்ட் கொடுக்க வைத்த சீசன்  தற்போது முடிந்திருக்கிறது.  கட்சியின் மந்திரவாதிகளின்  வசம் அப்போலோ  முதலாளி  கை பாணமாகி விட்டார்.

500,1000 ரூபாய்  நோட்டுகள் செல்லாது என கடந்த எட்டாம் தேதி பிரதமர்  மோடி அறிவித்த பிறகு எம்பெருமான் உலக பெருமுதலாளி ஏழுமலையானே நிர்க்கதியாக நின்று விட்ட பிறகு அம்மாவை பற்றிய கவலை எவர்க்கும் இல்லாது போயிற்று!

தமிழகத்தின் தேசிய சரக்குக்கடையே படுத்து விட்டது. கடந்த மாத டாஸ்மாக்  வியாபாரத்தை விட நடப்பு நவம்பரில் முப்பது சதவிகிதம் வியாபாரம் கம்மி என்கிறது ஒரு மீடியா. தமிழ்நாட்டு அரசுக்கு மூவாயிரம் கோடி இழப்பு  என்கிறார்கள்.

விற்பனை வரி வருவாய் குறைந்திருக்கிறது. கார் ,வீடு,பத்திரப்பதிவுகளில்  சறுக்கல். பத்திரப்பதிவில் எண்பத்தி ஐந்து கோடி குறைவு என்கிறார்கள்.

பிரதமர் மோடியினால் நிகழ்ந்திருக்கும் பொருளாதார இழப்பு பற்றி தமிழக  அரசு எவ்வித அறிக்கையும் கொடுக்கவில்லை. ஸ்தம்பித்து கிடப்பது பொருளாதாரம் மட்டும் இல்லை. ஏழை எளியவர்களின் வாழ்க்கையும்தான். கறுப்புப் பணத்தை ஒழிப்பதாக சொல்லி  சாமான்யர்களின் நடைமுறை வாழ்க்கையையும் மோடியின் திட்டம் முடக்கிப் போட்டிருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு வாராக்கடன் என சொல்லி விஜய்மல்லையா போன்ற பணமுதலைகளை காப்பாற்றி இருப்பது  ஒருவகையான அரசியல் சாணக்கியம்தான்!

தமிழக அரசியல் கட்சிகள் பெயருக்குத்தான் எதிர்ப்பு காட்டி வருகின்றன.
நாளைய தேர்தல் கூட்டணி பற்றிய கவலையில் மக்களின் நலனை மறந்து விட்டார்கள். மக்களும் நாளைக்கே தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் யார் இரண்டாயிரம் தருவார்களோ அவர்களுக்கே வாக்கு போடுவார்கள்.

அது அவர்களின் தேர்தல் கால வருமான உயர்வு!



சனி, 26 நவம்பர், 2016

எல்லா புகழும் அந்த மோடிக்கே மச்சான்!

கிச்சு கிச்சு மூட்டுறேன்!
-----------------------------
கணவன்: " சிகரெட்  குடிக்காதேடா  பன்னாடைன்னு  உன்  பிள்ளைக்கு  புத்திமதி  சொன்னா  அந்த  புறம்போக்கு  எனக்கு  புத்தி  சொல்றான்டி! "

மனைவி: " அப்படி  என்னங்க  என் பிள்ளை  சொன்னான்?"

கணவன்.: " சின்னப்பயல்களுக்கு  அழகு  சிகரெட்டும்  பீடியும். ! பெரிசுகளுக்கு  அழகு  பெண்டுகளை  தேடுறது....போய்யா...போய்  தேடுய்யான்றான்!"
****************************
கியூ வரிசையில செட் ஆயிடுச்சு!
-----------------------
நண்பன்.: " உன்  லவ்வர்  சூப்பர்  பிகர்டா! எந்த  காலேஜ்ல டா  மச்சான்  பிடிச்சே?"

மற்றவன்.: " செல்லாத  ரூபாயை  மாத்துறதுக்கு  பாங்க்  கியூவ்ல  நின்னப்ப  
எங்க  லவ்  ஸ்டார்ட்  ஆகிடுச்சு  மச்சி! எல்லாப்புகழும் அந்த  மோடிக்கே! "
**************************
கீர்த்தி சுரேஷ் மாதிரி பொண்டாட்டி வேணும்!
-------------------
அப்பா.: " உனக்கு பொண்ணு பார்க்க போறம்டா மகனே! எப்படிப்பட்டவ  பொண்டாட்டியா வரணும்னு  ஆசைப்படுறே?"

மகன்.: "அழகில கீர்த்தி சுரேஷ் மாதிரி! சைஸ்ல திரிஷா மாதிரி ! பழகுறதில ஹன்சிகா மாதிரி! .....!"

அப்பா.: கஷ்டம்டா மகனே! சட்டப்படி  ஒரு பொண்ணைத்தான் கட்டிக்க  முடியும்!"

மகன்.: ??????????????????
************************
கடவுள்.: " பக்தா.! உன்  கடும்தவத்தை  மெச்சினோம்! உனக்கு  என்ன  வேண்டும்? கேள் ?"

பக்தன்.: " ஜனார்த்தன்  ரெட்டி மாதிரி  ஒரு  மாமனார்  வேண்டும்  பிரபோ!"

கடவுள்: " எம்மால்  முடியாது. நீ  மோடியை  நோக்கி  தவம் செய்!"
----------------------------------------------------------------------
வலைப்பூ  நாயகர்களே!  உங்க  பதிவை  கொஞ்சம்  போடுங்க  சாமி! கொலைப்பட்டினியா  கெடக்கேன்!

எத்தனை கொலை முயற்சிகள்...மாபெரும் போராளியை சாய்க்க!

சின்னஞ்சிறு நாடுதான் கியூபா. அமெரிக்க வல்லரசுக்கு சவாலாக திகழ்ந்தது.

 அந்த ஜீவ பூமியை கழுகின் கூரிய நகங்கள் கொத்திப்போக துடித்தது.

சிம்மமாக சிலிர்த்து கர்ஜித்தார்  மகத்தான போராளி பிடல்காஸ்ட்ரோ!

ஆதிக்க வெறியர்களின் கொள்ளிக்கண்கள் படாமல் பாதுகாத்தார். அதற்கு  சர்வாதிகாரமும் அவருக்கு தேவையாக இருந்தது.மக்களும் அவரது பக்கம்.அடுத்த நாட்டின் உள்விவகாரங்களில் முள் செடியை அல்ல , மரத்தையே நட்டு வைப்பதில் கைதேர்ந்தது  அமெரிக்க உளவுத்துறை ! துரோகிகளின் துணையுடன் பொருளாதாரத்தையும் சிதைக்கும் ஆற்றல் அந்த வல்லரசுக்கு உண்டு.

அந்த அரக்கனையே மண்டியிட வைத்த மாவீரன் பிடல்  இன்று நம்மிடையே  இல்லை.தனது தொண்ணூறாவது வயதில் இயற்கையின் கரங்களில் ஒப்படைத்துவிட்டார்.

சர்ச்சிலும் சுருட்டு குடித்தார். அதில் எவரும் விஷம் கலக்கவோ,வெடி வைக்கவோ எண்ணியதில்லை.

ஆனால் சுருட்டும் தாடியும் அடையாளமாக கொண்ட இந்த அதிசயமனிதனை கொல்வதற்கு விஷம்,வெடி இரண்டையும் வெவ்வேறு கட்டங்களில் முயற்சி  நடந்தது,

ஆச்சரியப்படாதீர்கள். அறுநூறு முறை பிடல்காஸ்ட்ரோவை சுட்டுக் கொல்வதற்கு உளவுத்துறை முயன்றிருக்கிறது.

150000 டாலர்கள் கூலிப்படைக்கு  கொடுப்பதற்கு ஒப்பந்தம் போட்டிருந்தனர். அவர் ஐக்கிய நாடுகள் சபைக்கு நியூயார்க் வரும்போது தீர்த்துக் கட்டவும்  முடிவு செய்திருந்தனர்.

ஆனால் அந்த சிவப்பு சிந்தனையாளனுக்கு முடிவு கட்ட வல்லரசுகளால் முடியவில்லை.

கண்ணீர் விட்டு கதறிய பிரியாமணி!

முள்ளம்பன்றி மேல் பட்டுத்துணியை போர்த்தி மறைத்தாலும் முள்ளின் முனை தெரியாமலா போகும்?

வதந்திகள் படிப்பதற்கும் கேட்பதற்கும் சுவையாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட நபரை காயப்படுத்தாமல் அது காயப்படுத்தாமல் விடுவதில்லை.

வதந்திகளும் கிசுகிசுக்களுமே வாழ்வின் அங்கமாகிப் போகுமானால் மனம் மரத்துப் போகவும் வாய்ப்பு இருக்கிறது.

திரை உலகில் சிலரின் மனம் ரணமாகி இருந்ததும் தெரியும். சிலர் துடைத்துக் கொண்டு வாழ்க்கையை தொடர்வதும் தெரியும்!

இவர்களில் முதல் வகை  நடிகை பிரியாமணி .என்றாலும் பல நேரங்களில் 'டோன்ட் கேர் பெண்ணாகவும் இருந்திருக்கிறார். ஒருவேளை அவரை பாதிக்காது இருந்திருக்கலாம்.காதலித்தவரையே கல்யாணம் செய்து

கொண்டவர் பிரியாமணி.

அவரே மனம் திறந்து ஒரு சம்பவத்தை சொன்னார்.

"நவ வசந்தம் படத்தில் தருணுடன் இணைந்து பணியாற்றியபோது நடந்தது. தமிழ்ப்பத்திரிகை நிருபர் ஒருவர் என்னைக் கேட்ட கேள்வி நொறுக்கிவிட்டது. ஆடம்பரக் கார் வாங்கித் தந்தாராமே என்றதும் என்னால் தாங்க முடியவில்லை. வீட்டுக்கு சென்றதும் கதறிக் கதறி அழுதேன். என் அப்பாதான் எனக்கு ஆறுதல் சொன்னார் .என்னால் மறக்கமுடியாத சம்பவம் அது" என்கிறார் பிரியாமணி!

நடிகை என்றாலே சொர்க்கத்தில் வாழ்கிறவர்கள் என்றுதான் எல்லோருமே நினைக்கிறார்கள். ஆனால் அதற்கு அவர்கள் கொடுக்கிற விலை?

நரகம் என்பதை நகரத்திலேயே அனுபவித்து விடுகிறார்கள்.

அண்மையில்  பாகிஸ்தானில் கோர ...கொடூர சம்பவம் நடந்திருக்கிறது.

கிஸ்மத் பெய்க் என்றொரு நாடக நடிகை.!

நாடகத்தில் நடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது ஒருவன் அவளை பின் தொடர்ந்திருக்கிறான். காருக்குள் இருந்தவளை பதினோரு தடவை சல்லடையாக சுட்டுக் கொன்றுவிட்டான்.

காரணத்தை தேடுகிறது பாக்.போலீஸ்! 

கேப்டன் என்ன செய்யவேண்டும்?

சுழன்று அடிக்கும் சுழல் காற்றைப் போல கேப்டனின் தேமுதிக.!

வீச்சுப் பலம். திமுக,அதிமுக என வலிமையான மரங்களின் வேர்களையே ஆட்டிப் பார்த்துவிட்டது. சுழலும் புயலும் நிரந்தரம் இல்லை என்றாலும் அதனுடைய  வீச்சு சேதாரத்தை அதிகமாக்கியது. கலைஞரையும் , அம்மாவையும் அச்சப் படுத்தியது என்றால் பார்த்துக் கொள்ளலாம்.

வளமும் பலமும் பார்த்தே ஆதரவை நல்கும் மீடியாக்களும் கேப்டனுக்கு லாலி பாடின!  மீடியாக்களின் தயவில் கட்சியை வளர்க்கும் சின்ன கட்சிகளும் விஜயகாந்தின் துணையுடன் தங்களின் தோற்றத்தை பிரமாண்டப்படுத்திக் கொண்டன.

ஆனால் விஜயகாந்தின் சுகவீனம் அவரை மட்டுமல்ல அவரது கட்சியையும் அவருடன் சேர்ந்தவர்களையும் படுக்கவைத்துவிட்டது.இடைத்தேர்தல் முடிவுகள் சிக்கன் குனியாவா பன்றிக் காய்ச்சலா என இன்னமும் ஆராய்ச்சி கூடத்தில்!

விஜயகாந்தின் குடும்ப அரசியல்தான்  தேமுதிகவின் வீழ்ச்சிக்கு அடித்தளமாகி இருக்கிறது என்பது  சத்தியம் .தொண்டர்கள் திருமதி பிரேமலதா அம்மையாரின் பிரவேசத்தினால் மிரண்டு போயிருக்கிறார்கள். எவ்வளவு வேப்பிலை அடித்து மந்திரித்தாலும் மிரட்சி நீங்கப்போவதில்லை என்கிறார்கள்.

கேப்டனை பார்த்துதான் அவரின் அரசியலை ரசிகர்கள் நம்பினார்கள்.அவரது படத்தின் வசனங்களும் காட்சிகளும் அவரது இமேஜை உயர்த்திக் காட்டின. எதையெல்லாம் படங்களில் கண்டித்தரோ அவையெல்லாம் அவரது கட்சிக்குள்ளேயே அரங்கேறியது .

அது வீழ்ச்சிக்கு விதை ஆகியது.

கிட்டத்தட்ட அதிமுகவின் அம்மாவும் சின்னம்மாவும் போல தேமுதிகவிலும் !

கூட்டணி சேர்ந்த வைகோவின் வாக்குமூலம் விஜயகாந்துக்கு மிகுந்த பின்னடைவு!

முதல்வர் பதவிக்கு கேப்டன் தகுதி இல்லாதவர் என்பதைப் போல  மறைமுகத் தாக்குதலாகவே வைகோவின் வாதம் அமைந்திருந்தது.

அவரது அரசியலே தாக்குவதும், தாக்கியவரை தாங்குவதும்தான்! அவரது  கூடாரம் காலியாக கிடப்பதைப பற்றிய கவலை இல்லாமல் அடுத்தவரின்  கூடாரம் பற்றி கேலி பெசுகிரவர்தான் வைகோ!

இவர்களைப் பற்றி கவலைப்படாமல் தேமுதிகவின் அடிமட்டத் தொண்டர்களின் ஆதரவை ,நம்பிக்கையை கேப்டன் பெற்றாக வேண்டும். அது முடியுமா, ?

களம் இறங்கிப் போராட வேண்டும். முடியுமா ?

செவ்வாய், 22 நவம்பர், 2016

அதிமுகவின் சுப்ரீம் பவர் சசிகலாதான்!

ஆண்டியின் கோவணத்தை அவிழ்த்துப் பார்த்தால் .....

என முந்தைய பதிவு ஒன்றில் சொல்லியிருந்தேன். ஒரு தொகுதியில் திமுக  வர வாய்ப்பு இருக்கலாம் என சொன்னது பொய்யாகிப் போனது.

மூன்று தொகுதியிலும் ஆளும் அண்ணா திமுக வெற்றி பெற்றிருக்கிறது.

"படுத்துக் கொண்டே ஜெயிப்போம் " என சொல்லி வருகிறார்கள்.அது இயல்புதான்!

கடுமையான பணத் தட்டுப்பாடு, ஐநூறு, ஆயிரம் ரூபா தாள்கள்  வெறும் காகிதமாகிப் போன நிலையில் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து விட்ட நிலையில் பாஜகவுக்கு மூன்றாவது இடம் கிடைத்திருக்கிறது.

இது பாஜகவின் வளர்ச்சியை மட்டும் காட்டவில்லை. தேமுதிகவின் கடுமையான வீழ்ச்சியையும் படம் பிடித்திருக்கிறது. மக்கள் நலக் கூட்டணியின்  எதிர்காலத்தையும் கேள்விக்குறி கவ்வி இருக்கிறது. அந்த கூட்டணி எதிர்வரும் காலத்தில் ஏதாவது ஒரு திராவிடக் கட்சியிடம் சரண்  அடைந்தால் மட்டுமே வாழ்வு என்பதையும் சுட்டி இருக்கிறது.

ஆட்சியில் இருந்ததால் மட்டுமே அதிமுகவுக்கு வெற்றி சாத்தியமாகி இருக்கிறது.அதிகாரபலம் பண பலம் இரண்டும் அந்த கழகத்துக்கு துணையாக இருந்தது என்பதை யாரும் மறுக்க இயலாது. சசிகலாவின் சாணக்கியம்  கழகத்தவரிடம் ஒரு பிம்பத்தை உருவாக்கி இருக்கிறது. முதல்வர் முழுமையாக குணம் அடையும்வரை அவர்தான் அதிமுக.!

திமுகவின் உள்கட்சி பிரச்னை ,கட்டுக்குள் அடங்காத போக்கு அந்த கழகத்தை காவு வாங்கிவிட்டது. அனுசரித்துப் போதல் என்பது தொண்டர்களைப் பற்றியதாகவே இருக்கவேண்டும்.ஆனால் தனிப்பட்டவரை சார்ந்து போவதே  அனுசரித்துப் போவது என அர்த்தம் கற்பித்ததால் அந்த கழகத்தில் ஆதிக்க போக்கு தலை தூக்கி இருக்கிறது.இது அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணம்.

ஒரு பாமரனின் நிலையில் இருந்து இந்த பதிவை எழுதி இருக்கிறேன்.

தவறு என்றால் சுட்டிக்காட்டுங்கள்.


திங்கள், 21 நவம்பர், 2016

ரஜினியின் படம் வடஇந்தியர்கள் துவேஷம்., ஹன்சிகாவின் கல்யாணம் ?

தமிழ்நாடு என்றால் வடநாட்டவர்களுக்கு இட்லிவடைதான் தெரியும்! நடிகர்கள் எவ்வளவுதான் உலகத்தரத்தில் படம் கொடுத்திருந்தாலும்  பாராட்டுகிற எண்ணமே வடநாட்டு பத்திரிகைகளுக்கு  இருந்ததில்லை.

ஷங்கரின் டூ பாயின்ட் ஓ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அவர்கள்  அவ்வளவாக பாராட்டவில்லை. அழையா விருந்தாளியாக வந்த சல்மானையும் வறுத்து எடுத்துவிட்டார்கள்.

ஆறு கோடி செலவில் விழா எடுத்திருந்தும் நிறைவாக இல்லை. விழாவில்  குளறுபடி .அடிக்கடி இடையூறுகள் என குற்றம் கண்டுபிடித்தே எழுதி இருக்கிறார்கள்.

ரஜினிகாந்தின் அவையடக்கமான பேச்சை அக்ஷ்யகுமாருக்கு சாதகமாக மாற்றி ' படத்தின் ஹீரோவே அக்ஷய்தான்' என்பதாக குறிப்பிட்டு வெளியிட்டிருக்கிறார்கள். அமிதாப்பச்சன் கலந்து கொள்ளாததையும் மிகைப்படுத்தியிருக்கிறார்கள்

இப்படியெல்லாம் எழுதினாலும் நாம்தான் கலைக்கு மொழி இல்லை எல்லோரும் கலைஞர்கள்

என்று பொய்யை பூசிக்கொள்கிறோம்.

நமக்குள் எங்கேயோ பலவீனம் பதுங்கி இருந்து கொண்டிருக்கிறது.கேரள சகோதரர்களுக்கு இருக்கிற ஆண்மை நமக்கு இல்லை.

இன்னொரு செய்தி ஹன்சிகாவுக்கு போதிய படங்கள் இல்லை என்பதால்  மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம். ஆனால் இந்த தகவலை  ஹன்சிகாவின் அம்மா மோனா மறுத்து இருக்கிறார்.

"என் மகளுக்கு இருபத்தி நாலு வயதுதான் ஆகிறது. அதனால கல்யாணத்துக்கு என்ன அவசியம்?" என்று கேட்டிருக்கிறார்.

ஆனால் ஹன்சிகா அப்படி கேட்கவில்லையே!

ஞாயிறு, 20 நவம்பர், 2016

ராகுல்காந்திக்கு திருமணம் எப்போது?

இந்தியாவே எதிர்நோக்கி இருப்பவர்களில் ராகுல் காந்தியும் ஒருவர். முக்கியமானவர். காங்கிரஸ் பேரியக்கத்தின் நம்பிக்கை.ஆசியஜோதி நேருகுடும்பத்தின் வாரிசு.

தற்போது வயது நாற்பத்தி ஆறு! இன்னும் இந்த கன்னக்குழி அழகனுக்கு  மணம் நடக்கவில்லை!

நாட்டு பிரச்னைகளில் உயிரைப் பற்றிய கவலை இல்லாமல் ,தீவிரவாதிகளின்  மிரட்டலுக்கும் பயப்படாமல் பாதுகாப்பு வளையங்களையும் தாண்டி மக்களுடன் கை குலுக்குவது தாத்தா அப்பா அப்பத்தா காட்டியவழி!

இதை எதிர்க்கட்சிகள் ' நாடகமாடுவதாக " சொல்கிறார்கள். அது அவர்களது  பாணி!

இன்னும் அவருக்கு மணம் நடக்கவில்லை என்பதைக் குறித்து அம்மா சோனியா காந்தியும் ,காங்.கட்சியும் கவலைப்பட்டது மாதிரி தெரியவில்லை. ஒரு வேளை மனதுக்குள் புகைந்து கொண்டிருக்கிறார்களோ என்னவோ?

 ராகுலை பற்றிய தகவல்களை தேடியபோது அவரது பெண் சிநேகிதிகளைப்
பற்றிய  செய்திகள் கண்ணில் பட்டது.

2012- ஜூன் மாதம் சண்டே கார்டியனில்  ஆப்கன் இளவரசி  நோயல்ஜாகரும் ராகுல்காந்தியும் டில்லி அமன் ஹோட்டலில் சேர்ந்து  காணப்பட்டார்கள். இதே ஜோடியை பிரான்சிலும் ஒன்றாக பார்த்ததாக எழுதப்பட்டிருந்தது. நோயல் மதம் மாறி கத்தோலிக்கராகிய  பின்னர் இருவரும் சேர்ந்து சர்ச்சுக்கு போனார்கள் .ஆனால் எகிப்திய இளவரசர் முகமதுவை நோயல் மணந்துகொண்டு   அந்த நட்பு செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

1998-ல் வெரோனிக் கார்செலி என்பவரை கேம்பிரிட்ஜில் சந்தித்திருக்கிறார்  ராகுல். 1998-ல்  அம்மா சோனியாவுக்காக தேர்தல் பிரசாரம் செய்தபோது  ராகுலுடன்  வெரோனிக்கும் இருந்திருக்கிறார். இந்திய இங்கிலாந்து உலக கிரிக்கெட் போட்டியை  பார்ப்பதற்கு  இருவரும் பர்மிங்காம்  சென்றிருந்தனர். அவர்களது புகைப்படம்  வைரல் ஆகியது.

அந்தமானில் இருவரும்  ஓய்வு எடுத்தார்கள்.லட்சத் தீவு , கேரளம் ஆகிய இடங்களில் சகோதரி பிரியங்கா குடும்பத்துடன்  இவர்கள் இருவரும் சேர்ந்து  காணப்பட்டனர்.

இதற்கு பின்னர் அந்தப் பெண்ணைப்பற்றிய பெயர் மற்றும் இதர தகவல் பிழையாக வெளியானது .அதை மறுத்து ராகுல்காந்தியே பேட்டி அளித்திருந்தார்.

"அவர் எனது கேர்ள் பிரண்ட்.பெயர் வெரோனிக்.ஸ்பானிஷ் . ஆர்க்கிடெட். நல்லவர்." என்றார்.

அவரைப் பற்றிய தகவல் இதுவரை தெரியவில்லை,

சனி, 19 நவம்பர், 2016

சின்ன வெங்காயம் சிற்றின்பம் பெருக்குமா...இடைத்தேர்தல் முடிவுகள்?

இன்னும் இரண்டு நாளில் முடிவுகள் தெரிந்துவிடும்!இடைத்தேர்தலின் பலன்கள்!

ஆண்டியின் கோவணத்தை அவிழ்த்தால் அதிசயமா நடக்கும்?

இப்படித்தான் முடிவுகள் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்!

அதிகார மீறல், பணத்தட்டுப்பாடு நெருக்கடியில் தாராள பணப் புழக்கம்,காவல்துறையின் ஒத்துழைப்பு,அமைச்சர்களின் நேரடிப் பார்வை -இவ்வளவும் அதிமுகவுக்கு ஆதரவு!

இவைகளுக்கு தி.மு.க.வினால் பதிலடி கொடுக்க முடிந்ததா? தடுக்க முடிந்ததா? இடைத்தேர்தல்தானே...என்ன மாற்றமும் ஏற்படப்போவதில்லை  என்கிற மனப்பான்மையுடன்தான் வேலை செய்தார்கள்.

ஜெயித்தால் படுத்தபடியே ஜெயித்தோம் என்றே  மனசாட்சியை மண்மூடி  புதைத்து விட்டவர்கள் சொல்லப்போகிறார்கள்.

ஆளும் கட்சியும் அதிகாரவர்க்கமும் சேர்ந்து செய்த அடாத செயல்களால்  வெற்றி பெற்றார்கள் என எதிர்க்கட்சியினர்  சொல்வார்கள்.

ஆனால் இவைகளையும் மீறி  எதிர்பாராதவை நிகழ்ந்து விட்டால்?

நடக்குமா? வாய்ப்பு இருக்கிறது!

திருப்பரங்குன்றம் தவிர்த்து மற்ற இரு தொகுதியிலும்.....  ஒன்றிலாவது  வரலாம்.

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி கட்சிக்காரர்களுக்கு இருந்த கவலை மக்களிடம் காணப்படவில்லை.

அவர்கள் அன்றாடம் பட்டுக்கொண்டிருக்கும் அவதிகளுக்கு வழி தேடுகிறவர்களாக மாறி இருக்கிறார்கள்.

உண்மையிலேயே வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்கிற மக்கள் விழித்தெழும்  வரை மத்தியதர மக்களும் படித்த வாக்காளர்களும் அளிக்கிற வாக்குகள்  பலன் இன்றியே போகும்.

வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கிறவர்கள் அனைத்துக்கட்சிகளின் விசுவாசிகளாக மாறிக்கிடப்பதால் ஜனநாயகம் போதையிலேயே கிடக்கிறது..

சின்ன வெங்காயம் சிற்றின்பத்தை பெருக்கும் என்பது பெருங் குடிகாரனுக்கு  பொருந்தாது,!

எனது கருத்தில் மாறுபடுகிறவர்கள் இருப்பார்கள் என நினைக்க வில்லை.!

ஆளும் அதிகாரவர்க்கத்துக்கும் திமுகவுக்கும் நடக்கிற பலப் பரீட்சையில்
அதிசயம் நிகழாது!

"உங்களுடன் நான் படுத்துக்கலாமா?"--நடிகையிடம் கேட்ட நடிகர்!

இமாச்சல பிரதேசத்தில் படப்பிடிப்பு!

அமிதாப்பச்சன் ---ஜீனத் அமன் நடித்துக் கொண்டிருந்தார்கள்.

படப்பிடிப்பு முடிந்தது.

நடிகை ஜீனத் தனது அறைக்கு திரும்பியபோது  ஒரு குரல் !

" நீங்க  ரூமில் தனியாத்தான் படுத்துப்பிங்களா"?

"ஆமா ...நான் மட்டும்தான் படுத்துப்பேன்."

"அப்ப நான் உங்க கூட  படுத்துக்கலாமா?"

இந்த கேள்வியை ஜீனத் எதிர்பார்க்கவில்லை.

"படுத்துக்கலாம்! ஆனா நீ இன்னும்  பெரியவனாகல! அப்ப வந்து கேளு!" என்று சொல்லி அந்த சிறுவனின் தலையில் செல்லமாக தட்டினார் ஜீனத் அமன்.!

அந்த சிறுவன்  அபிசேக் பச்சன் .அவருக்கு வயது ஐந்து!












'