ஞாயிறு, 31 ஜனவரி, 2016

சென்னை நட்சத்திர கிரிக்கெட் அணியில் பாலிடிக்ஸ்!

ஆண்டு தோறும்  சி.சி.எல்..எனப்படும் நட்சத்திர கிரிக்கெட் பொட்டி ...சாரி  போட்டி அமர்க்களப்படும். ரசிகர்களுக்கும்  கிரிக்கெட் அபிமானிகளுக்கும்  ஒரு வித பொழுதுபோக்கு.!தங்களது  அபிமான நடிகர்கள்  விளையாடுகிற  'அழகை' பார்ப்பதற்காக   டாஸ்மாக் செலவை  கட் பண்ணிக்கொள்கிறவர்களும் உண்டு நடிகர்கள்  கோலிகுண்டு  விளையாடினாலும்  பார்த்து ரசிப்பதற்கு கூட்டம் வரும்.அந்த அளவுக்கு நமது ரசனை கொடி கட்டி பறந்து வருகிறது..

அவ்வளவு  ஏன், நமது நடிகைகள்  வாலிபால் ஆடுவதாக  அறிவிக்கட்டும் அன்றைக்கு சினிமா தியேட்டர்கள் எல்லாம் காற்று வாங்கும். மொத்த ஊரே  விளையாட்டுத் திடலில்தான்! டிவி சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்புகிற உரிமைகளை  வாங்குவதற்கு தங்களது  அதிகார மையத்தையும்  இறக்கி விட்டு  விடும்.. அப்படி ஒரு கிரேஸ் சினிமா நட்சத்திரங்கள்  மேல் !

எப்போதுமே சென்னை நட்சத்திர கிரிக்கெட் அணியில் காணப்படுகிற விஷாலை நடப்பாண்டில்   காணவில்லை. பத்திரிகையாளர்கள்  சந்திப்புக்கு  ஜீவா தலைவராக  வந்திருந்தார்.தெலுகு  அணிக்கு அக்கினேனி கேப்டன். !அமலா நாகர்ஜுனாவின் .மகன்.

"எங்கே விஷால்?"

''வரமாட்டார். நடிகர் சங்கத்துக்கு செயலாளர் ஆகிட்டார்ல?"

கொஞ்சம்  அழுத்தி. ''அது  உண்மை இல்லீங்கன்றாங்களே?"

மெதுவான குரலில் பதில் வந்தது. "பாலிடிக்ஸ்!. விக்ராந்த்,விஷ்ணு, இப்படி சிலர்  அவரை விரும்பல..அதான்  ஜீவாவை இறக்கிவிட்ருக்காங்க.!"

கடைசியாக களத்தில் பார்த்தால்  ஜீவாவையும் காணவில்லை. அவரும் நமக்கேன்  வம்பு என்று  விலகி ஆர்யாவுக்கு  வழி விட்டிருக்கிறார்.

நடந்து முடிந்த ரெண்டு பந்தயங்களிலும்  சென்னைக்கு   கப்பை கிழங்குதான் !

இதில்  டுவிஸ்ட்  என்னவென்றால் கொச்சி விளையாட்டை பார்க்க  த்ரி சிஸ்டர்ஸ் வருகை தந்ததுதான்,ராதிகா,லதா, ஸ்ரீ பிரியா மூவரும் சென்றிருக்கிறார்கள் என்பதை டிவியில் பார்த்து  தெரிந்துகொண்டோம். பெங்களூருக்கு  சென்று  முதல் மேட்சை பார்க்க செல்லாதவர்கள்  கொச்சிக்கு மட்டும் சென்றதேன்?

அங்க சென்று  சென்னை அணிக்கு ஒரு தமிழன் தலைவராக இல்லையே  சாரி என்று ஸ்ரீபிரியா சொன்னது ஏன்?


இப்படி நான் கேட்கல. விஷயம் தெரிஞ்சவங்க  என்கிட்டே சொன்னதுதான்! 

சனி, 30 ஜனவரி, 2016

கிரேட் எஸ்கேப் ரஜினிகாந்த.!

காரியம் இல்லாம கண்ணாத்தா கதவை  திறந்து வைக்க மாட்டா! ஆராய்ந்து  பார்க்காம  உள்ளே போகமாட்டான்  கருப்பசாமி  என்கிற மாதிரி காரியங்கள் நடந்துகிட்டு  இருக்கு. 'பத்ம' விருதை கொடுத்தால் பார்ட்டி  வளைஞ்சிரும் விரிக்கிற வலையில்  விழிந்திரும்னு ,முன்ன கொடுத்த மாதிரி  வாய்ஸ்  கொடுக்கும்னு பிஜேபி கணக்கு போட்டா......

'அப்படியா கண்ணா....கருவாட்டை வச்சு  எலியை பிடிக்கிற மாதிரி நினச்சிட்டிங்களா..சந்தோசம்.வரட்டா ..பை..' என்று நம்ம ரஜினி தனது  படங்களின் படப்பிடிப்பு  செட்யூலை  இறுக்கிப் பிடிச்சு  உம்மா கொடுத்திட்டாரு. ஆனா  ஆண்டவன்  வேற மாதிரி கடைசி  நிமிஷத்தில  நினைச்சிட்டானா...அதை  சொல்ல முடியாது,

கோவில் இல்லாத சாமி நம்ம ரஜினி! மூன்று தலைமுறை  நட்சத்திரங்களைப் பார்த்தாச்சு. இவரின் அரசியல் பருப்பு  வேகும். வேகாமலும்  போகும்.அதுக்கு  உதாரணங்கள்  இருக்கு.!

1996- மே மாதம்  பாதிவரை பி.எம்.மாக இருந்தார் பி.வி.நரசிம்மராவ். தமிழகத்தில்  அதிமுக.வுடன்  கூட்டணி வைக்கனும்னு  முடிவு பண்ணிட்டார். இது  தமிழக காங்.கட்சிக்கு பிடிக்கல. அப்பதான்  தலைவர் ஜி.கே.மூப்பனார்  தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ்  உருவாச்சு. திமுகவுடன்  சேர்ந்து  வலுவான கூட்டணியாக மாறுனாங்க. நம்ம ரஜினியும் இந்த கூட்டணிக்கு  வாய்ஸ் கொடுத்தார்.

'மீண்டும் ஆட்சியில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால்  அந்த ஆண்டவனே  வந்தாலும் தமிழ்நாட்டை காப்பாத்த முடியாது" என்று  ரஜினி சூப்பராக  வாய்ஸ் கொடுத்தார்.பட்டி தொட்டியெல்லாம்  குஞ்சு குளுவான் எல்லாம்  இதையே  கடவுளின் கட்டளை மாதிரி  நினைச்சு திமுக---த.மா.கா  கூட்டணியை ஜெயிக்க வச்சாங்க.இதன் விளைவு  என்ன ஆச்சுன்னா  தலைவர் ரஜினி  அரசியலுக்கு  வரப்போகிறார் என்கிற  நம்பிக்கையை ரசிகர்களின் மனதில் பதிய வைத்துவிட்டது.

இதற்கு தோதாக 2002--ம் ஆண்டில் காவேரி சிக்கலை கையில் எடுத்தார் ரஜினி.. அதற்கு மக்கள் இயக்கம்னு  பெயர் .கங்கை--காவேரி இணைப்புக்கு ஒரு கோடி ரூபா நானே தர்றேன் என்று பகிரங்கமாக அறிவிப்பும் விட்டாச்சு. இந்த அறிவிப்பு அவரை  பி.ஜெ.பி. பக்கமா கொண்டு போச்சு. அதுக்கு சூத்திரதாரி சோ புண்ணியவான்         .2004-ம் ஆண்டு  தேர்தலில்  பி.ஜெ.பி..கூட்டணியுடன் அதிமுகவை கோர்த்துவிட்டார் சூத்திரதாரி.

இப்பதான் நம்ம சூப்பருக்கு சிக்கல். போன எலக்சன்ல  ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் நாட்டை  ஆண்டவனால் கூட  காப்பாற்ற முடியாதுன்னு  வாய்ஸ் கொடுத்தோம் .இப்ப  இந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக  வாய்ஸ்  கொடுத்தால் ரசிகர்களும் மக்களும் நம்மைப் பத்தி தப்பா நினைப்பாங்களே என்கிற குற்ற உணர்வு  உறுத்த  வாய்ஸை வேறு விதமாக மாற்றிக்கொண்டார்.

'எனது ஓட்டு  வாஜ்பாய்க்கு. எனது  ரசிகர்கள்  அவர்கள் விரும்பிய கட்சிக்கு ஓட்டு போடலாம்' என ரஜினி அறிவித்தார்.. பாராளுமன்ற  தேர்தல் முடிவு திமுகவுக்கு பெரிய வெற்றியை  தந்தது.

தனது  வாய்ஸ் பொய்த்துப் போனதால் அவரும் அப்செட் ரசிகர்களும்  மெகா அப்செட். அரசியலில்  இறங்குவது ஆண்டவன் கையில் இருக்கிறது என சொல்லி  இது நாள் வரை தப்பித்து வருகிறார்.

ஆனால் அரசியல் கட்சிகள் அவரை விடுவதாக இல்லை. வாய்ஸ் இருப்பதாகவே நினைத்து நெருக்கி வருகிறார்கள். அவருக்கு  வாழ்த்துக் கூறுவதாக  சொல்லி பூங்கொத்து கொடுத்து போட்டோவும் எடுத்துக் கொள்வார்கள். அது தேர்தல் காலத்தில் சுவரொட்டிகளாக  பளிச்சிடும்.இது போதாது என்று மீடியாக்களும் மைக்கை  வாய்க்குள் விடாத குறையாக கருத்துக் கேட்டு  சந்தியில் கொண்டுவந்து நிறுத்திவிடும்.

பார்த்தார் சூப்பர் ஸ்டார். இவனுங்க வம்பே வேணாம் .வெளிநாட்டுல  கபாலி, 2.ஓ என இரண்டு படங்களின் படப்பிடிப்பையும்  வைத்துவிட்டார். மலேசியா,அமேரிக்கா என இரு நாடுகளிலும் படப்பிடிப்பை  வைத்துக் கொண்டுவிட்டார். ஓட்டு போடுகிற நாளன்று மட்டும் தலைவர் ஆஜர்,

ஆக தலைவர் ரஜினி கிரேட் எஸ்கேப்!


   
   

திங்கள், 25 ஜனவரி, 2016

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு 'பத்ம' விருது!

பத்ம விபூஷண் விருது.....நம்ம சூப்பர் ஸ்டார்  ரஜினிக்கு!

மகிழ்ச்சியாகவே இருக்கிறது. சகுனிக்கே தாயக்கட்டை உருட்ட
கற்றுக்கொடுக்கும்  இன்றைய அரசியல் வாதிகளின் தொடர்பு இல்லாமல்  இந்த விருது  கிடைத்திருக்குமா?

'சிபாரிசுகள் ஏராளம். அதிலும் மூத்த நடிகையான ஆஷாபரேக்  பனிரெண்டு மாடிகள் ஏறிவந்து தனக்கு பத்மபூஷன் விருது வழங்கப் படவேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி பகிரங்கமாக  சொல்லிய நிலையில் ......

பாஜக மந்திரிகள்  ரஜினியின் இல்லம் சென்று 'மரியாதை நிமித்தம்' சந்தித்து திரும்பியிருக்கிற நிலையில்.....

விரைவில் தமிழகத்தில் தேர்தல் நடக்க இருக்கிற நிலையில்.....

வாஜ்பாயிக்காக  நான்  பிஜேபிக்கு ஓட்டுப் போடுவேன்.என் ரசிகர்கள் வேறு  யாருக்கும் வாக்களிக்கலாம் " என முன்னரே ரஜினி  சொல்லியிருக்கிற  நிலையில் ......

காகம் உட்கார  பனம்பழம் விழுந்த கதையாக  இந்த விருது  வழங்கப்பட்டிருக்கலாமோ ?
 ரஜினியை அரசியலுக்கு  இழுக்கும்  வழியாக  விருது வழங்கப்பட்டிருக்குமா?
லாபியிங் பண்ணித்தான் மத்திய அரசு  விருதுகள் கிடைக்கின்றன என்கிற  குற்றச்சாட்டும் காலம் காலமாக  இருந்து வருகின்றது.

ரஜினியின் செல்வாக்கை  தங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும் சுயநலம் இல்லாமல் இத்தகைய உயர்வான விருது  வழங்கப் பட்டிருக்குமேயானால்  மத்திய அரசை பாராட்டலாம். உயரிய விருது உரியவருக்குத்தான்  வழங்கப் பட்டிருக்கிறது என்பதில் யாருக்கும்  நெருடல்  இருக்கப்போவதில்லை.

அரசியலுக்குள்  ரஜினியை  இழுத்து விட்டு விடுவார்களோ! அப்படி  அவரும்  தைரியமாக  வருவாரேயானால்  கங்கை--காவேரி  நதி நீர்  இணைப்புக்கு  ஒரு தீர்வு கிடைக்கலாம்.

நீங்கள் என்ன  நினைக்கிறீர்கள்?
 
   

சனி, 23 ஜனவரி, 2016

கோகுல நந்தா சுவாமிகளே.....!

காலையில்  பாரதிதாசனை  படித்துவிட்டு  இணைய தளங்களில்  கண்களை  மேய விட்டேன். எழுதுவதற்கு ஏதாவது  சிக்காதா என்று!

சிக்கியது.!

 சில 'நல்ல' சாமியார்களுக்கு உள் நாட்டிலேயே பஞ்சம் இல்லை.
செழிப்பாகவே  கரன்சிகளை  எண்ணிக்கொண்டு  கன்னி கழியாதவர்களையும், கழித்தவர்களையும் அந்தரங்க  அகழ்வாராய்ச்சி நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

வழக்குகள்  பாய்ந்தாலும் பயப்படுவதில்லை. 'ஆண்டவன்' அல்லவா  தீர்ப்பு எழுதப் போகிறான்.

பாரதிதாசனின் வரிகள் மின்னல் வெட்டியது.

''பிறர் பொருளைப்  பறிக்க பெருமாளுண்டு-- பொருளைப்
பின்னின்று பங்கு போடக் குருமார் உண்டு"

இணையத்தில் சிக்கிய செய்தியும்  அதையே  உறுதி செய்தது.

இன்றைய கதையின் நாயகன்  கோகுல நந்தா சுவாமி. வயது  கட்டையில்  போக வேண்டிய  வயதுதான்.அறுபத்தி இரண்டு! லாஸ் ஏஞ்சல்சில் 'ஓம்  இந்தியா  மார்க்கெட்' அதுதான்  சுவாமிகள்  நடத்துகிற  பிசினஸ் ! ஹீலிங்  முறையில் உடல் நோவுகளை திர்ப்பாராம். மெடிடேசன் வழியில் சில  உபாதைகளை போக்குவாராம். இப்படி ஹீலிங், மெடிடேசன் வழியில்  சில பெண்களிடம் 'செக்சுவல்  அசால்ட்' செய்திருக்கிறார்..ப்ராடு வேலைகளிலும்  சுவாமிஜிக்கு  அவார்டே  வழங்கலாம்.

நல்ல வேளை நம்மூரு காவல்துறை  மாதிரி நடக்காமல்  புகாரைப் பெற்றதுமே சுவாமிஜியை  உள்ளே பிடித்து வைத்துவிட்டது  அமெரிக்க போலிஸ்.தற்போது ஒரு லட்சம் டாலர் பிணைத்தொகையில் வெளியில்  வந்திருக்கிறார்.

இந்தியாவின்  மானத்தை இங்குள்ள காவிகள்தான் காலி பண்ணுகிறார்கள்  என்றால்  வெளிநாட்டிலும்  வாழ்கிற காவிகளும்  இப்படித்தானா?

பிரதமர் மோடி கவனிக்கவேண்டும்.

காஜலின் இரண்டாவது கவர்ச்சி ஏவுகணை.....

என்னமோ தெரியவில்லை. காஜலின் கவர்ச்சி ஏவுகணை எதை நோக்கி,
யாரை இலக்காக வைத்து முடுக்கிவிடப்பட்டிருக்கிறதோ தெரியவில்லை.

தாராளங்கள் ஏராளம். இது நாள்வரை தனது உடல் கவர்ச்சியில் எத்தனை  கட்டுப்பாடுகள் வைத்திருந்தாரோ அவை எல்லாம் வாடி வாசல் திறக்கப்பட்ட  ஜல்லிக்கட்டு காளைகளைப் போல பாய்கின்றன. இன்னும் பிகினி  மட்டும்தான் மிச்சம் என்கிற அளவில்  உடைகள்  உரிக்கப்படுகின்றன. இப்படி செய்வதால் முதல் இடத்தை பிடிக்க இயலுமா?

அல்லது மும்பையில் சேலையை போட்டு சீட்டு பிடித்துவிடலாம் என்கிற  முனைப்பா ?

தெரியவில்லை,!

உனக்கேன் இவ்வளவு அக்கறை ,கவலை என கேட்கலாம்.!

ஒரு நல்ல ரசிகனின் கவலையாக இருக்கக் கூடாதா?

நான் காஜலின் கண்களில் கள் அருந்தியவன். மென்னகையில் மேனி  சிலிர்த்தவன்.

நடிப்பில் நளினம்.காதல் காட்சிகளில் மென்மை.மேன்மை. நாமே  நாயகனின்  இடத்தில் இருப்பது போன்ற உணர்வு!

இந்த உணர்வும் ரசனையும் எல்லோருக்கும் இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. அது தனி மனித ரசனை.ஒருவருக்கொருவர்  மாறுபடும்.
 இதோ இங்கிருக்கிற படத்தைப் பார்க்கிறபோது  ஒருவித வலி!

கவிஞனின் கற்பனையில் சொர்க்கம் தெரியலாம்.

நீங்கள் ரசிகரா? கவிஞரா?
?

வியாழன், 21 ஜனவரி, 2016

அருமை சகோதரி நமீதா....!

திரை உலகை பொருத்தவரை இன்று  நமீதா  ஓர் கவர்ச்சி நடிகை. கேரக்டர் ரோல்களில் நடித்த அவரை கவர்ச்சியாக  நடித்தால் பெரிதும் பொருள் ஈட்டலாம் என்கிற பொறிக்குள் இழுத்துக் கொண்டது.

ஜோதிலட்சுமி, ஜெயமாலினி, சிலுக்கு சுமிதா,டிஸ்கோ சாந்தி,மும்தாஜ்  என  இன்னும் சில கவர்ச்சி ராணிகளின்  ஆதிக்கத்தை பார்த்த  நமீதாவுக்கும்  அந்த ஆதிக்க ஆசை வந்துவிட்டதாகவே  கருதலாம். அவரின் ஒற்றை சொல்லான  'மச்சான்ஸ்', ரசிகர்களை நன்றாகவே  வளைத்துப் போட்டுவிட்டது.

மச்சான்ஸ் என்று " ப்ளையிங் கிஸ் " கொடுத்தால் திரண்டிருக்கும் கூட்டமே  குதூகலத்தில்  கொந்தளிக்கிறது. குத்தாட்டம் போட்டு ஆடி மகிழ்கிறார்கள். திரையில்  அடிக்கடி வரவில்லை என்றாலும் அவருக்கென இருக்கும் ரசிக மச்சான்ஸ்கள் மயக்கத்திலேயே மிதக்கிறார்கள்.

அண்மையில்  வி.சி.வடிவுடையானின் படமான 'பொட்டு'பட விழாவில் நமிதாவை சந்தித்தேன்.

என்னுடைய வயதை கேட்டார் .சொன்னேன் .

'என்னை ஏமாற்றுகிறிர்கள்" என்றார்.

'ஏமாற்றவில்லை " என்றேன்,

'நம்ப முடியவில்லை,!'

' ஐம்பதுதான்!'

'இல்லை நமீதா... நான் சொல்வதுதான் சரியானது." எனது முடிவில்  வலுவாக நின்றேன்.

'மறுநொடியே ' அன்பான அண்ணா" என அழைத்தபடியே  அணைத்துக்கொண்டார். இது வட இந்தியாவினரின் பண்பு. மேலைநாட்டு ஆதிக்கத்தின் வெளிப்பாடு.!

நமக்கு திரையில் மட்டுமே அது சாத்தியமாகும். அதில்தான் மகளை அப்பாவும் தழுவிக் கொள்வார். அண்ணனும் தங்கையை  மார்புற அணைத்துக் கொள்வான்.

ஆனால் தமிழ்க்குடும்பங்களில் அத்தகைய நாகரீகத்தை காணமுடியாது. ஆனால் மெத்த படித்த குடும்பங்களில் அணைத்தலும் சகஜம்.

நமீதா சூரத் பெண்மணி.வடநாட்டில் சகோதரனை வாஞ்சையுடன் அணைப்பதில் பிழை இல்லை. அதைத்தான் அவர் செய்திருக்கிறார். நான் அவரின் சகோதரன்.

திங்கள், 18 ஜனவரி, 2016

அசினின் திருமணம் சொர்க்க நகரத்தில்...!

கிறித்தவரான  அசின் இந்துவான ராகுல்சர்மாவை  கைத்தலம் பற்றி அதாவது பத்தொன்பதாம் தேதியன்று கணவன்-மனைவியாக  மாறப்போகிறார்கள். இரண்டு தடவை தாலியும் மோதிரமும் அணியப்போகிறார் அசின்!


இந்திய படஉலகில் யாரும் இப்படி திருமணத்தை நடத்தியிருக்கமாட்டார்கள் என்று மூக்கு காதுகளில் புகை விடப்போகிறார்கள். வெள்ளியும் தங்கமும் கலந்து அச்சடிக்கப்பட்டது  மாதிரி அழைப்பிதழ்கள்.....! பத்திரப் படுத்தவேண்டிய ஆவணம் மாதிரி! கண்களை பறிக்கிறது.

அழைப்பிதழ்கள் மாதிரி கல்யாண அரங்கமும் வானுலக மயன் அமைத்தது மாதிரி அழகு!'துசித் தேவரங்க ரிசார்ட்டில் திருமணம்.கூட்டம் கும்பல் சேராமல் அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்கிறர்கள். மணம் முடிந்த பின்னர் சோனாலி பார்ம் ஹவுசில் பார்ட்டி! மதுவும் விருந்துமாக அமர்க்களப்படப் போகிறது.

வரவேற்பு மும்பையில்! அசினை வளர்த்து விட்ட சென்னையில் நடக்குமா இல்லையா என்பது தெரியவில்லை.

கல்யாணப் பத்திரிகையும் மணவிழா ,வரவேற்பு நிகழவிருக்கும் புகைப்படங்களை  இங்கே பார்க்கலாம்.



ஞாயிறு, 17 ஜனவரி, 2016

காஜல் அகர்வால்..கவர்ச்சியின் சிகரமா,செருக்கா?

கவர்ச்சி என்பது  கலாச்சாரம் சார்ந்து  இருக்கவேண்டும். கால மாறுதலுக்கு  ஏற்ப  கலாச்சாரமும்  சற்றே மாறு படக் கூடியதுதான்! மாற்றத்துக்கு  இலக்காகும்  போது  புழக்கத்தில் இருந்த பொருட்களும் இறந்து போக அவை  அகராதியுடன் கலந்து விடுகின்றன. ஆனால் ஒரு போதும் தமிழகத்தில்  நிர்வாணம் என்பது அனுமதிக்கப்பட்டதில்லை. தனிமனித ஒழுக்கத்தின்  உச்சமாக ஆணும் பெண்ணும்  வாழ்கிறார்கள்.

ஒழுக்கம் ஒருவரின் தனித்த குணத்தை  பொருத்து அமைகிறது.ஆனால் அவர்களும் நிர்வாணத்தை விரும்புவதில்லை.கவர்ச்சி என்பதும்  அறைக்குள் நிகழ்கிற மகிழ்ச்சியின் வெளிப்படுத்தலே!

ஆனால் திரை உலகத்தை பொருத்த அளவில் கவர்ச்சியும் ஆபாசமும் பணம் திரட்டியாகவே கருதப்படுகின்றன. ஒரு வகையில் விளம்பர உத்தியாகவும்  பயன் படுகிறது.

பாவாடை தாவணியிலிருந்து சுடிதாருக்கு மாறிய பெண்கள் தங்களின் மார்பினை மறைக்கக் கூடிய துப்பட்டாவை  கழுத்தை மறைப்பதற்காகவே பயன் படுத்துகிறார்கள். தற்போது லெக்கின்ஸ் என்கிற இறுக்கமான  உடை  தொடைகளின் செழிப்பையும்  பிருஷ்டபாகத்தின் கொழுப்பையும் காட்டுவதாகவே  இருக்கிறது. ஆபாசம் என்பதை உணர்ந்திருந்தாலும்  தங்களது கர்வம் என்பதாகவும்  நினைக்கிறார்கள். இது திரைப்படங்களின்  பாதிப்புதான் என்பதை சொல்லத் தேவையில்லை.

ஒரு நடிகையின் மார்பகத்தின் மத்தியப்பகுதியை (கிளிவேஜ்) காட்டுவதற்கு நடிகையும் தயங்குவதில்லை. அதற்கு  தனியாக பணமும் பெறுகிறார்கள். இத்தகைய காட்சிகளை தணிக்கை குழுவும் கண்டுவதில்லை. அங்கும்  முறை கேடுகள்  நடக்கின்றன. அடல்ஸ் ஒன்லி என்கிற படம் இனி வரும் காலங்களில் மனைவியுடன் அமர்ந்து பார்க்கும் வாய்ப்பையும் கொன்று குழியில் புதைக்கும் என்பதில்  ஐயமில்லை. தாரை தப்பட்டையை  உதாரணமாக சொல்லலாம்.

இங்கு வெளியிடப்பட்டிருக்கிற காஜல் அகர்வாலின்  படம் அவரின் கூச்சமின்மையை காட்டுகிறதா, அல்லது  இதுவும் கடந்து போகும் என்பதை உணர்த்துகிறதா?

நீங்களே சொல்லுங்கள். உங்களின் கருத்துகளை இங்கு அச்சமின்றி பதிவு செய்யுங்கள்.
 

சனி, 16 ஜனவரி, 2016

மக்கள் திலகத்துக்கு சிறப்பு கவனிப்பு!

தேர்தல் வருதுல்ல.... அதான் மக்கள் திலகத்தின் பிறந்த நாளுக்கு  கட்சியில் சிறப்பு கவனிப்பு.! விளம்பரங்களில் இதுவரை இல்லாத முக்கிய இடம். அதுவும் பெரிய அளவில்!

தேர்தல் வருதுல்ல.அதான்.! பேரிடர் வெள்ளத்தில் அமரர் எம்.ஜி.ஆரின் வீடு,அவர் பயன்படுத்திய பொருட்கள் எல்லாம் நாசமாகிவிட்டன  என்று  வெளியாகிய   பத்திரிக்கை செய்திகளுக்கு கட்சியின் கடைசி மட்டத்தில் உள்ளவர்கள்  மனதுக்குள்தான் அழ முடிந்ததே தவிர வாய் விட்டு கதற முடியவில்லை. காரணம் கட்சி என்ன சொல்லுமோ,என்கிற பயம். அந்த அளவுக்கு விசுவாசிகள்!

ஆனால் இப்போது மக்கள்திலகம் தெய்வமாக தெரிகிறார். மறந்தவர்கள் அதாவது மேலிடத்துக்கு விசுவாசமாக இருப்பவர்கள்  அவரை போற்றி புகழ்ந்து விளம்பரம் செய்கிறார்கள்.சுவரொட்டிகளில் தலைவர்!

இன்னும் ஒரு படி மேல் சென்று ஊர் ஊருக்கு எம்.ஜி.ஆர் .சிலைகளை  வைக்கப்போகிறார்களாம்.பேசிக் கொள்கிறார்கள்.இது நாள் வரை இந்த ஐடியா  இல்லாமல் போனதேன்? தேர்தல் வருகிறது. எதிர்ப்பு வலுவாக அமையும் போல் இருக்கிறது.அதனால் ஏற்கனவே கவனிக்கப்படாமல் இருந்த அவரது சிலைகளும் புதிய பொலிவை தரப்போகின்றன.

ஆட்சியும் அதிகாரமும் கையில் இருக்கிறது. மத்திய அரசும் எதையும் கண்டு கொள்வதில்லை என்கிற எண்ணத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்.
எதிர்க்கட்சிகளும் உருப்படியாக கூட்டணி சேருவதாக தெரியவில்லை. யாருடனும் கூட்டணி இல்லை .அன்புமணிதான் முதல்வர் வேட்பாளர் என்பதை ஒப்புக் கொள்கிறவர்களுடன்  மட்டும்தான் கூட்டணி என்ற மருத்துவர் அய்யா தற்போது  'விஜயகாந்துடன் கூட்டணி வைப்பதற்கும் ' இணக்கமாக இருப்பதாக சொல்கிறார். நாளைக்கு  மேலும் பல சமரசங்களுக்கு தயாராக இருப்பதாகவே தெரிகிறது.ஆளும் கட்சி மீது மக்களுக்கு இருக்கிற  வெறுப்பை எவரும் பயனுள்ளதாக்கிக் கொள்ள முடியாமல் திணறுகிறார்கள்.

அதாவது அரசியலில்  அவ்வப்போது மாற்றங்கள் நிகழ்வது சாணக்கியம் என நம்புகிறார்கள் தலைவர்கள்.!

நிலைத்த கொள்கை என்பதற்கு எந்த கட்சியையும் உதாரணமாக சொல்ல முடியவில்லை.பதவியை மட்டுமே குறிக்கோள் என்பதாக சுவீகாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதிமுகவில் இரண்டாம் கட்ட தலைவர் என யாரையும் சொல்ல முடிய வில்லை.அப்படி சொல்லிக்கொண்டால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கு  தெரியும்.

திமுகவில் ஸ்டாலின் ரெடி. பாமகவில் அன்புமணிக்கு  ஆரத்தி !தேமுதிக.வில் பிரேமலதாதான் எல்லாமே! பாஜக. காங்கிரஸ் இரண்டும்  டில்லி தலைமைக்கு கட்டுப்பட்டவை. ஏனைய கட்சிகள் எவருடைய  தோள் உட்கார்வதற்கு வசதியாக இருக்கும் என எண்ணுகின்றன.

வைகோ சிறந்த பேச்சாளர் மட்டுமே. இவர் சார்ந்துள்ள அணிக்கு இவரது  நாவன்மை நல்ல ஆயுதம்.உலக அரசியலை அலசும் இவரால் உள்ளூர்  அரசியல்  கை வசப்படவில்லை.

ஆக தமிழகத்தின் எதிர்காலம் இன்னும் இருட்டிலேயே இருக்கிறது.



புதன், 13 ஜனவரி, 2016

நடிகர்களின் கிரிக்கெட்....!

சென்னையில்  ஆந்திர .சென்னை நடிகர்கள்  பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

எஸ்..நீங்க நினைக்கிறது உண்மைதான். அடையாறு  நட்சத்திர ஹோட்டலில்.!வழக்கம் போல பைக் சோதனை. போன் சோதனை ஜட்டியை மட்டும்தான்  விட்டு விட்டார்கள்.

கிரிக்கெட் போட்டியை பற்றி  இரு மாநிலத்து  அணி வீரர்களும் சொன்னார்கள். கோப்பையை  வாங்குவோம் என்கிற நம்பிக்கை. அது தானே அடிப்படை. தோப்போம்னு நினைத்து யாரும் விளையாடுவது இல்லை.

ஒரு குறும்பு நிருபர் 'நடிகைகளையும்  கிரிக்கெட் விளையாட விடலாமே?' என்றார். ஸ்லோ மோஷனில் அவர் மனக்கண்களில் எப்படிப்பட்ட  சீன்  ஓடுச்சு என்பது தெரியாமல் போய்விடுமா?

இதை புரிந்து கொண்ட ஆந்திர டீமை சேர்ந்தவர் 'பீச் வாலிபால் 'ஆடவிடலாமே !' என்றார். அவர் 'கை' தேர்ந்த ஆள் போலும்.ரசனையில் நிருபரை விட பெரிய ஆள்! அவர் கண்டிப்பாக பந்தை பார்க்கமாட்டார் என்பது மட்டும் புரிந்தது.! கார சட்னிக்கு  அபார மூளைதான்யா!  தெலுங்கு படங்களில் 'கவர்ச்சி தூக்கலாக" எடுப்பாக இருப்பதற்கு இன்னிக்கிதான்  காரணம் தெரிந்தது.

இன்னொரு நிருபர் 'சரத்குமார் சென்னை டீமில் இருந்தபோதுதான் கோப்பை வாங்கினீங்க. அவரை இப்ப டீமில் இழுத்துக் கொள்ளும் ஐடியா இருக்கா?' என்று வம்புக்கு வலையை போட ''நாங்கள்லாம்  ஒரே குடும்பம்தான்..பார்க்கலாம்" என்று பட்டும் படாமலும் பதில் சொன்னார் ஜீவா!

சென்னை டீம் முன்னை விட இப்ப நல்ல பார்ம்மில் இருப்பதாக ஜீவா சொன்னார். இருந்தால் நல்லதுதான்.பார்ட்டி மூடில் இருந்தால் விளக்கெண்ணையை தடவிக் கொண்டு பந்து போட்டது மாதிரி ஆகி விடும்!

பார்க்கலாம் .


 .

செவ்வாய், 12 ஜனவரி, 2016

அண்ணே ..சம்பத்து அண்ணே!

அன்புள்ள அண்ணன் நாஞ்சில் சம்பத்துக்கு ,
                         வணக்கம்ணே! சுகமான்னு கேட்டு வெந்த புண்ணுல வேல விட்டு ஆட்ட ஆசையில்ல.!மனசுக்குள்ள சொறி சிரங்கு மாதிரி ஒரு  நமச்சல். எனக்கே  அப்படி இருந்தா  உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்? எப்படிண்ணே தாங்கிக்கிட்டிங்க?முதல் நாள் டிஸ்மிஸ்.அடுத்த நாள் டிஸ்மிஸ் கேன்சல்னு உங்களுக்கு முன்னோடியா இருந்தவரை  சேர்த்துக்கிட்டாங்க. உங்களுக்கு மட்டும் அது இல்லையா? அதுவும் நீங்க இன்னோவா  வாங்கினவரு! ஆணான வைகோவையே  அசால்ட்டா துக்கி எறிஞ்ச உங்களை துடைச்சு வழிச்சு சுத்தமா தூக்கிட்டாங்களே!

பெங்களூர் டேஸ்ல  நீங்க  நாக்குல  சூடம் ஏத்தாத குறையாக  மனசுக்குள்ளையே  குல சாமிக்கு பொங்கல் வச்சிங்களே! இன்னிக்கி உங்களை 'பொங்க'வச்சிட்டாங்களே!

மீம்ஸ் பார்ட்டிகளுக்கு இப்ப நீங்கதான் மேய்ச்சல் நிலம்.எப்படியெல்லாம்  கிஸ்டரி சொல்விங்க. வைகோவுக்கு ஊர் உலகத்தில இருக்கிற படிக்கட்டுகளை எல்லாம் பதினாலுன்னு சொல்லி  மெய் சிலிர்க்க வச்சவராச்சே! அதிமுகவில் சேர்ந்து அஞ்சு வருசம் கூட ஆகல. உங்க சொல்வீச்சுக்கு  சொக்காதவர்கள் உண்டா? சொத்தை ஆக்கிடுச்சே அம்மா!
ஏண்ணே  உங்க பதவிப் பறிப்புக்கு காரணமாவது சொன்னாங்களா? நீங்க அவங்களுக்கு விசுவாசியா ,அடிமையா,  அதில ஏதாவது  அந்தம்மாவுக்கு டவுட்  வந்திருக்குமோ? நீங்க கொத்தடிமைன்னு சொல்லியிருந்தால் தலை  தப்பி இருக்குமோ?

என்னத்த சொல்றது? தேர்தல் வரப்போகுது .உங்களை மாதிரி இடம் சுட்டி பொருள் விளக்குறதுக்கு அங்க ஆள் இல்லை.அதனால எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கு. ஆர்டர் வந்திரும்னு இந்த அடிமைக்கு ஒரு நம்பிக்கை இருக்கு!  பாவ மன்னிப்பு மாதிரி  அங்கபிரதட்சணம் ஒரு ட்ரிப் கார்டனுக்கு  போனால் மனம் குளிர்ந்தாலும்  குளிரலாம்.ட்ரை பண்றது  தப்பில்லையே! பண்ணி பாருங்க. அந்த இன்னோவா காரை அவசரப்பட்டு  திருப்பி கொடுத்துராதிங்க. ஒரேயடியா கட்டம் கட்டினாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல,

இப்படிக்கு ,
உங்க நலம் விரும்பி ,
நல்லதம்பி.

வெள்ளி, 8 ஜனவரி, 2016

என்னய்யா நடக்கிது இங்கே?

என்னய்யா......ஒண்ணுமே  புரியலியே! என்னதான் நடக்கிது? ஜல்லிக்கட்டுக்கு  அனுமதி கொடுத்தாச்சுன்னு  தெரிஞ்சதுமே அதிமுக  மாட்டு மேல  ஸ்டிக்கர்  ஒட்டாத குறை. அனுமதி வாங்கித்தந்த  அம்மாவேன்னு  பச்சைக்கலர்ல  சுவரெல்லாம்  எழுதியாச்சு. அந்தம்மா  பாவம் கடுதாசி  எழுதுனதோடு சரி! கலைஞரும் எல்லாம் மத்திய அரசிடம் சொல்லியாச்சு ,ஜல்லிக்கட்டு நடக்கும்னு கிளி ஜோஸ்யம் சொல்லி  தினமும் ஒரு அறிக்கை. ஆனா மெய்யாலுமே  பாடுபட்டு அனுமதி வாங்கிய பொன்னாரை பிஜேபி காரனே கண்டுக்கல.என்னய்யா  நடக்கிது இங்க!

ஐயாவுக்கு மஞ்சக் கலரு ஜிங் சான்னா அம்மாவுக்கு பச்சக் கலரு ஜங் ஜக்! ஜால்ரா சவுண்டு காத கிழிக்கிது!

செம்பரம்பாக்கம் ஏரியை  தொறந்து விட்டது பத்தின கவலை இப்ப எவருக்குமே இல்ல. அஞ்சாயிரம் எனக்கு வரல ,இனி வருமா, வராதான்னு  பாங்குக்கு நடைப்பயணமா போயிட்டிருக்காங்க. பொங்கலுக்கு முன்னாடி வந்திரும்னு ஒரு நப்பாசையில சனங்க இருக்கு. ஆளுங்கட்சிக்காரங்களுக்கு  அமோக அறுவடை. நாலு நாளா வெளியே போகமுடியாம பட்டினியா கிடந்தவன் நான் .வீட்டை சுத்தி வெள்ளம். எனக்கும் வரல. இந்த காசு கிடச்ச சந்தோசத்தில வீடு போனது பத்தி கூட கவலை இல்ல. எல்லாம் கடவுள் கொடுத்த தண்டனைன்னு அவனவன்  டாஸ்மாக்ல நிக்கிறான். இந்த சனங்களை நம்பி அடுத்த ஆட்சி நாமதான்னு தலைவருங்க கனவ்ல மெதக்குறாங்க.என்னதான்யா நடக்கிது?

விஜயகாந்துக்கு  இப்ப மவுஸ் கூடிப்போச்சு.ஆளாளுக்கு வடைய காட்டி இத்தனை தாரோம்னு  சொல்றாங்க.தொகுதிய சொல்றாங்களா, அமவுண்டை சொல்றாங்களான்னு புரியல. அது தெரியிறதுக்கு இன்னும் கொஞ்சம் நாளாகும்!

ஜனங்களுக்கு அதிமுகவ்ல யாரு சி.எம்.மா வருவாங்கன்றது நல்லாவே தெரியும்.மூலவரை விட்டுட்டு உற்சவரையா கர்ப்பகிரகத்துக்கு கொண்டு போவாங்க.

திமுகவ்ல பெரியவரா சின்னவராங்கிறதை பொதுக்குழு செயற்குழு கூடி ஜனநாயக மொறைல எடுப்போம் னு சொல்லிரும்..

இன்னொரு கூட்டணி இருக்கு.  அது விஜயகாந்து வந்து சேர்றத பொருத்து இருக்கு!அது மெகா கூட்டணியா, மினி கூட்டணியாங்கிறது  இந்த மாசத்தில  முடிவாகிரும். பிஜேபியில பா.ம.க இருக்கா இல்லையான்னு சரியா தெரியல. சின்ன அய்யாவை பிஜெபி சப்போர்ட் பண்ணுமாங்கிறதும் சந்தேகம்தான். அது போயஸ் கார்டன்ல முடிவாகிற விஷயம். திமுக அதிமுகவுடனல்லாம் ஒட்டும் இல்ல பிட்டும் இல்லன்னு  சொல்ற திருமா,வைகோவ்லாம் நாளைக்கு  யாருடன்  கொடி கட்டுவாங்க,.கம்யூ.கட்சியெல்லாம் எந்த ஜீப்பில் ஏறும்கிறதெல்லாம் மாதாஜி கையில இருக்கு.

ரே கமிசன்னு ஒன்னு தீர்ப்பு சொன்னுச்சே அதையே மறந்தவங்க பெங்களூரு பத்தியா கவலைப்படுவாங்க.

இப்ப கோர்ட்டுக்கும் அரசுக்கும் அவ்வளவா ஆகல. கோர்ட்டு சொல்றதையெல்லாம் அரசு கண்டுக்கிறதில்ல.எல்லோரும் எல்மெட் போட்டுக்கிறதில்ல. பிளக்ஸ் றறபோர்டெல்லாம் சும்மா பொளக்குதுள்ள.போலீசும்  கண்டுக்கிறதில்ல..

என்னய்யா நடக்குது?

என்னமோ நடக்கிதுடா மாதவா!


செவ்வாய், 5 ஜனவரி, 2016

பீப் பாடலுக்கு விதை போட்டது யார்?

          சென்னை பேய் மழையையும்  .அது ஏற்படுத்திய  பேரிழப்பையும்   மறக்க வைத்தது பீப்  சாங் தான்.! இந்திய அளவில் பீப் மாமிசம் பெரிய பிரச்னையை கிளறி சகிப்புத்தன்மையை கூறு  போட்டதை மறக்கடித்துவிட்டது பீப் சாங்.

அதுசரி, இந்த பீப் சாங்கிற்கு விதை போட்டது யாராம்?

சாட்சாத் அந்த பகவான்  கிருஷ்ணன்தான்! மகாபாரத காலத்திலேயே பீப்  உத்தியை அறிமுகப்படுத்தியது  கீதையின் நாயகன்தான்.....

இதை நான் சொல்லலிங்க.!

வியாசரே சொல்லியிருக்கிறார்..அதை சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்  அவரது வியாசர் விருந்தில் சொல்லியிருக்கிறார்.

அதாவது........

பாரத யுத்தம் நடக்கிறது.

துரோணருடைய வில் இடைவிடாமல் பாண்டவ சேனையாட்களை வீழ்த்தி பாண்டவப் படையில் பயத்தை பரப்பிக்கொண்டிருந்ததைப் பார்த்த கிருஷ்ணன் ''அருச்சுனா! இந்த துரோணரை யுத்தத்தில் வெல்லக்கூடியவர் யாரும் இல்லை. இவர் ஆயுதத்தைப் பிடித்து நிற்கும்வரையில் அவரை யுத்த முறையில் தாக்கி வெற்றி பெற முடியாது..தருமத்தை புறக்கணித்து விட்டு ஏதேனும் செய்துதான் தீர வேண்டும்.வேறு வழியில்லை.அசுவத்தாமன் இறந்ததாகக் கேள்விப்பட்டால் துரோணர் போர் புரியமாட்டார்.,,,,,ஆயுதத்தை கீழே போட்டுவிடுவார்.......

இதைக்கேட்ட அருச்சுனன் திகைத்தான்.அசத்திய வழியை ஒப்புக் கொள்ள அவன் விரும்பவில்லை.அதரும  செயலை செய்ய மனம் ஒவ்வாதவர்களாக  இருந்தார்கள்.

யுதிஷ்டிரன்  ''இந்த பாவத்தை நான் சுமக்கிறேன்" என்று சொல்லி நெருக்கடியை தீர்த்தான்.

''என்னுடைய பாபமாக இருக்கட்டும் " என்று மனதை ஸ்திரப்படுத்திக்கொண்டு "அசுவத்தாமன் இறந்தது உண்மை "  என்று உரக்க சொன்னான்.அதருமத்துக்கு பயந்து  "அசுவத்தாமன்  என்கிற யானை என்று தாழ்ந்த குரலில் சேர்த்து சொன்னான்.
{ அதாவது யானை என்பதை அடுத்தவர் கேட்க இயலாதபடி சொன்னான்}

இது வியாசர் சொன்னது  ஆனால் வில்லிப்புத்தூரார்  சொல்வது "யுதிஷ்டிரன்  அஸ்வத்தாமன்'' என்றதுமே அடுத்த கணமே யாரும் அடுத்து என்ன சொல்கிறான் என்பதை கேட்க இயலாதபடி சங்கு ஊதி விட்டான் கிருஷ்ணன் என்கிறார். அதுதாங்க பீப்!

இப்ப என்ன சொல்றது?

பீப் ஒலி துரோணரை கொன்றுவிட்டது.
.
  

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

அமிதாப்பை நடிக்க வேணாம் என்று சொன்ன ரஜினி!

ஹாலிவுட்  நடிகரிலிருந்து இந்தியன் சூப்பர் ஸ்டார் வரை வில்லனாக  நடிப்பதற்கு  இயக்குநர் ஷங்கர்  அழைத்தது  இப்போதுதான்  வெளியில் வருகிறது.

ஷங்கர் இயக்கத்தில்  சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் 2.ஓ படத்தில்  வில்லனாக தற்போது அக்சய்குமார்  நடித்து வருகிறார். இந்த வேடத்தில் நடிப்பதற்கு ஹாலிவுட் நடிகர் அர்னால்டு வரை முட்டி மோதிப் பார்த்தும்  அவர் அசைந்து கொடுக்கவில்லை. இதன்பின்னர்தான் இந்தி நடிகரை ஒப்பந்தம் செய்தார்கள்.

தற்போது இன்னொரு உண்மையும் வெளிப்பட்டிருக்கிறது.

அதை சொன்னவர் இந்தியாவின் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன்.

''என்னை  வில்லன் ரோலில் நடிக்கும்படி டைரக்டர்  ஷங்கர் வந்து கேட்டார். நான் என்னுடைய நண்பர் ரஜினியிடம் வில்லனாக நடிக்கவா என்று கேட்டேன். அவர்  நோ..நோ.. நீங்க வில்லனா நடிப்பதை  மக்கள் ஒத்துக்கமாட்டாங்க. நீங்க வில்லனாக நடிக்கக்கூடாது என்று சொல்லிவிட்டார். நானும் அதன்படி  நடிக்க மறுத்துவிட்டேன்" என்று  சொல்லியிருக்கிறார்  அமிதாப்.

ஆக  மோதாத இடமெல்லாம்  மோதிப்  பார்த்திருக்கிறார்  ஷங்கர்

ரஜினிக்கு  வில்லனாக  அமிதாப் பச்சனா?

நினைக்கவே  கஷ்டமாக  இருக்கிறது.
.

சனி, 2 ஜனவரி, 2016

ஆத்தா... அப்பன் என்ன கதை சொன்னுச்சு?

கொன்னவாயன் மெதுவா  ஆத்தா பக்கமா  வந்து உக்காந்தான்.

அவனுக்கு ரொம்ப நாளாவே ஒரு சந்தேகம். ஆத்தாகிட்ட  எப்படி கேக்கிறதுன்னு டவுட்டு. கோவத்துல  சில நேரம்  செவுலு  பேந்திர மாதிரி  அறை விட்ருவா செவனம்மா! சில நேரம்  'பயபுள்ள எம்புட்டு அறிவா கேக்கிதுன்னு' சிலித்துக்கிருவா! அவ மூடு எப்படியிருக்குன்னு அஞ்சு வயசு  கொன்ன வாயனுக்கு எப்படி தெரியும்.? பய நல்லாத்தான் பேசுவான். மந்திரம் பயலுக்கும் செவனம்மாவுக்கும்  கல்யாணமாகி ஏழு வருசமாகி  கொடி சுத்தி பொறந்த பயதான் கொன்னவாயன். நல்ல வேளை.தாய்மாமன்  இல்ல. செல்லப்பிள்ளை. அதனால அப்பனும் ஆத்தாளும் அவனை அப்படி கொஞ்சி வளத்தாக .அந்த பேரே நெலச்சுப்போச்சு!

செவனம்மாளுக்கு டவுட்டு. என்ன பய நெளியிறான்னு! வாங்கித் தின்ன  காசு கீசு கேக்குமோ? சரி எதுவா இருந்தா என்ன அவன் வாயாலேயே கேக்கட்டுமே!

'ஆத்தா?'ன்னான்.

'என்னப்பு?'- பாந்தமாதான் இவளும் கேட்கிறா!

'ராவானதும் ரொம்ப நேரமா உங்கிட்ட அப்பன் குசுகுசுன்னு கத சொல்லுதே? அந்த கதய எனக்கும் சொல்லேன்."

"பயபுள்ள... ராவானதும் தூங்குதுன்னுல்ல நெனச்சிக்கிட்டிருந்தோம்.எம்பிட்டு நேரம் தூங்காம கெடந்துச்சோ! வெவரம் கெட்ட  மந்திரம் தொட்டதுமே  நமக்கு மந்திருச்சு விட்டமாதிரி ஆகிப்போகுதுன்னு"  செவனம்மாவுக்கும் கொஞ்சம் வெக்கம்தான்..பயலை எப்பிடியாவது  சமாளிச்சி ஆகணுமே?

''சொந்தக்கததேன்! சோகந்தேன்.. ஒங்கப்பனுக்கு கண்ணு சாலேஸ்வரம்..
சரியா பாக்கமுடியாதுல்ல!"

மகன் 'ம்' கொட்டுறான்.

"அதனால  மருதைக்கு போயி டாக்டரை பாத்துச்சாம். அந்த கதயைதான்  தெனக்கிம் சொல்லி மனச  ஆத்திக்கும்,அப்பனுக்கு இந்த  ஆத்தாள விட்டா  வேற யாருப்பு  இருக்கா?  "

'இம்பிட்டு சுருக்கா சொன்ன கதயவா  அப்பன் கொள்ளநேரமா  சொல்லும்?சிரிக்குமே"" பய செவனம்மா  பெத்ததாச்சே! வெவரமாத்தான் கேக்கிறான்.அவ சமாளிக்கிறா!

''இன்னும் முடிக்கலியேப்பு? டாக்டருகிட்ட அப்பன் கேட்டுச்சாம் நீங்க கொடுக்கிற கண்ணாடிய போட்டுக்கிட்டா  படிக்க வந்திருமான்னு! அந்த டாக்டரும்  நல்லாவே படிக்கமுடியும், ரொம்பவும் பவரான கண்ணாடி. எதுக்கு  சந்தேகப்படுறேன்னாராம்.அதுக்கு உங்கப்பன்  சத்தியமா எனக்கு படிக்கவே தெரியாது உங்க கண்ணாடிய போட்டுக்கிட்ட பெறகு படிக்கதெரிஞ்சா .அது போதும் சாமின்னுச்சாம்.உங்கப்பந்தான் பள்ளிக்கூடம் போனதில்லியே ..அத நெனச்சுதான் சிரிக்கும்.நானும் சிரிச்சுக்குவேன்"னா!

பயபுள்ளைக்கு டவுட்டு கிளியராகளே !



ராசி பலன்.....

காலம்பர  நியுஸ் பேப்பர் வந்ததும்  முதலில்  பார்ப்பது அன்றைய ராசி பலனைத்தான்! எட்டுகாலத்தில் நல்ல செய்திகள் இருந்தாலும் இவர் ராசிக்கு கெட்ட பலனை போட்டிருந்தால் தலையில் இடி விழாத குறைதான்.
 கடன்காரன்  வாசலில் பந்தல் போட்டிருவானா?

மாமனார் குடும்பம் வந்து  டேரா போட்ருமா? மன்னார் அண்ட் கம்பெனியிலேர்ந்து இன்டர்வியு வந்திருக்கு மந்திரியிடம் தொங்கியாவது வேலையை வாங்கிக்கொடுன்னு மச்சினன்  மென்னியை புடிப்பானா? மச்சினிச்சிக்கு வந்திருந்தாலாவது  எவன் வீட்டிலாவது வாசலைக்கழுவி  வேலையை வாங்கிறலாம்.

ஒரு வேளை உடம்புக்கு நோவுன்னு படுத்திருந்த தாத்தா புட்டுக்குவாரோ?

மாமிக்கு அன்றைய நாளில் ஆதாயங்கள்னு போட்டிருந்தா  ஆகாசத்தில் பறக்காத குறைதான்.ஆத்துக்காரருக்கு மத்தியான லஞ்ச் முருங்கைக்காய் சாம்பாரும் நெய்யில் வறுத்த  முந்திரிப்பருப்பு பாயாசமும்தான்! நைட்  கவனிப்பு தனி! ரொம்ப நாளா  கேட்கனும்னு நெனச்சிக்கிட்டிருந்த ரெண்டுவட செயினுக்கு ராத்திரியே மந்திரிச்சு விட்ரனும்!

காலேஜ் போற  ராகவனுக்கு எதிர்பாராத திருப்பம்னு போட்டிருந்தா பய காலு தரையிலேயே படாது. செருப்ப தூக்கி காட்டுன ரம்யா  இன்னிக்கி ப்ளையிங்  கிஸ் கொடுத்திருப்பா.நெனப்புலேயே டூயட் பாடி ஐநாக்ஸ்ல படம் பாத்திருப்பான்.,அன்னிக்கி அப்பாவின் பர்ஸ்லேஇருந்து  ஒரு அமவுண்டு லவட்டியிருப்பான்

 ஒரு குடும்பத்தில் இப்படியிருந்தா மத்த குடும்பத்திலே இருக்கிறவங்க  எப்படியெல்லாம் .கனவுல போட் விட்டிருப்பாங்க!

இதுக்கு முன்னாடி ஒரு பிளாஷ்பேக் . பத்திரிகை  ஆபிஸ்ல!

எடிட்டர்; அந்த ஜோசியன் ராசிபலனை இன்னும் அனுப்பலே! அதனால் போன  செவ்வாக்கிழமை போட்டிருந்த ராசி பலனில் ஒவ்வரு ராசியையும் இடம் மாத்தி போட்ரு!

லேஅவுட் ஆள்.; ஓகே சார்!

துப்பாக்கியால் சுடப்பட்ட விஜயகாந்த்.......

சென்னை நகரத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கு எளிதாக அனுமதி கிடைத்த  காலம் அது,!

இன்றைய ஸ்பென்சர்ஸ் அன்று இப்போது இருப்பதுபோல  இருக்கவில்லை. சிவப்பு நிறத்தில்  அழகாக இருக்கும்.அண்ணா சாலையில்  அதுவும் ஒரு சின்னமாக கருதப்பட்டது. அது ஒரு கனாக்காலம்.

அதன் அருகில் சுரங்கப்பாதையில் இயக்குநர் ஆர் .சுந்தரராஜனின் காலையும்  நீயே ..மாலையும் நீயே என்கிற படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

விஜயகாந்த் -மனசாட்சி நட்ராஜ் இருவரும் நடித்தார்கள். நட்ராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நண்பர்..அன்புள்ள ரஜினிகாந்த் என்கிற படத்தை இவர்தான் இயக்கினார்.

கைத்துப்பாக்கியால் விஜயகாந்தை அவர் சுடுவது போன்ற காட்சி அன்று படமாக்கப்பட்டது.வழக்கம் போல டம்மிதான் என்றாலும் கேப்டனின் கண் அருகில் துகள் பாய்ந்து ரத்தம் வழிய ஒரே களேபரம்..மயக்கமாகிவிட்ட அவரை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டுபோய்விட்டார்கள்.

வெளியில் எப்படி பேசிக்கொண்டார்கள் என்றால் ரஜினியின் நண்பரான நட்ராஜ் வேண்டுமென்றே சுட்டுவிட்டதாக பொய்யான தகவலை பரப்பிவிட்டார்கள். அந்த காலத்தில் சூப்பருக்கும், கேப்டனுக்கும்தான் போட்டி என சொல்லிக்கொள்வார்கள். மதுரையில் இருந்து  விஜய ராஜாக வந்தவரை  விஜயகாந்த் என்று பெயர் மாற்றம் செய்ததே சினிமாக்காரர்கள்தான்! இருவருமே வெற்றிப்படங்களை  கொடுத்ததும் ஒரு காரணம்தான்.

மயக்கமருந்து கொடுத்து  சிறிய அளவில் மயக்கமருந்து கொடுத்து  டம்மி குண்டு துகள்களை அகற்றினர்.

இந்த ஆபத்தான விபத்து  விஜயகாந்தின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு  இரண்டாவது நாள் நடந்தது. கண்ணே போய்விட்டதாகவும் பேச ஆரம்பித்தார்கள்.ஆனால் விபத்து பற்றி விரிவாக கேப்டன் தரப்பில் சொல்லப்பட்டதால் மோதல்கள் தவிர்க்கப்பட்டன.
--நன்றி. 'ராணி' வார  இதழ்.