சனி, 2 ஜனவரி, 2016

துப்பாக்கியால் சுடப்பட்ட விஜயகாந்த்.......

சென்னை நகரத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கு எளிதாக அனுமதி கிடைத்த  காலம் அது,!

இன்றைய ஸ்பென்சர்ஸ் அன்று இப்போது இருப்பதுபோல  இருக்கவில்லை. சிவப்பு நிறத்தில்  அழகாக இருக்கும்.அண்ணா சாலையில்  அதுவும் ஒரு சின்னமாக கருதப்பட்டது. அது ஒரு கனாக்காலம்.

அதன் அருகில் சுரங்கப்பாதையில் இயக்குநர் ஆர் .சுந்தரராஜனின் காலையும்  நீயே ..மாலையும் நீயே என்கிற படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

விஜயகாந்த் -மனசாட்சி நட்ராஜ் இருவரும் நடித்தார்கள். நட்ராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நண்பர்..அன்புள்ள ரஜினிகாந்த் என்கிற படத்தை இவர்தான் இயக்கினார்.

கைத்துப்பாக்கியால் விஜயகாந்தை அவர் சுடுவது போன்ற காட்சி அன்று படமாக்கப்பட்டது.வழக்கம் போல டம்மிதான் என்றாலும் கேப்டனின் கண் அருகில் துகள் பாய்ந்து ரத்தம் வழிய ஒரே களேபரம்..மயக்கமாகிவிட்ட அவரை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டுபோய்விட்டார்கள்.

வெளியில் எப்படி பேசிக்கொண்டார்கள் என்றால் ரஜினியின் நண்பரான நட்ராஜ் வேண்டுமென்றே சுட்டுவிட்டதாக பொய்யான தகவலை பரப்பிவிட்டார்கள். அந்த காலத்தில் சூப்பருக்கும், கேப்டனுக்கும்தான் போட்டி என சொல்லிக்கொள்வார்கள். மதுரையில் இருந்து  விஜய ராஜாக வந்தவரை  விஜயகாந்த் என்று பெயர் மாற்றம் செய்ததே சினிமாக்காரர்கள்தான்! இருவருமே வெற்றிப்படங்களை  கொடுத்ததும் ஒரு காரணம்தான்.

மயக்கமருந்து கொடுத்து  சிறிய அளவில் மயக்கமருந்து கொடுத்து  டம்மி குண்டு துகள்களை அகற்றினர்.

இந்த ஆபத்தான விபத்து  விஜயகாந்தின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு  இரண்டாவது நாள் நடந்தது. கண்ணே போய்விட்டதாகவும் பேச ஆரம்பித்தார்கள்.ஆனால் விபத்து பற்றி விரிவாக கேப்டன் தரப்பில் சொல்லப்பட்டதால் மோதல்கள் தவிர்க்கப்பட்டன.
--நன்றி. 'ராணி' வார  இதழ்.

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...