சனி, 16 ஜனவரி, 2016

மக்கள் திலகத்துக்கு சிறப்பு கவனிப்பு!

தேர்தல் வருதுல்ல.... அதான் மக்கள் திலகத்தின் பிறந்த நாளுக்கு  கட்சியில் சிறப்பு கவனிப்பு.! விளம்பரங்களில் இதுவரை இல்லாத முக்கிய இடம். அதுவும் பெரிய அளவில்!

தேர்தல் வருதுல்ல.அதான்.! பேரிடர் வெள்ளத்தில் அமரர் எம்.ஜி.ஆரின் வீடு,அவர் பயன்படுத்திய பொருட்கள் எல்லாம் நாசமாகிவிட்டன  என்று  வெளியாகிய   பத்திரிக்கை செய்திகளுக்கு கட்சியின் கடைசி மட்டத்தில் உள்ளவர்கள்  மனதுக்குள்தான் அழ முடிந்ததே தவிர வாய் விட்டு கதற முடியவில்லை. காரணம் கட்சி என்ன சொல்லுமோ,என்கிற பயம். அந்த அளவுக்கு விசுவாசிகள்!

ஆனால் இப்போது மக்கள்திலகம் தெய்வமாக தெரிகிறார். மறந்தவர்கள் அதாவது மேலிடத்துக்கு விசுவாசமாக இருப்பவர்கள்  அவரை போற்றி புகழ்ந்து விளம்பரம் செய்கிறார்கள்.சுவரொட்டிகளில் தலைவர்!

இன்னும் ஒரு படி மேல் சென்று ஊர் ஊருக்கு எம்.ஜி.ஆர் .சிலைகளை  வைக்கப்போகிறார்களாம்.பேசிக் கொள்கிறார்கள்.இது நாள் வரை இந்த ஐடியா  இல்லாமல் போனதேன்? தேர்தல் வருகிறது. எதிர்ப்பு வலுவாக அமையும் போல் இருக்கிறது.அதனால் ஏற்கனவே கவனிக்கப்படாமல் இருந்த அவரது சிலைகளும் புதிய பொலிவை தரப்போகின்றன.

ஆட்சியும் அதிகாரமும் கையில் இருக்கிறது. மத்திய அரசும் எதையும் கண்டு கொள்வதில்லை என்கிற எண்ணத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்.
எதிர்க்கட்சிகளும் உருப்படியாக கூட்டணி சேருவதாக தெரியவில்லை. யாருடனும் கூட்டணி இல்லை .அன்புமணிதான் முதல்வர் வேட்பாளர் என்பதை ஒப்புக் கொள்கிறவர்களுடன்  மட்டும்தான் கூட்டணி என்ற மருத்துவர் அய்யா தற்போது  'விஜயகாந்துடன் கூட்டணி வைப்பதற்கும் ' இணக்கமாக இருப்பதாக சொல்கிறார். நாளைக்கு  மேலும் பல சமரசங்களுக்கு தயாராக இருப்பதாகவே தெரிகிறது.ஆளும் கட்சி மீது மக்களுக்கு இருக்கிற  வெறுப்பை எவரும் பயனுள்ளதாக்கிக் கொள்ள முடியாமல் திணறுகிறார்கள்.

அதாவது அரசியலில்  அவ்வப்போது மாற்றங்கள் நிகழ்வது சாணக்கியம் என நம்புகிறார்கள் தலைவர்கள்.!

நிலைத்த கொள்கை என்பதற்கு எந்த கட்சியையும் உதாரணமாக சொல்ல முடியவில்லை.பதவியை மட்டுமே குறிக்கோள் என்பதாக சுவீகாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதிமுகவில் இரண்டாம் கட்ட தலைவர் என யாரையும் சொல்ல முடிய வில்லை.அப்படி சொல்லிக்கொண்டால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கு  தெரியும்.

திமுகவில் ஸ்டாலின் ரெடி. பாமகவில் அன்புமணிக்கு  ஆரத்தி !தேமுதிக.வில் பிரேமலதாதான் எல்லாமே! பாஜக. காங்கிரஸ் இரண்டும்  டில்லி தலைமைக்கு கட்டுப்பட்டவை. ஏனைய கட்சிகள் எவருடைய  தோள் உட்கார்வதற்கு வசதியாக இருக்கும் என எண்ணுகின்றன.

வைகோ சிறந்த பேச்சாளர் மட்டுமே. இவர் சார்ந்துள்ள அணிக்கு இவரது  நாவன்மை நல்ல ஆயுதம்.உலக அரசியலை அலசும் இவரால் உள்ளூர்  அரசியல்  கை வசப்படவில்லை.

ஆக தமிழகத்தின் எதிர்காலம் இன்னும் இருட்டிலேயே இருக்கிறது.கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...