Saturday, January 30, 2016

கிரேட் எஸ்கேப் ரஜினிகாந்த.!

காரியம் இல்லாம கண்ணாத்தா கதவை  திறந்து வைக்க மாட்டா! ஆராய்ந்து  பார்க்காம  உள்ளே போகமாட்டான்  கருப்பசாமி  என்கிற மாதிரி காரியங்கள் நடந்துகிட்டு  இருக்கு. 'பத்ம' விருதை கொடுத்தால் பார்ட்டி  வளைஞ்சிரும் விரிக்கிற வலையில்  விழிந்திரும்னு ,முன்ன கொடுத்த மாதிரி  வாய்ஸ்  கொடுக்கும்னு பிஜேபி கணக்கு போட்டா......

'அப்படியா கண்ணா....கருவாட்டை வச்சு  எலியை பிடிக்கிற மாதிரி நினச்சிட்டிங்களா..சந்தோசம்.வரட்டா ..பை..' என்று நம்ம ரஜினி தனது  படங்களின் படப்பிடிப்பு  செட்யூலை  இறுக்கிப் பிடிச்சு  உம்மா கொடுத்திட்டாரு. ஆனா  ஆண்டவன்  வேற மாதிரி கடைசி  நிமிஷத்தில  நினைச்சிட்டானா...அதை  சொல்ல முடியாது,

கோவில் இல்லாத சாமி நம்ம ரஜினி! மூன்று தலைமுறை  நட்சத்திரங்களைப் பார்த்தாச்சு. இவரின் அரசியல் பருப்பு  வேகும். வேகாமலும்  போகும்.அதுக்கு  உதாரணங்கள்  இருக்கு.!

1996- மே மாதம்  பாதிவரை பி.எம்.மாக இருந்தார் பி.வி.நரசிம்மராவ். தமிழகத்தில்  அதிமுக.வுடன்  கூட்டணி வைக்கனும்னு  முடிவு பண்ணிட்டார். இது  தமிழக காங்.கட்சிக்கு பிடிக்கல. அப்பதான்  தலைவர் ஜி.கே.மூப்பனார்  தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ்  உருவாச்சு. திமுகவுடன்  சேர்ந்து  வலுவான கூட்டணியாக மாறுனாங்க. நம்ம ரஜினியும் இந்த கூட்டணிக்கு  வாய்ஸ் கொடுத்தார்.

'மீண்டும் ஆட்சியில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால்  அந்த ஆண்டவனே  வந்தாலும் தமிழ்நாட்டை காப்பாத்த முடியாது" என்று  ரஜினி சூப்பராக  வாய்ஸ் கொடுத்தார்.பட்டி தொட்டியெல்லாம்  குஞ்சு குளுவான் எல்லாம்  இதையே  கடவுளின் கட்டளை மாதிரி  நினைச்சு திமுக---த.மா.கா  கூட்டணியை ஜெயிக்க வச்சாங்க.இதன் விளைவு  என்ன ஆச்சுன்னா  தலைவர் ரஜினி  அரசியலுக்கு  வரப்போகிறார் என்கிற  நம்பிக்கையை ரசிகர்களின் மனதில் பதிய வைத்துவிட்டது.

இதற்கு தோதாக 2002--ம் ஆண்டில் காவேரி சிக்கலை கையில் எடுத்தார் ரஜினி.. அதற்கு மக்கள் இயக்கம்னு  பெயர் .கங்கை--காவேரி இணைப்புக்கு ஒரு கோடி ரூபா நானே தர்றேன் என்று பகிரங்கமாக அறிவிப்பும் விட்டாச்சு. இந்த அறிவிப்பு அவரை  பி.ஜெ.பி. பக்கமா கொண்டு போச்சு. அதுக்கு சூத்திரதாரி சோ புண்ணியவான்         .2004-ம் ஆண்டு  தேர்தலில்  பி.ஜெ.பி..கூட்டணியுடன் அதிமுகவை கோர்த்துவிட்டார் சூத்திரதாரி.

இப்பதான் நம்ம சூப்பருக்கு சிக்கல். போன எலக்சன்ல  ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் நாட்டை  ஆண்டவனால் கூட  காப்பாற்ற முடியாதுன்னு  வாய்ஸ் கொடுத்தோம் .இப்ப  இந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக  வாய்ஸ்  கொடுத்தால் ரசிகர்களும் மக்களும் நம்மைப் பத்தி தப்பா நினைப்பாங்களே என்கிற குற்ற உணர்வு  உறுத்த  வாய்ஸை வேறு விதமாக மாற்றிக்கொண்டார்.

'எனது ஓட்டு  வாஜ்பாய்க்கு. எனது  ரசிகர்கள்  அவர்கள் விரும்பிய கட்சிக்கு ஓட்டு போடலாம்' என ரஜினி அறிவித்தார்.. பாராளுமன்ற  தேர்தல் முடிவு திமுகவுக்கு பெரிய வெற்றியை  தந்தது.

தனது  வாய்ஸ் பொய்த்துப் போனதால் அவரும் அப்செட் ரசிகர்களும்  மெகா அப்செட். அரசியலில்  இறங்குவது ஆண்டவன் கையில் இருக்கிறது என சொல்லி  இது நாள் வரை தப்பித்து வருகிறார்.

ஆனால் அரசியல் கட்சிகள் அவரை விடுவதாக இல்லை. வாய்ஸ் இருப்பதாகவே நினைத்து நெருக்கி வருகிறார்கள். அவருக்கு  வாழ்த்துக் கூறுவதாக  சொல்லி பூங்கொத்து கொடுத்து போட்டோவும் எடுத்துக் கொள்வார்கள். அது தேர்தல் காலத்தில் சுவரொட்டிகளாக  பளிச்சிடும்.இது போதாது என்று மீடியாக்களும் மைக்கை  வாய்க்குள் விடாத குறையாக கருத்துக் கேட்டு  சந்தியில் கொண்டுவந்து நிறுத்திவிடும்.

பார்த்தார் சூப்பர் ஸ்டார். இவனுங்க வம்பே வேணாம் .வெளிநாட்டுல  கபாலி, 2.ஓ என இரண்டு படங்களின் படப்பிடிப்பையும்  வைத்துவிட்டார். மலேசியா,அமேரிக்கா என இரு நாடுகளிலும் படப்பிடிப்பை  வைத்துக் கொண்டுவிட்டார். ஓட்டு போடுகிற நாளன்று மட்டும் தலைவர் ஆஜர்,

ஆக தலைவர் ரஜினி கிரேட் எஸ்கேப்!


   
   

No comments:

சுட்டுக் கொன்றாலும் தப்பில்லை.!

                             மகாசிவராத்திரி. ஈஸ்வரை தரிசனம் செய்து விட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாள் லலிதா.( பெயர் மாற்றப்பட்டு...