செவ்வாய், 5 ஜனவரி, 2016

பீப் பாடலுக்கு விதை போட்டது யார்?

          சென்னை பேய் மழையையும்  .அது ஏற்படுத்திய  பேரிழப்பையும்   மறக்க வைத்தது பீப்  சாங் தான்.! இந்திய அளவில் பீப் மாமிசம் பெரிய பிரச்னையை கிளறி சகிப்புத்தன்மையை கூறு  போட்டதை மறக்கடித்துவிட்டது பீப் சாங்.

அதுசரி, இந்த பீப் சாங்கிற்கு விதை போட்டது யாராம்?

சாட்சாத் அந்த பகவான்  கிருஷ்ணன்தான்! மகாபாரத காலத்திலேயே பீப்  உத்தியை அறிமுகப்படுத்தியது  கீதையின் நாயகன்தான்.....

இதை நான் சொல்லலிங்க.!

வியாசரே சொல்லியிருக்கிறார்..அதை சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்  அவரது வியாசர் விருந்தில் சொல்லியிருக்கிறார்.

அதாவது........

பாரத யுத்தம் நடக்கிறது.

துரோணருடைய வில் இடைவிடாமல் பாண்டவ சேனையாட்களை வீழ்த்தி பாண்டவப் படையில் பயத்தை பரப்பிக்கொண்டிருந்ததைப் பார்த்த கிருஷ்ணன் ''அருச்சுனா! இந்த துரோணரை யுத்தத்தில் வெல்லக்கூடியவர் யாரும் இல்லை. இவர் ஆயுதத்தைப் பிடித்து நிற்கும்வரையில் அவரை யுத்த முறையில் தாக்கி வெற்றி பெற முடியாது..தருமத்தை புறக்கணித்து விட்டு ஏதேனும் செய்துதான் தீர வேண்டும்.வேறு வழியில்லை.அசுவத்தாமன் இறந்ததாகக் கேள்விப்பட்டால் துரோணர் போர் புரியமாட்டார்.,,,,,ஆயுதத்தை கீழே போட்டுவிடுவார்.......

இதைக்கேட்ட அருச்சுனன் திகைத்தான்.அசத்திய வழியை ஒப்புக் கொள்ள அவன் விரும்பவில்லை.அதரும  செயலை செய்ய மனம் ஒவ்வாதவர்களாக  இருந்தார்கள்.

யுதிஷ்டிரன்  ''இந்த பாவத்தை நான் சுமக்கிறேன்" என்று சொல்லி நெருக்கடியை தீர்த்தான்.

''என்னுடைய பாபமாக இருக்கட்டும் " என்று மனதை ஸ்திரப்படுத்திக்கொண்டு "அசுவத்தாமன் இறந்தது உண்மை "  என்று உரக்க சொன்னான்.அதருமத்துக்கு பயந்து  "அசுவத்தாமன்  என்கிற யானை என்று தாழ்ந்த குரலில் சேர்த்து சொன்னான்.
{ அதாவது யானை என்பதை அடுத்தவர் கேட்க இயலாதபடி சொன்னான்}

இது வியாசர் சொன்னது  ஆனால் வில்லிப்புத்தூரார்  சொல்வது "யுதிஷ்டிரன்  அஸ்வத்தாமன்'' என்றதுமே அடுத்த கணமே யாரும் அடுத்து என்ன சொல்கிறான் என்பதை கேட்க இயலாதபடி சங்கு ஊதி விட்டான் கிருஷ்ணன் என்கிறார். அதுதாங்க பீப்!

இப்ப என்ன சொல்றது?

பீப் ஒலி துரோணரை கொன்றுவிட்டது.
.
  

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...