ஞாயிறு, 31 ஜனவரி, 2016

சென்னை நட்சத்திர கிரிக்கெட் அணியில் பாலிடிக்ஸ்!

ஆண்டு தோறும்  சி.சி.எல்..எனப்படும் நட்சத்திர கிரிக்கெட் பொட்டி ...சாரி  போட்டி அமர்க்களப்படும். ரசிகர்களுக்கும்  கிரிக்கெட் அபிமானிகளுக்கும்  ஒரு வித பொழுதுபோக்கு.!தங்களது  அபிமான நடிகர்கள்  விளையாடுகிற  'அழகை' பார்ப்பதற்காக   டாஸ்மாக் செலவை  கட் பண்ணிக்கொள்கிறவர்களும் உண்டு நடிகர்கள்  கோலிகுண்டு  விளையாடினாலும்  பார்த்து ரசிப்பதற்கு கூட்டம் வரும்.அந்த அளவுக்கு நமது ரசனை கொடி கட்டி பறந்து வருகிறது..

அவ்வளவு  ஏன், நமது நடிகைகள்  வாலிபால் ஆடுவதாக  அறிவிக்கட்டும் அன்றைக்கு சினிமா தியேட்டர்கள் எல்லாம் காற்று வாங்கும். மொத்த ஊரே  விளையாட்டுத் திடலில்தான்! டிவி சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்புகிற உரிமைகளை  வாங்குவதற்கு தங்களது  அதிகார மையத்தையும்  இறக்கி விட்டு  விடும்.. அப்படி ஒரு கிரேஸ் சினிமா நட்சத்திரங்கள்  மேல் !

எப்போதுமே சென்னை நட்சத்திர கிரிக்கெட் அணியில் காணப்படுகிற விஷாலை நடப்பாண்டில்   காணவில்லை. பத்திரிகையாளர்கள்  சந்திப்புக்கு  ஜீவா தலைவராக  வந்திருந்தார்.தெலுகு  அணிக்கு அக்கினேனி கேப்டன். !அமலா நாகர்ஜுனாவின் .மகன்.

"எங்கே விஷால்?"

''வரமாட்டார். நடிகர் சங்கத்துக்கு செயலாளர் ஆகிட்டார்ல?"

கொஞ்சம்  அழுத்தி. ''அது  உண்மை இல்லீங்கன்றாங்களே?"

மெதுவான குரலில் பதில் வந்தது. "பாலிடிக்ஸ்!. விக்ராந்த்,விஷ்ணு, இப்படி சிலர்  அவரை விரும்பல..அதான்  ஜீவாவை இறக்கிவிட்ருக்காங்க.!"

கடைசியாக களத்தில் பார்த்தால்  ஜீவாவையும் காணவில்லை. அவரும் நமக்கேன்  வம்பு என்று  விலகி ஆர்யாவுக்கு  வழி விட்டிருக்கிறார்.

நடந்து முடிந்த ரெண்டு பந்தயங்களிலும்  சென்னைக்கு   கப்பை கிழங்குதான் !

இதில்  டுவிஸ்ட்  என்னவென்றால் கொச்சி விளையாட்டை பார்க்க  த்ரி சிஸ்டர்ஸ் வருகை தந்ததுதான்,ராதிகா,லதா, ஸ்ரீ பிரியா மூவரும் சென்றிருக்கிறார்கள் என்பதை டிவியில் பார்த்து  தெரிந்துகொண்டோம். பெங்களூருக்கு  சென்று  முதல் மேட்சை பார்க்க செல்லாதவர்கள்  கொச்சிக்கு மட்டும் சென்றதேன்?

அங்க சென்று  சென்னை அணிக்கு ஒரு தமிழன் தலைவராக இல்லையே  சாரி என்று ஸ்ரீபிரியா சொன்னது ஏன்?


இப்படி நான் கேட்கல. விஷயம் தெரிஞ்சவங்க  என்கிட்டே சொன்னதுதான்! 

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...