வெள்ளி, 8 ஜனவரி, 2016

என்னய்யா நடக்கிது இங்கே?

என்னய்யா......ஒண்ணுமே  புரியலியே! என்னதான் நடக்கிது? ஜல்லிக்கட்டுக்கு  அனுமதி கொடுத்தாச்சுன்னு  தெரிஞ்சதுமே அதிமுக  மாட்டு மேல  ஸ்டிக்கர்  ஒட்டாத குறை. அனுமதி வாங்கித்தந்த  அம்மாவேன்னு  பச்சைக்கலர்ல  சுவரெல்லாம்  எழுதியாச்சு. அந்தம்மா  பாவம் கடுதாசி  எழுதுனதோடு சரி! கலைஞரும் எல்லாம் மத்திய அரசிடம் சொல்லியாச்சு ,ஜல்லிக்கட்டு நடக்கும்னு கிளி ஜோஸ்யம் சொல்லி  தினமும் ஒரு அறிக்கை. ஆனா மெய்யாலுமே  பாடுபட்டு அனுமதி வாங்கிய பொன்னாரை பிஜேபி காரனே கண்டுக்கல.என்னய்யா  நடக்கிது இங்க!

ஐயாவுக்கு மஞ்சக் கலரு ஜிங் சான்னா அம்மாவுக்கு பச்சக் கலரு ஜங் ஜக்! ஜால்ரா சவுண்டு காத கிழிக்கிது!

செம்பரம்பாக்கம் ஏரியை  தொறந்து விட்டது பத்தின கவலை இப்ப எவருக்குமே இல்ல. அஞ்சாயிரம் எனக்கு வரல ,இனி வருமா, வராதான்னு  பாங்குக்கு நடைப்பயணமா போயிட்டிருக்காங்க. பொங்கலுக்கு முன்னாடி வந்திரும்னு ஒரு நப்பாசையில சனங்க இருக்கு. ஆளுங்கட்சிக்காரங்களுக்கு  அமோக அறுவடை. நாலு நாளா வெளியே போகமுடியாம பட்டினியா கிடந்தவன் நான் .வீட்டை சுத்தி வெள்ளம். எனக்கும் வரல. இந்த காசு கிடச்ச சந்தோசத்தில வீடு போனது பத்தி கூட கவலை இல்ல. எல்லாம் கடவுள் கொடுத்த தண்டனைன்னு அவனவன்  டாஸ்மாக்ல நிக்கிறான். இந்த சனங்களை நம்பி அடுத்த ஆட்சி நாமதான்னு தலைவருங்க கனவ்ல மெதக்குறாங்க.என்னதான்யா நடக்கிது?

விஜயகாந்துக்கு  இப்ப மவுஸ் கூடிப்போச்சு.ஆளாளுக்கு வடைய காட்டி இத்தனை தாரோம்னு  சொல்றாங்க.தொகுதிய சொல்றாங்களா, அமவுண்டை சொல்றாங்களான்னு புரியல. அது தெரியிறதுக்கு இன்னும் கொஞ்சம் நாளாகும்!

ஜனங்களுக்கு அதிமுகவ்ல யாரு சி.எம்.மா வருவாங்கன்றது நல்லாவே தெரியும்.மூலவரை விட்டுட்டு உற்சவரையா கர்ப்பகிரகத்துக்கு கொண்டு போவாங்க.

திமுகவ்ல பெரியவரா சின்னவராங்கிறதை பொதுக்குழு செயற்குழு கூடி ஜனநாயக மொறைல எடுப்போம் னு சொல்லிரும்..

இன்னொரு கூட்டணி இருக்கு.  அது விஜயகாந்து வந்து சேர்றத பொருத்து இருக்கு!அது மெகா கூட்டணியா, மினி கூட்டணியாங்கிறது  இந்த மாசத்தில  முடிவாகிரும். பிஜேபியில பா.ம.க இருக்கா இல்லையான்னு சரியா தெரியல. சின்ன அய்யாவை பிஜெபி சப்போர்ட் பண்ணுமாங்கிறதும் சந்தேகம்தான். அது போயஸ் கார்டன்ல முடிவாகிற விஷயம். திமுக அதிமுகவுடனல்லாம் ஒட்டும் இல்ல பிட்டும் இல்லன்னு  சொல்ற திருமா,வைகோவ்லாம் நாளைக்கு  யாருடன்  கொடி கட்டுவாங்க,.கம்யூ.கட்சியெல்லாம் எந்த ஜீப்பில் ஏறும்கிறதெல்லாம் மாதாஜி கையில இருக்கு.

ரே கமிசன்னு ஒன்னு தீர்ப்பு சொன்னுச்சே அதையே மறந்தவங்க பெங்களூரு பத்தியா கவலைப்படுவாங்க.

இப்ப கோர்ட்டுக்கும் அரசுக்கும் அவ்வளவா ஆகல. கோர்ட்டு சொல்றதையெல்லாம் அரசு கண்டுக்கிறதில்ல.எல்லோரும் எல்மெட் போட்டுக்கிறதில்ல. பிளக்ஸ் றறபோர்டெல்லாம் சும்மா பொளக்குதுள்ள.போலீசும்  கண்டுக்கிறதில்ல..

என்னய்யா நடக்குது?

என்னமோ நடக்கிதுடா மாதவா!


கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...