சனி, 2 ஜனவரி, 2016

ஆத்தா... அப்பன் என்ன கதை சொன்னுச்சு?

கொன்னவாயன் மெதுவா  ஆத்தா பக்கமா  வந்து உக்காந்தான்.

அவனுக்கு ரொம்ப நாளாவே ஒரு சந்தேகம். ஆத்தாகிட்ட  எப்படி கேக்கிறதுன்னு டவுட்டு. கோவத்துல  சில நேரம்  செவுலு  பேந்திர மாதிரி  அறை விட்ருவா செவனம்மா! சில நேரம்  'பயபுள்ள எம்புட்டு அறிவா கேக்கிதுன்னு' சிலித்துக்கிருவா! அவ மூடு எப்படியிருக்குன்னு அஞ்சு வயசு  கொன்ன வாயனுக்கு எப்படி தெரியும்.? பய நல்லாத்தான் பேசுவான். மந்திரம் பயலுக்கும் செவனம்மாவுக்கும்  கல்யாணமாகி ஏழு வருசமாகி  கொடி சுத்தி பொறந்த பயதான் கொன்னவாயன். நல்ல வேளை.தாய்மாமன்  இல்ல. செல்லப்பிள்ளை. அதனால அப்பனும் ஆத்தாளும் அவனை அப்படி கொஞ்சி வளத்தாக .அந்த பேரே நெலச்சுப்போச்சு!

செவனம்மாளுக்கு டவுட்டு. என்ன பய நெளியிறான்னு! வாங்கித் தின்ன  காசு கீசு கேக்குமோ? சரி எதுவா இருந்தா என்ன அவன் வாயாலேயே கேக்கட்டுமே!

'ஆத்தா?'ன்னான்.

'என்னப்பு?'- பாந்தமாதான் இவளும் கேட்கிறா!

'ராவானதும் ரொம்ப நேரமா உங்கிட்ட அப்பன் குசுகுசுன்னு கத சொல்லுதே? அந்த கதய எனக்கும் சொல்லேன்."

"பயபுள்ள... ராவானதும் தூங்குதுன்னுல்ல நெனச்சிக்கிட்டிருந்தோம்.எம்பிட்டு நேரம் தூங்காம கெடந்துச்சோ! வெவரம் கெட்ட  மந்திரம் தொட்டதுமே  நமக்கு மந்திருச்சு விட்டமாதிரி ஆகிப்போகுதுன்னு"  செவனம்மாவுக்கும் கொஞ்சம் வெக்கம்தான்..பயலை எப்பிடியாவது  சமாளிச்சி ஆகணுமே?

''சொந்தக்கததேன்! சோகந்தேன்.. ஒங்கப்பனுக்கு கண்ணு சாலேஸ்வரம்..
சரியா பாக்கமுடியாதுல்ல!"

மகன் 'ம்' கொட்டுறான்.

"அதனால  மருதைக்கு போயி டாக்டரை பாத்துச்சாம். அந்த கதயைதான்  தெனக்கிம் சொல்லி மனச  ஆத்திக்கும்,அப்பனுக்கு இந்த  ஆத்தாள விட்டா  வேற யாருப்பு  இருக்கா?  "

'இம்பிட்டு சுருக்கா சொன்ன கதயவா  அப்பன் கொள்ளநேரமா  சொல்லும்?சிரிக்குமே"" பய செவனம்மா  பெத்ததாச்சே! வெவரமாத்தான் கேக்கிறான்.அவ சமாளிக்கிறா!

''இன்னும் முடிக்கலியேப்பு? டாக்டருகிட்ட அப்பன் கேட்டுச்சாம் நீங்க கொடுக்கிற கண்ணாடிய போட்டுக்கிட்டா  படிக்க வந்திருமான்னு! அந்த டாக்டரும்  நல்லாவே படிக்கமுடியும், ரொம்பவும் பவரான கண்ணாடி. எதுக்கு  சந்தேகப்படுறேன்னாராம்.அதுக்கு உங்கப்பன்  சத்தியமா எனக்கு படிக்கவே தெரியாது உங்க கண்ணாடிய போட்டுக்கிட்ட பெறகு படிக்கதெரிஞ்சா .அது போதும் சாமின்னுச்சாம்.உங்கப்பந்தான் பள்ளிக்கூடம் போனதில்லியே ..அத நெனச்சுதான் சிரிக்கும்.நானும் சிரிச்சுக்குவேன்"னா!

பயபுள்ளைக்கு டவுட்டு கிளியராகளே !கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...