திங்கள், 29 பிப்ரவரி, 2016

வேணாம் வரி விலக்கு...தமிழ் சினிமாவுக்கு.!

மொழியை வளர்ப்பதற்கும் பண்பாட்டினை காப்பதற்கும் பயன்படாத  தமிழ் சினிமாவுக்கு வரி விலக்கு கொடுத்து மக்களின்  வரிப்பணத்தை வீணாக்கவேண்டுமா? தமிழில் பெயர் வைப்பதாலேயே  மொழி வளர்ந்து விடுமா? இதுவரை வரிவிலக்கு பெற்ற படங்களினால் எத்தனை அடிக்கு  தமிழ் வளர்ந்திருக்கிறது? சொல்ல முடியுமா? இன்றைக்கும் தமிழன் இன்னொரு தமிழனை  சந்திக்கிறபோது  ஹலோ  ஹவ் ஆர் யுன்னுதானே கேட்கிறான்?
என்ன ப்ரோ சவுக்கியமாங்கிறான்  இன்னொருத்தன்.

ஆங்கிலம்  வேணாம்னு சொல்லவில்லை.ஆங்கிலேயன்  சுட்ட வடு அது காலங்களையும் கடந்து நிற்கும்.ஆங்கிலத்தை  அவசியப் படுகிற இடத்தில் சொல்லுங்கள்னுதான் சொல்றேன்.

மனைவியை  கொஞ்சுகிறபோது கூட  'டார்லிங்..'தான்.! ஏன் பெயரை சொல்லி  'கண்ணம்மா..இன்னிக்கி முன்னை விட அழகா இருக்கேடி செல்லம்"னா  அவள் முத்தம் கொடுக்கமாட்டாளா? முகம் திருப்பிக்குவாளா?


பண்பாட்டை  எந்த அளவுக்கு காப்பாத்தியிருக்கு தமிழ் சினிமா? மார்பை  மறைக்க வேண்டிய  துப்பட்டா  கழுத்தை சுத்திப் போட்டுக்கொள்ளத்தானே பயன் படுகிறது? மார்பகம்  தெரிய  தைரியமாக  ஆடைகள்  அணிந்து தெருவில் வருவதற்கு இந்த சினிமாதானே  காரணம்,

கதாநாயகிக்கு உள்ளாடை  அளவுக்கு கால்சட்டையை கொடுத்து  குலுங்க குலுங்க  ஆடவிட்டால்தான் கல்லா நிறையும்னு கணக்குப் போடுகிற தமிழ் சினிமாவுக்கு  எதற்காக  வரி விலக்கு கொடுக்கணும்?

கொப்புளிக்கிற ரத்தத்தை காட்டக்கூடாதுன்னு தணிக்கை குழு சொல்வதினாலேயே  வன்முறை இல்லைன்னு  ஆகிடுமா? அப்படிப்பட்ட  சினிமாவை காட்டினால்தான் ரசிகன் வருகிறான். ரசனை அந்த அளவுக்கு  தாழ்ந்து  போயிருப்பதற்கு  சினிமாதான் காரணம்.

இன்றைய தமிழ் சினிமாவில் சண்டை காட்சிகள் ,நடிகைகளின்  கவர்ச்சி இல்லை என்றால் காசு பார்க்கமுடியாது என்கிற அளவுக்கு மாறிக்கிடக்கிறது.
தமிழனின் அடையாளமே மாறிக்கிடக்கிறபோது எதுக்கு வரி விலக்கு என்கிற பம்மாத்து? மெட்ராஸ் ஹைகோர்ட்  என்பதை  தமிழுக்கு  மாற்ற முடியாமல்  தவிக்கிறார்கள். முதலில்  எங்கெங்கு  தமிழ் இருக்க வேண்டுமோ அங்கெல்லாம் தமிழை உட்கார வையுங்கள். பிறகு பார்க்கலாம் !கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...