சனி, 12 மார்ச், 2016

அன்புள்ள கேப்டன் அவர்களுக்கு,

தே.மு.தி.க.வுடைய  முடிவினை  ஒரு வலியாக சொல்லி ..சாரி , ஒரு வழியாக  முடித்து விட்டீர்கள். பழம் கனிந்து வருகிறது விழும் என்று எதிர்பார்த்த  மூளைக்காரரையே  ஏமாற்றிவிட்டீர்கள், இந்த முடிவு இன்றைய முதல்வர்  ஜெ.வுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் என நம்பலாம். அவரது ஆட்சியை கடுமையாக விமர்சிப்பது போல விமர்சித்து விட்டு அவருக்கு  அணில் ராமனுக்கு  உதவியது போல உதவிய உங்க ராஜ தந்திரம் வேறு  யாருக்கு வரும்? சத்தியமாக நீங்கள்  உங்கள் குலசாமி கோவிலுக்குப் போய்  கிடா வெட்டி பொங்கல் வைக்கவேண்டும்.

இந்த முடிவு எடுப்பதற்கு உங்களுக்கு பெரிய  ஆதாயம்  கிடைத்திருக்கும். நான் பணத்தை சொல்லவில்லை. தனித்து  நிற்கும் முடிவினால் கூடுதல் தொகுதிகளில் பொட்டி ...சாரி ...வாய் வழுக்கி விட்டது. அதிக தொகுதி   கிடைக்குமே ! அதை சொன்னேன்.

கடந்த முறை கூட்டு சேர்ந்ததால் எதிர்க்கட்சி தலைவராகும் தகுதி கிடைத்தது.எட்டுப் பேர் கட்சி மாறினாலும் கடைசி வரை பதவியை அனுமதிக்க அந்தம்மாவின்  கருணை உதவியது. இம்முறை அமோக  வளர்ச்சி உங்க கட்சிக்கு, அதனால்  முதல்வர் அல்லது  துணை முதல்வர்  நீங்கள்தான். டில்லியிலும்  ஒரு எம்.பி .சீட்  உறுதி. உங்கள்  மைத்துனர்  சுதிஷ்தான் ராஜ்ய சபா மெம்பர்.எவனாவது  குடும்ப கட்சின்னு சொன்னால்  வாய் அழுகிடும். அப்படி சொன்னால்  ராமதாசை  கை காட்டிவிடுங்கள். ஒரு பய வாயை  திறக்க மாட்டான்.

எனக்கு ஒரு யோசனை.  வைகோவுடன்  கூட்டணி வைக்கலாமே!

நடந்தால் நல்லது.

இப்படிக்கு,
அபிமானமுள்ள
கொன்னவாயன்.
---------------------

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...