Monday, March 14, 2016

வலைப்பூ வாசிப்போர்களுக்கு...

சகோதரர்களே....
                     நானும்  எழுதித்தான் தள்ளுகிறேன். உங்களிடமிருந்து  எவ்வித ரியாக்ஷனையும்  பார்க்க முடியவில்லை.இதனால் தவறாக  எழுதுகிறோமோ  என்கிற  அச்சமும்  ஏற்படுகிறது.

ஆனாலும் நான் எழுதுவதை நிறுத்தப்போவதில்லை.எனது கருத்துகளை  பதிவு செய்வேன்.அண்மையில்  பாம்புகளுக்கு என்று  ஒரு கோவில் இருப்பதாக கேள்விப்பட்டேன். இதனால்தான்  வெளிநாட்டான் நம்மை பாம்பாட்டியாக சித்தரிக்கிறானோ என்கிற ஐயமும் ஏற்பட்டது..

அந்த கோவில் கேரளத்தில் இருக்கிறது. எனக்கு அந்த நாட்டின் மீது காதல்  இருக்கிறது. பாரதிக்கு இருக்கவில்லையா? அவன் படகோட்டி எனக்கு வழிகாட்டியாக  இருந்திருக்கிறான்,அதனால் பாரதி மீது நேசமும்  இருக்கிறது.

கேரளத்தை கடவுளின் தேசம் என்பார்கள்.பரசுராமன் அவனது கோடலியை  கடலில் வீசி சிவன் அருளால் கேரளத்தை அமைத்ததாக் சொல்வார்கள். அவன் சத்திரியர்களை கொன்ற பாவத்தை  கழுவுவதற்காக  அவன் பெற்ற அந்த நிலத்தின் பகுதியை பிராமணர்களுக்கு  கொடுக்க வேண்டுமாம்.ஏன் வேறு யாருக்கும் கொடுக்கக்கூடாதா  என்று குதர்க்கமுடன் கேட்கக்கூடாது.அது பாவம்.

கடவுள் கொடுத்த நிலமானது  உப்புத்தன்மையாக  இருந்ததால்  மனித வாழ்வுக்கு  தகுதியற்றதாகி  விட்டது. பிராமணர்கள் வேறு இடம் நோக்கி  நகர்ந்தனர். பரசுராமனுக்கு கவலை.

தானமாக கொடுத்த நிலம் இப்படி தகுதியற்றதாகிவிட்டதே என பரசுராமன் கவலைப்பட்டான். மறுபடியும் சிவனை நோக்கி தவமிருந்தான்.நாமெல்லாம் தலையை அறுத்து தவம் செய்தாலும் வராத சிவன் பரசுராமனுக்கு  காட்சி அளித்தான்.
'இப்போது என்ன பிரச்னை பரசுராமா?'

'நிலமெல்லாம் உவர்ப்பு நிலமாக இருக்கிறது. எப்படி வாழ முடியும்,பிரபோ!'

'கடலோரம் அமையப்பெற்ற  இந்த நிலத்திற்கு  நாகராஜாவின் அருள் வேண்டும் ,சர்ப்பங்களின் நச்சு நிலத்தில் பரவினால் நல்லவையாக  மாறும். போ, நாகராஜனை வழிபாடு. நோக்கம் நிறைவேறும்." என்கிறார் சிவன்.

அப்படி நாகராஜனின் அருள் பெற்றதுதான் மன்னார் சாலா.நிலத்தின் வெப்பம் தணிக்க தண்ணீர்  தெளித்ததால்  இதற்கு மண் ஆறிய சாலை என்றும் பெயர். இப்படியும் ஒரு கதை இருக்கிறது.

கிட்டத்தட்ட முப்பதாயிரம் பாம்பு சிற்பங்கள் இந்த கோவிலில் இருக்கிறது. பிரார்த்தனை நிறைவேறியவர்கள் வைத்தவைதான் அவைகள்.

செல்வமும் ஆரோக்கியமும் கிடைப்பதற்கு தங்கத்திலான பானையில் தங்க நாணயங்களை நிரப்பி வழிபடவேண்டும்.

உடல் நலமுடன் வாழ  உப்பு

நச்சு அணுகாமல் இருக்கியா மஞ்சள்.

குழந்தை பேறு பெற பித்தளை அல்லது தாமிரத்திலான பாத்திரம்.

இந்த ஆலயத்தின் பூசாரியாக திருமணம் ஆகாத பெண்கள்தான்  வழிவழியாக  இருக்கிறார்கள்.

இந்த ஆலயம் ஹரிபாட் அருகில் இருக்கிறது.


No comments:

ரஜினி முந்துவாரா கமல்ஹாசனை?

அதென்னவோ கடவுளை நம்புகிறவர்களுக்கு பலன் என்னவோ கை கால்  ஓய்ந்த பின்னர்தான் கிடைக்கிறது. பல பேருக்கு சொர்க்கத்தில் கிடைக்கும் என்பது நம்பி...