வலைப்பூ வாசிப்பாளர்களே,
தலைப்பூ தடுமாறச்செய்கிறதா? அச்சம் தேவையில்லை.கற்பனையை பண்டைய ரோமாபுரிக்கு திருப்புங்கள்.
அவை கூடியிருக்கிறது. குற்றவாளியாக அகாப்யா நிற்கிறான்.அவனது பெயருக்கு நல்ல மனது என பொருள்.
'இவன் செய்த குற்றம் என்ன?'
'கொலை பிரபோ!'
'கொலையா, யாரை கொன்றான்.?'
அகாப்யா இடை மறிக்கிறான்.' அதை நானே சொல்கிறேன் எஜமானே! அனுமதியுங்கள்."
'எனது ஆசைநாயகியுடன் அவன் காம சுகம் அனுபவித்தான். அவள் மூலம் குழந்தை பெறுவதற்கு முயற்சித்தான். அதனால் அவனைக் கொன்றேன். இது நமது நாட்டில் குற்றமா?'
"இல்லை அகாப்யா.. இல்லவே ..இல்லை. அப்படி பிறக்கிற குழந்தைகளுக்கு இங்கு குடியுரிமை இல்லை என்பது தெரிந்தும் அவன் உனது காமக்கிழத்தியுடன் சுகித்திருக்கிறான் என்றால் அவன் கொல்லப்பட வேண்டியவனே!.நீ கொலை செய்தது சரியே!"
என்ன தீர்ப்பு தலை சுற்ற வைக்கிறதா?
பண்டைய ரோமாபுரியில் இப்படி ஒரு சட்டம் இருந்திருக்கிறது.
மனைவியைத் தவிர ஆணுக்கு ஆசைநாயகிகள் வைத்துக் கொள்ள அனுமதி உண்டு..இதற்கு காரணமும் உண்டு, வறிய நிலையில் உள்ள பெண்களுக்கு மணமகன்கள் கிடைப்பதில்லை. அதனால் அத்தகைய பெண்கள் வைப்பாட்டிகளாக வாழ நேர்ந்தது. இது ஒரு வித ஆணாதிக்கம் என்றாலும் அதையும் பெருமையாக கருதினார்கள் அத்தகைய பெண்களின் சமாதியில் இவள் ஆசை நாயகி என குறிப்பிட்டார்கள்.
ஆணாதிக்கம் யுகம் யுகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறது.இதிகாசத்திலும் இருக்கிறது.இலக்கியத்திலும் இருக்கிறது.சரித்திரத்திலும் இருக்கிறது.
முதல் படம் சாலமன் மன்னனும் மனைவிகளும்.இவனுக்கு ஆயிரம் மனைவிகள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக